எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 1 ஜனவரி, 2021

பத்துவிதப் பொங்கல்.

பத்துவிதப் பொங்கல்..

பொங்கல்:-
*******************
1. சர்க்கரைப் பொங்கல்

2. அக்கார வடிசல்

3. கல்கண்டுப் பொங்கல்

4. பாற்சோறு.

 5. மாம்பழப் பொங்கல்

6. அன்னாசிப் பொங்கல்

7. வெண்பொங்கல்

8. தக்காளிப் பொங்கல்

9. காய்கறி வெள்ளைரவைப் பொங்கல்

10. கோதுமைரவைப் பொங்கல்.
1. சர்க்கரைப் பொங்கல்:-
**********************************

தேவையானவை:-

பச்சரிசி - 1 கப்
வெல்லம் - 1 1/2 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 10
திராஷை - 10
பால் - 1/2 கப்
ஏலப்பொடி - 1 சிட்டிகை

செய்முறை:-
பச்சரிசி, பாசிப்பருப்பை களைந்து குக்கரில் 2 கப் தண்ணீரில் 2 விசில் சவுண்ட் வரும்வரை வேகவிடவும். இறக்கி பாலை சேர்த்து மசிக்கவும். வெல்லத்தை பாகு காச்சி வடிகட்டி பொங்கலில் ஊற்றி நன்கு கிளறவும். நெய்யில் முந்திரி திராஷையை வறுத்து ஏலப்பொடியை சேர்த்து பொங்கலில் கொட்டி கிளறி பரிமாறவும்.

2. அக்கார வடிசல்:-
*******************************

தேவையானவை:-
பச்சரிசி - 1 கப்
வெல்லம் - 1/2 கப்
பாசிப்பருப்பு - 1/2 கப்
கடலைப் பருப்பு - 1 கைப்பிடி
பால் - 6 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 15
திராஷை - 10.
பேரீச்சை - 2 ( விரும்பினால் சேர்க்கலாம்)
கிராம்பு - 2
பச்சைக் கற்பூரம் - 1 சிட்டிகை.
ஏலப்பொடி - 1 சிட்டிகை.

செய்முறை:-
பச்சரிசி, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பை களைந்து குக்கரில் பால் விட்டு 2 சவுண்ட் வேக விடவும். அல்லது அடி கனமான பாத்திரத்தில் நிதானமான தீயில் வேகவிடவும். நன்கு குழைய வெந்ததும் வெல்லத்தை கரைத்து வடிகட்டி ஊற்றவும். அதில் நெய்யில் முந்திரி, திராக்ஷையை வறுத்துப் போட்டு, ஏலக்காய்ப்பொடி., பச்சைக்கர்ப்பூரப் பொடி, பொடித்த கிராம்பு சேர்க்கவும். பேரீச்சையை நன்கு மசித்து சேர்க்கவும். நன்கு கிளறி பரிமாறவும்.

3. கல்கண்டுப் பொங்கல்:-
**************************************

தேவையானவை:-
பச்சரிசி - 1 கப்
கல்கண்டு பொடித்தது - 1 1/2 கப் அல்லது ஜீனி
பால் - 2 கப்
ஏலப்பொடி - 1 சிட்டிகை
நெய்/டால்டா - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 10

செய்முறை:-
பச்சரியை ஒரு வாணலியில் லேசாக வறுக்கவும். ஒரு டீஸ்பூன் பாசிப்பருப்பை சேர்க்கவும் . நன்கு களைந்து பால் 2 கப் தண்ணீர் 2 கப் சேர்த்து குக்கரில் 2 விசில் வேகவிடவும். வெந்தவுடன் நன்கு குழைத்து மசிக்கவும். அதில் ஜீனி /கல்கண்டுப் பொடி சேர்த்து மசிக்கவும். ஏலப்பொடி போட்டு நெய்யில் முந்திரி டால்டாவை வறுத்து போடவும். சூடாக பரிமாறவும்.

