செவ்வாய், 27 ஏப்ரல், 2021

தஞ்சைப் பெருவுடையார் கோவில். மை க்ளிக்ஸ். TANJORE BIG TEMPLE. MY CLICKS.

தஞ்சைப் பெருவுடையார் கோவில். மை க்ளிக்ஸ். TANJORE BIG TEMPLE. MY CLICKS.

 தஞ்சைப் பெரிய கோவில் பற்றியும் மன்னன் ராஜராஜசோழனின் பராக்கிரமம்  பற்றியும் முன்பே எழுதி இருக்கிறேன். நவராத்திரி சமயம். இது இப்போது கும்பாபிஷேகம் நடந்ததும் சென்று எடுத்தபுகைப்படங்கள். கோயில் பளிச்சென்று புத்துணர்ச்சியோடு இருக்கிறது. 

சிவகங்கைப் பூங்கா, அரண்மனை எல்லாம் இதன் பக்கம்தான். இந்தக் கோயில் ஒரு கோட்டைக்குள் அமைந்திருப்பது போல அரண் சூழ அமைந்துள்ளது. சுற்றிலும் அகழி மற்றும் ட்ரபீசிய வடிவ காவலர்தூண் கொண்ட மதில்கள். 

இங்கு வாயிற்காவலர்கள் மிகப் பிரம்மாண்டம் மற்றும் மிரட்சியூட்டும் உருவத்தில் இருக்கிறார்கள். முந்தி முந்தி விநாயகன் மேலே அருள் பாலிக்கிறான். 
எத்தனையோ மைல்கள் தூரத்திலிருந்து எடுத்து வந்து வைத்துக் கட்டப்பட்ட கற்கள் கொண்ட கருவறை விமானம். மேலும் அதன் உச்சி ஒரே கல்லால் ஆனது. அதன்நிழல் பூமியில்விழாமல் விமானத்தின் மேலேயே விழும்படி சதுரமாகக் கட்டப்பட்டுள்ளது வெகு சிறப்பு. 
சோழனும் கல்லிலே கலைவண்ணம் கண்டிருக்கிறான். !!!
அம்மாடியோவ் உள்ளே நடந்து நடந்து ( ஒரு பிரகாரம்தான்வந்தோம். ) கால் வலித்துவிட்டது. நந்தியிலிருந்து லிங்கம் வரை அனைத்துமே பிரம்மாண்டம். 
வெளிக் கோபுரம் உள் கோபுரம். அதன் பின் கருவறை விமானம். இங்கே ஒரு அம்மன் சந்நிதி. பிரகாரத்தில் முன்னேயே ஒரு சனீஸ்வரர் சந்நிதியும் இருக்கு. 


கருவறையில் பிரகதீஸ்வரார். பெருவுடையார்.
தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் இதுவும் ஒன்று. 
தூரத்திலேயே தரிசித்து விபூதி பெற்று வந்தோம். 

நடுவில் உள்ள 3  நிலைக் கோபுரம் உட்பக்கமாக. 

அம்மன் சந்நிதி மண்டபம். 


மிரட்டும் துவாரபாலகர்கள். !! வித்யாசமான திருவாச்சி அமைப்புக்ள். வீரர்கள், பணிப்பெண்கள், நடனப் பெண்கள், காளி, விடையேறுபாகன் இன்னும் பல தெய்வத் திரு உருவங்கள். 


இங்கும் துவாரபாலகர்கள், கோபுரம் தாங்கும் வீரர்கள், நான்முகன் , பிச்சாடனர்,ஊர்த்துவ தாண்டவர், கால பைரவர், சிவகணங்கள்,  விஷ்ணு லெக்ஷ்மி, யாளிகள், திருவாச்சிகள், தங்கக்கூரை வேய்ந்தது போன்ற கோபுர அமைப்புகள் எனப் படு மிரட்டலாக இருக்கின்றது இந்தக் கோபுர அமைப்பு. 

தஞ்சைப் பெரிய கோவில்( புகழ் )பல்லாண்டு வாழ்கவே. !!!

1 கருத்து:

 1. வெங்கட் நாகராஜ்25 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 2:10
  நல்லதொரு கோவில். படங்களும் நன்று.

  பதிலளிநீக்கு

  ஸ்ரீராம்.25 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 3:08
  மீண்டும் தஞ்சையில் இருக்கும் உணர்வு.

  பதிலளிநீக்கு

  துரை செல்வராஜூ25 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 10:41
  தஞ்சை பெரிய கோயிலைப் பற்றி எழுதியிருப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சி..

  பதிலளிநீக்கு

  Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University26 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 7:16
  பார்த்துக்கொண்டே இருக்கலாம். எழுதிக்கொண்டே இருக்கலாம். ரசித்துக்கொண்டே இருக்கலாம். பிரமிப்பைத் தரும் கோயில்.

  பதிலளிநீக்கு

  Thenammai Lakshmanan24 மார்ச், 2021 ’அன்று’ பிற்பகல் 10:51
  நன்றி வெங்கட் சகோ

  நன்றி ஸ்ரீராம் :)

  நன்றி துரை செல்வராஜு சார்

  நன்றி ஜம்பு சார்.நூறு சதம் நீங்கள் சொல்வது உண்மைதான்.

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

ரயில்வே ஸ்டேஷன்- 2 மை க்ளிக்ஸ். RAILWAY STATION - 2. MY CLICKS.

 ரயில்வே ஸ்டேஷன்- 2 மை க்ளிக்ஸ். RAILWAY STATION - 2. MY CLICKS. பயணங்களில் எனக்கு மிகப் பிடித்தது ரயில் பயணமே. அதிலும் தென்னிந்திய ரயில்வேத...