எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 6 ஜனவரி, 2021

இன்னும் கொஞ்சம் இன்னெழில் கொஞ்சும் கேரளா.

இன்னும் கொஞ்சம் இன்னெழில் கொஞ்சும் கேரளா.

திருவனந்தபுரத்தில் முதன் முதல் சென்ற கோயில் பத்மநாபசாமி கோயில் . அதன்பின் பெண்களின் சபரிமலை என்று சொல்லக்கூடிய ஆற்றுக்கால் பகவதி அம்மன் ஆலயம்.

இதன் முகப்பு மிக அழகு. பெண்கள் தீபம் ஏற்றும் காட்சியும் அதன் மேங்கோப்பும்.



கோவளம் பீச் வெளிநாட்டினர் உலாவும் இடம். ஒரே பீர் மயம். அலையும் கடைகளும் அடுத்தடுத்து இருக்கிறது. இஷ்டப்பட்டதை ஆர்டர் செய்து சுடச் சுட வாங்கி சாப்பிடலாம். விலை எல்லாம் ஆனை விலை, குதுர விலை. :)

இது ஆலப்புழாவில் உள்ள வள்ளம். இங்கேயிருந்து வள்ளத்தில் குமரகம் செல்லாம். பஸ்ஸில் சென்றால் சீப்.:)

இது குமரகம். கடவுளின் தேசம். ஆலப்புழாவில் உள்ள ஃபேமஸ் போட் ஹவுஸ்கள் இருக்கும் இடம். நாள் வாடகைக்கும் எடுக்கலாம்.  2 மணி நேரத்துக்கு வாடகை 1000 ரூபாய். போட் ஹவுஸுக்கு அல்ல.. 6  பேர் செல்லக்கூடிய போட்டுக்கு. இருவர் சென்றாலும்  அதேதான்.

அங்கே உள்ள ரெஸ்ட் ஹவுஸில் வெளிநாட்டுத் தம்பதியினர் அமர்ந்திருக்கும் காட்சி,



இது கொச்சு வெளி பீச்சில் செல்லும் வழியில்  வெங்காயத்தாமரையால்  நிறைந்த ஏரி.

இது வெங்காயத்தாமரையின் பூ.

1 கருத்து:

  1. 'பரிவை' சே.குமார்29 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 8:15
    கேரளா - படங்கள் அருமை....

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan3 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:38
    நன்றி குமார்.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan3 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:39
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...