4. பாற்சோறு.:-
*************************

தேவையானவை :-
பச்சரிசி - 1 கப்
வெல்லம்+கருப்பட்டி - 2 கப்
தேங்காய் ஒரு மூடி - பல்லு பல்லாக நறுக்கவும்.
தண்ணீர் - 4 கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:-
அரிசியை களைந்து வைக்கவும். வெல்லம்+ கருப்பட்டியை தண்ணீரில் போட்டு சூடாக்கி நன்கு கரைத்து வடிகட்டவும். திரும்ப அதே அடிகனமான பாத்திரத்தில் வெல்லம் கருப்பட்டிப் பாகை ஊற்றி கொதிவந்ததும் அரிசியை போடவும். கிளறிக்கொண்டே இருக்கவும். முக்கால் பதம் வெந்ததும் தேங்காய் பல்லுகளை சேர்க்கவும். இறுகி வெந்து ஒட்டாமல் வந்தவுடன் நெய்யை சேர்த்து இறக்கவும். இது 2 நாளைக்கு கெடாது.

5. மாம்பழப் பொங்கல் :-
*************************************

தேவையானவை:-
பச்சரிசி - 1 கப்
வெல்லம் - 1 1/2 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
மில்க் மெயிட் - 2 டேபிள்ஸ்பூன்
மாம்பழக்கூழ் - 1 கப்
மாம்பழ எசன்ஸ் - 1/8 டீஸ்பூன்
பேரீச்சை - 2 மசித்தது
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 10
திராக்ஷை - 10
ஏலப்பொடி - 1 சிட்டிகை

செய்முறை:-
பச்சரிசி, பாசிப்பருப்பை களைந்து குக்கரில் 3 கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். இறக்கி வெல்லம் சேர்த்து கொஞ்சம் வேக விடவும். பின் அதில் மில்க் மெயிட் சேர்க்கவும். மாம்பக்கூழும் பேரீச்சையும் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். ஏலப்பொடி தூவி நெய்யில் முந்திரி திராக்ஷையை வறுத்துப் போடவும். மாம்பழ எசன்ஸ் சேர்த்து கிளறி சூடாக பரிமாறவும்.

6. அன்னாசிப் பொங்கல்:-
*************************************

தேவையானவை:-
பச்சரிசி - 1 கப்
வெல்லம் - 1 1/2 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
மில்க் க்ரீம்/ தேங்காய்ப் பால் - 2 டேபிள் ஸ்பூன்.
அன்னாசித் துண்டுகள் - 1 கப் மசிக்கவும்
அன்னாசி எசன்ஸ் - 1/8 டீஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 10
திராக்ஷை - 10
ஏலப்பொடி - 1 சிட்டிகை

செய்முறை:-
பச்சரிசி, பாசிப்பருப்பை நன்கு களைந்து குக்கரில் 3 கப் தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும். எடுத்து மசித்து வெல்லம் சேர்த்து வேகவிடவும். மில்க் க்ரீம்/ தேங்காய்ப் பால் அன்னாசித்துண்டுகள் சேர்த்து கிளறி இறக்கவும். அன்னாசி எசன்ஸ்., ஏலப்பொடி சேர்க்கவும். நெய்யில் முந்திரி திராக்ஷையை வறுத்துப் போட்டு நன்கு கிளறி பரிமாறவும். மிக ருசியான அன்னாசி பொங்கல் தயார்.

7. வெண்பொங்கல்:-
*****************************

தேவையானவை:-
பச்சரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - 1/2 கப்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 1
இஞ்சி - 1 இன்ச் துண்டு அரைக்கவும்.
நெய்/டால்டா - 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 10
கருவேப்பிலை - 1 இணுக்கு
உப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:-
பச்சரிசி, பாசிப்பருப்பை களைந்து இஞ்சி பேஸ்ட், பச்சைமிளகாய் கீறிப்போட்டு 4 கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் 2 சவுண்ட் வேகவிடவும். ஆறியதும் நன்கு மசித்து உப்பு சேர்க்கவும். நெய் அல்லது டால்டாவில் முந்திரி ,மிளகு, சீரகம், கருவேப்பிலை சேர்த்து பொறித்து பொங்கலில் கொட்டி கிளறி நன்கு சின்ன வெங்காய சாம்பாருடன் பரிமாறவும்.

