எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
இவள் புதியவள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இவள் புதியவள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 1 ஆகஸ்ட், 2026

நட்பு + காதல் = இல்லறம். தமிழ்ச்செல்வி நிக்கோலஸ்ராஜன்.

நட்பு + காதல் = இல்லறம். தமிழ்ச்செல்வி நிக்கோலஸ்ராஜன்.

வாழுங்கள் வாழ்கையை ..
உணருங்கள் அதன் அற்புதத்தை ..

நல்ல நட்பு காதலாக மாறி இன்று இனிமையான இல்லறம் .. எங்களுடைய நட்பு நம்ம பல்லவன் போக்குவரத்து கழகம் இதில் தான் ஆரம்பித்தது.இது தொடர்ந்து ஒரு ஒன்னரை வருடங்கள் நல்ல நடப்பு பயணித்தது...எனக்கு திருமண பேச்சு ஆரம்பித்த சமயத்தில் எங்களுக்குள் ஒரு மாற்றம் ...இதை ஒரு சந்தர்ப்பத்தில் இருவருமே பகிர்ந்து கொண்டோம் அப்போது எடுத்த முடிவு தான் எங்கள் திருமணம்...

திங்கள், 27 ஜூலை, 2026

காதலாகி கசிந்துருகி.. லலிதா முரளி..

காதலாகி கசிந்துருகி.. லலிதா முரளி..

காதலாகி கசிந்துருகி...................

நம்ம ஹீரோவை முதல் முதல்ல சந்திச்சது என் சித்தியின் வீட்டுலதான்............சித்தியின் குடும்ப நண்பர்ங்க என் கணவர்........ பார்த்தோம் பிடிச்சுது பழகினோம் அப்புறமென்ன அப்புறம் கல்யாணம்தான்..............அதிவேக நிகழ்வுங்க.......காதல் பண்ணவும் கல்யாணத்துக்கும் நடுல ஜஸ்ட் நாலே மாசம்தாங்க.... நோ ஃபைட்,நோ டூயட் நோ சேசிங்....... ஆனா அந்த நாலு மாசத்திலயும் ஒரே ரொமான்ஸ்தான்.....

வியாழன், 23 ஜூலை, 2026

ரூஃபினா ராஜின் செக்யூரிட்டி திருமணம்.

ரூஃபினா ராஜின் செக்யூரிட்டி திருமணம்.

ஒரு பெண்ணைப் பெற்றவர்களே அவளின் திருமணத்தைப் பற்றி பலவாறு சிந்திக்கையில் நான் இரண்டு பெண்களைப் பெற்றவள். மூத்த பெண்ணின் திருமணத்திற்கு தயார் ஆக நீண்ட காலம் இருந்தது. அவள் திருமணம் முடித்து திரும்பிப் பார்ப்பதற்குள் அடுத்த பெண் திருமணத்திற்கு தயாராக.
தங்கத்தில் செய்த முதலீடு அபாரமானது. சிறுக சிறுக நகைகள் சேர்த்து வைத்திருந்ததால் தங்கத்தின் இமய விலை என்னை மிரட்டவில்லை..

சனி, 11 ஜூலை, 2026

சீனாவில் வினோ(தம்). .. சம்மர் ஸ்பெஷல் பேட்டி..:))

சீனாவில் வினோ(தம்). .. சம்மர் ஸ்பெஷல் பேட்டி..:))



இந்த சம்மருக்கு இங்கே போகலாம் அங்கே போகலாம்னு ஆயிரத்தெட்டு ப்ளான் வச்சிருப்பீங்க ..எங்கே போகப் போறீங்க நீங்க எல்லாம். இந்த வருடம் கொஞ்சம் வித்யாசமான ஊரு ட்ரை பண்ணுங்க. ஜெயா டிவியில் ஸ்டார்ஸ் உங்களுடன் நிகழ்ச்சி நடத்தும் வினோ சுப்ரஜா இந்வருடம் சீனா போய் வந்து இருக்காங்க . அவங்க அனுபவத்தை இங்கே நம்ம இவள் புதியவள் வாசகர்களுக்காக சொல்றாங்க..ஆர்வமாயிட்டீங்கள்ல கேக்க...

செவ்வாய், 7 ஜூலை, 2026

ரஞ்சனா கிருஷ்ணனின் கல்யாண கலாட்டா. கீழே விழுந்த மாப்பிள்ளை..

ரஞ்சனா கிருஷ்ணனின் கல்யாண கலாட்டா. கீழே விழுந்த மாப்பிள்ளை..



தேனியிலிருந்து காஞ்சிபுரம் வந்தார்கள் மாப்பிள்ளை வீட்டினர். மிக நீண்ட பிரயாணத்தின் காரணமாய் மிகவும் சோர்வாகவே காணப்பட்டார் அவர். மண்டபத்தின் வாயில் படியேறும்போதே தடுக்கி விட்டது. என் தோழிகள் அனைவரும் ஏய் என்னப்பா இப்பவே அவர "பிளாட்" ஆக்கிட்ட என கிண்டல் அடிக்கத் தொடங்கினர்..

திங்கள், 29 ஜூன், 2026

ஈரோடு கதிர் அவர்களின் கொங்குநாட்டு பொங்கல் அனுபவம். இவள் புதியவளில்.

ஈரோடு கதிர் அவர்களின் கொங்குநாட்டு பொங்கல் அனுபவம். இவள் புதியவளில்.


