எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 21 ஏப்ரல், 2021

கட்டுமானங்கள். மை க்ளிக்ஸ். ARCHITEXTURE . MY CLICKS.

கட்டுமானங்கள். மை க்ளிக்ஸ். ARCHITEXTURE . MY CLICKS.

கட்டுமானங்கள். மை க்ளிக்ஸ். 

திருச்சி ரயில்வே ஸ்டேஷன். ! அண்டர்க்ரவுண்ட் டனல் ஒவ்வொரு ப்ளாட்ஃபார்முக்கும் செல்ல அமைக்கப்பட்டுள்ளது. 

ஊனையூர்க் ( முத்து வெள்ளைச் சாத்தையனார் ) கோவிலின் விதானம். முழுக்க முழுக்கக் கல்பாவியது. எப்படித்தான் இப்படி நீளக் கற்களை வெட்டி ஒட்டி விதானம் சமைத்தார்களோ !  

கும்பகோணம் கரும்பாயிரம் பிள்ளையார் கோவில் கல் சாளரங்கள். !

கண்டனூரில் ஒரு வீட்டில் தரையில் பதிக்கப்பட்டிருந்த கற்கள் வித்யாசம். 


திருஞான சம்பந்தர் தோடுடைய செவியன் பாடிய திருத்தலம். அதே ஊருணி. 

சிவனடியே சிந்திக்குந் திருப்பெருகு சிவஞானம் பவமதனை யறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம் 

உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞானம் தவமுதல்வர் சம்பந்தர்தாம் உணர்ந்தார் அந்நிலையில். 


சீர்காழி முத்துச்சட்டைநாதர் கோவில். மூன்றடுக்குக் கருவறை. 

பூம்புகார் கலங்கரை விளக்கம். பூம்புகார் டவர்.

கோவிந்தபுரம் கோவில். மிக அழகான வடிவமைப்பு. 

வடநாட்டுப் பாணியில் கோபுரம். 

வடநாட்டுப் பாணியில் நுழைவாயில். மிகப் பிரம்மாண்டம். 

முழுமையா இதிலே பாருங்க. !

காரைக்குடியில் ஆவுடையான் செட்டியார் வீடு. ( மூன்றடுக்கு உடையது ) 

அவ்வீட்டின் பக்கத்திலே உள்ள குறட்டியார் வீடு. மீனாட்சி திருமணம் நிலை வாயிலில். பிரம்மா மந்திரம் ஓத விஷ்ணு கைபிடித்துக் கொடுக்க சிவன் பார்வதியை மணக்கும் திருக்கோலம். தேவதேவதைகள் பூச்சொரிகின்றார்கள். பக்கங்களில் பணிப்பெண்டிரும் அகத்தியரும் நாரதரும். !

அவ்வீட்டின் உப்பரிகை ! 

நடுநாயகமாக லெக்ஷ்மி உறைகிறார் எல்லா இல்லங்களிலும். சுற்றிலும் காவல் மகளிரும் பணிப்பெண்டிரும். ( உபதேவதைகள் ! ). கீழே சிம்மங்கள் உறுமி நிற்க ஆங்கிலேய வீரரும் காவல் இருக்கிறார் !

1 கருத்து:

  1. திண்டுக்கல் தனபாலன்11 செப்டம்பர், 2020 ’அன்று’ முற்பகல் 11:26
    அருமை... அருமை...

    பதிலளிநீக்கு

    Yarlpavanan11 செப்டம்பர், 2020 ’அன்று’ பிற்பகல் 12:52
    படங்களுடன் சிறப்பான பதிவு

    பதிலளிநீக்கு

    middleclassmadhavi12 செப்டம்பர், 2020 ’அன்று’ முற்பகல் 7:16
    அருமையான பொக்கிஷப் படங்கள்!! வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு

    Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University12 செப்டம்பர், 2020 ’அன்று’ முற்பகல் 11:32
    பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட, அருமையான புகைப்படத் தொகுப்பு. சிறப்பாக உள்ளது. கரும்பாயிரம் பிள்ளையார் கோயில் சில வருடங்களுக்கு முன்பு மாற்றம் கண்டதாகும். முன்பிருந்த கோயில் மிகவும் சிறியது. அக்கோயிலையொட்டியுள்ள தெருவில் எங்கள் நண்பரின் இல்லம் இருந்தது. பள்ளி நாள்களில் சுற்றிக்கொண்டிருக்கும் இடங்களில் ஒன்று இந்த பகுதி. இதனைப் பார்த்ததும் இளமைக்கால நினைவுகள் வந்து அலைமோதின.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan12 அக்டோபர், 2020 ’அன்று’ பிற்பகல் 11:40
    நன்றி டிடிசகோ

    நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    நன்றி மாதவி

    நன்றி ஜம்பு சார். :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...