தஞ்சாவூரில் உள்ள வேதாஸ் ஸ்டே ஹோட்டலில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தோம்.கொரோனாவின் கழிமுகப் பகுதியில் தஞ்சை சென்றபோது மிக அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட தெருவில் அமைந்திருக்கும் இந்த ஹோட்டலில் தங்க சிறிது யோசனைதான். கார் பார்க்கிங் வேறு இல்லை. இருந்தும் ஹோட்டலும் அறைகளும் வசதியுடன் இருந்தன.
ரூம் க்ளீனிங் செய்யச் சொன்னால்தான் செய்கிறார்கள்.
மற்றபடி நல்ல படுக்கை, இருக்கை, கழிவறை வசதிகள், டர்க்கி டவல்.
தண்ணீர் ஜக், ஹாட் ஜக் கண்ணாடிக் கோப்பைகள், ட்ரெஸ்ஸிங் டேபிள். வார்ட்ரோப் அதனுள்ளே லாக்கரும் உண்டு.
வாஷ்பேஸின் மற்றும் பாத்ரூம் சுத்தம்.
காலையில் குளிக்க பக்கெட் பக்கெட்டாக ஒரு டாங்கைக் காலி செய்தபின்தான் வெந்நீர் வருகிறது.
ஏஸி என்பதால் கம்பிளி.
வைஃபை எல்லாம் இல்லை. ஆனால் புத்தகம் படிக்கத் தோதான லைட்டிங்.
டிவி உண்டு ஆனால் கேபிள்/டிஷ் கனெக்ஷன் இல்லை.
வெனிஷியன் ப்ளைண்ட்ஸ் & ஏஸி. கட்டில் மேலே ஏதோ ஒரு இருவண்ண ஓவியம்.

இதோ அந்த நம்பர் லாக் லாக்கர். சேலம் கற்பகம் பேர்ல் ஓட்டலுக்குப் பிறகு இங்கேதான் லாக்கரைப் பார்க்கிறேன்.
வழக்கம்போல் வரவேற்பறையில் விநாயகர்.
லவுஞ்சில் இதுதான் அந்த விநோத ஓவியம்.
வழக்கம்போல் வரவேற்பறையில் விநாயகர்.
லவுஞ்சில் இதுதான் அந்த விநோத ஓவியம்.
சாப்பாடு டிஃபன் காஃபி எல்லாம் ரூம் சர்வீஸ் பாயை இண்டர்காமில் அழைத்தால் வெளியிலிருந்து வாங்கிக் கொடுப்பார். நோ பஃபே. முகப்பில் இருக்கும் புத்தர் சொல்கிறார் ஆசை அறுமின் என்று. ஒருவேளை உணவைக்கூட அறுக்க முடியவில்லை நாமெல்லாம் எங்கே உய்வு பெறுவது :)
இந்த ஹோட்டலுக்கு எனது ரேட்டிங் - மூன்று ஸ்டார்
***
வெங்கட் நாகராஜ்19 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 9:46
பதிலளிநீக்குதங்குமிட அறிமுகம் நன்று. நன்றி.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan24 மார்ச், 2021 ’அன்று’ பிற்பகல் 10:44
நன்றி வெங்கட் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!