இது ஈரோடு கதிர் அவர்களின் கொங்குநாட்டுப் பொங்கல் அனுபவம். :-

ஈரோட்டை சொந்த ஊராகக் கொண்ட கதிர் கிராமமும் வயலும் வயல் சார்ந்த வாழ்வை விரும்புவர். இயற்கையோடு இயைந்த பொங்கல் கொண்டாட்டாத்தையும் ., விவசாயிகளுக்கே உரித்தான மாட்டுப் பொங்கலையும் சிறப்பாகப் பகிர்ந்து உள்ளார். ”உழுதுண்டு செல்வாரே செல்வார் ,, மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்” என்பது இங்கு பொருத்தமாய் இருக்கிறது.

************************************************

கொங்குநாட்டுப் பொங்கல் அனுபவம்:-
******************************************************
அவை இப்போது போல் தொலைக்காட்சிகளையும், சினிமாவையும் தொங்கிக் கொண்டிருக்கும் சிறப்பு பண்டிகை தினங்கள் அல்ல. அப்போதெல்லாம் பொங்கல் பண்டிகையை குதூகலமாக வரவேற்க பல காரணங்கள் இருக்கும். முதல் காரணம் அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பின் உடனடியாக வரும் விடுமுறை வாரம். அதற்குப் பின் முழு ஆண்டுத்தேர்வுக்கான படிப்புகள் விறுவிறுப்பாக(!!!) தொடங்கிவிடும்.

சனி, 27 ஜூன், 2026

மீனா லெட்சுமணனின் கிராமத்துப் பொங்கல். இவள் புதியவளில்.

மீனா லெட்சுமணனின் கிராமத்துப் பொங்கல். இவள் புதியவளில்.


மீனா லெட்சுமணன் சென்னையைச் சேர்ந்தவர். ஈவண்ட் மேனேஜ்மெண்ட் செய்து வருகிறார். தன் தந்தையின் ஊரான திண்டிவனம் கிராமத்துக்கு பாட்டி வீட்டுக்குப் போனபோது கொண்டாடிய பொங்கலை உங்களோடு பகிர்ந்து கொள்கிறார்.

திங்கள், 2 ஆகஸ்ட், 2021

பலகாரம் பதினொண்ணு

 

பலகாரம் பதினொண்ணு

சமையலுக்காக ஒரு வலைத்தளம்  தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி வருகிறேன். அதன் ஐடி    http://thenoos.blogspot.in . இதை க்ளிக் செய்தால் எல்லாப்  பலகாரங்களின் படங்களையும் பார்க்கலாம். ஒவ்வொரு பலகாரத் தலைப்பின் கீழும் இணைப்புக் கொடுத்து இருக்கிறேன்.  செய்து பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.


1. இலை அடை :-
****************************

http://thenoos.blogspot.com/2010/09/ilai-adai.html
 

தேவையானவை :-
இட்லி அரிசி - 2 ஆழாக்கு
துருவிய தேங்காய் - 1 கப்
தூள் வெல்லம் - 1/2 கப்
உப்பு - 1 சிட்டிகை
வாழை இலை - 2
பலாச்சுளைத் துண்டுகள் - 1 கப் ( விருப்பப்பட்டால்)

செய்முறை :-
அரிசியை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும். நன்கு மசிய அரைக்கவும். உப்பு சேர்க்கவும். ஒரு காட்டன் துணியில் மாவை கொட்டிவைத்தால் அதிகப்படியான தண்ணீரை எடுத்து விடும். தேங்காயையும் வெல்லத்தையும் கலக்கவும். இலையை சம துண்டுகளாக வெட்டவும். இலையில் மாவை மெல்லிய தகடாக தட்டவும். அதில் தேங்காய் வெல்லக் கலவையை பரப்பவும். விருப்பப்பட்டால் பலாச்சுளைதுண்டுகளைத் தூவவும். ரெண்டாக மடித்து ஒட்டவும். ஆவியில் 15 நிமிடங்கள் வேகவைக்கவும். வாழை இலைகளை எடுத்துவிட்டு மாலைச் சிற்றுண்டியாகப் பரிமாறவும். ப்ளைன் இலை அடைக்கு வெறும் தேங்காய் மட்டும் தூவி செய்யவும். இதற்குத் தொட்டுக் கொள்ள கதம்பச் சட்னி நன்றாக இருக்கும்.

வெள்ளி, 1 ஜனவரி, 2021

பத்துவிதப் பொங்கல்.

பத்துவிதப் பொங்கல்..

பொங்கல்:-
*******************
1. சர்க்கரைப் பொங்கல்

2. அக்கார வடிசல்

3. கல்கண்டுப் பொங்கல்

4. பாற்சோறு.

 5. மாம்பழப் பொங்கல்

6. அன்னாசிப் பொங்கல்

7. வெண்பொங்கல்

8. தக்காளிப் பொங்கல்

9. காய்கறி வெள்ளைரவைப் பொங்கல்

10. கோதுமைரவைப் பொங்கல்.

யூ ட்யூப் சேனலில் 31 - 40 யூரோப் டூர் வீடியோக்கள்

யூ ட்யூப் சேனலில் 31 - 40 யூரோப் டூர் வீடியோக்கள்   நூல்பார்வைகள் பற்றிய வீடியோக்களோடு  பயணங்களில் (யூரோப் டூர்)  எடுத்த வீடியோக்களையும் என்...