8. தக்காளிப் பொங்கல்:-
******************************

தேவையானவை:-
பச்சரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - 1/2 கப்
பழுத்த தக்காளி - 3
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - 1 இஞ்ச் துண்டு
உப்பு - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
ஜீரகம் - 1 ஸ்பூன்
நெய்+ எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 10
கருவேப்பிலை - 1 இணுக்கு

செய்முறை:-
பச்சரிசி, பாசிப்பருப்பை நன்கு களைந்து குக்கரில் போட்டு பொடியாக அரிந்த தக்காளி, பச்சை மிளகாய் , இஞ்சி , மிளகு , ஜீரகம், உப்பு போட்டு 3 கப் தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும்வரை வேகவிடவும். வெந்தபின் இறக்கி நன்கு மசிக்கவும். அதில் நெய்+ எண்ணெயைக் காயவைத்து முந்திரி கருவேப்பிலை தாளித்து போடவும். சூடாக தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

9. காய்கறி வெள்ளை ரவைப் பொங்கல்:- *****************************************

தேவையானவை:-
வெள்ளை ரவை - 1 கப்
பாசிப்பருப்பு - 1/2 கப்
காய்கறிக் கலவை - 1 கப் ( பொடியாக அரிந்த காரட், பீன்ஸ், பட்டாணி)
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
இஞ்சி - 1 இன்ச் துண்டு
பச்சை மிளகாய் - 1
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 10
கருவேப்பிலை - 1 இணுக்கு

செய்முறை:-
வெள்ளை ரவையை தனியாக வாணலியில் வறுக்கவும். பாசிப்பருப்பை தனியாக வறுக்கவும். பாசிப்பருப்பை பதமாக வேகவிடவும். அது வெந்து வரும்போது 3 கப் தண்ணீர் ஊற்றி காய்கறி போட்டு அது கொதிக்கும்போது ரவையை தூவியவாறு கிளறவும் இதில் பச்சைமிளகாய் , இஞ்சி பொடியாக அரிந்து சேர்க்கவும். வெந்ததும் உப்பு சேர்த்து இறக்கவும். நெய்யை காயவைத்து முந்திரி, மிளகு, ஜீரகம் கருவேப்பிலை தாளித்து காய்கறி ரவைப்பொங்கலில் போட்டு நன்கு கிளறி தக்காளிச் சட்னியுடன் பரிமாறவும்.

10. கோதுமை ரவைப் பொங்கல்:-
*********************************

தேவையானவை:-
கோதுமை ரவை - 1 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
இஞ்சி - 1 இன்ச் துண்டு
பச்சை மிளகாய் - 1
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
நெய்+ எண்ணெய் - 1 டீஸ்பூன்
முந்திரி - 10
கருவேப்பிலை - 1 இணுக்கு.

செய்முறை:-
கோதுமை ரவையை ஒரு பானில் வறுக்கவும். பாசிப்பருப்பையும் வறுக்கவும். பாசிப்பருப்பை 2 கப் த்ண்ணீர் ஊற்றி வேக விடவும். அது பாதி வெந்தவுடன் இன்னும் 3 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கொதி வந்ததும் கோதுமை ரவையை போட்டு வேகவிடவும். அதில் பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக அரிந்து போடவும். நன்கு வெந்ததும் உப்பு சேர்த்து இறக்கவும். நெய்+எண்ணெயைக் காயவைத்து மிளகு சீரகம் முந்திரி கருவேப்பிலை தாளித்து பொங்கலில் கொட்டி கிளறி இறக்கவும். சாம்பாருடன் பரிமாறவும்

டிஸ்கி:- இந்தப் பத்துவிதப் பொங்கல் குறிப்புகளும் ஜனவரி 2012 இவள் புதியவள் பொங்கல் ஸ்பெஷலில் இடம் பெற்றன.

1 கருத்து:

  1. இராஜராஜேஸ்வரி13 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 10:06
    பத்து விதப்பொங்கலுடன் இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு

    Ravichandran M13 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:56
    இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

    DiaryAtoZ.com18 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 3:39
    நன்றி மனைவியிடம் தெரிவிக்கிறேன்

    பதிலளிநீக்கு

    மாதேவி22 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:31
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan4 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 1:11
    நன்றி ராஜி

    நன்றி கிருஷ்ணா

    நன்றி டைரி

    நன்றி மாதேவி

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan4 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 1:11
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

    கவியாழி4 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 2:52
    பத்தும் முத்துக்கள் .சாதனை சமையலை சாப்பிட்டாத்தானே சொல்ல முடியும்

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan5 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 12:24
    நிச்சயமா. கவியாழி கண்ணதாசன்.செய்து சாப்பிட்டுப் பார்த்துச் சொல்லுங்க.

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...