எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 3 ஜனவரி, 2021

கொள்ளை கொள்ளும் கேரள வீடுகள்.

கொள்ளை கொள்ளும் கேரள வீடுகள்.

சில மாதங்களுக்கு முன்பு கேரளா செல்ல நேர்ந்தது. அங்கே நான் வியந்தது வீடுகள்.. நதிக்கரையோரம் அழகழகான வீடுகள்.. யப்பா.. சம்பாதித்த காசை எல்லாம் கொட்டிக் கட்டி இருக்கிறார்கள். கேரள வீடுகள் அதிகமாய் மர வேலைப்பாடுகள் கொண்டவை.

மிகுந்த அழகுணர்ச்சியோடு வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.மழைக்காக படுதாக்களும் அமைக்கப்பட்டுள்ளன.சுற்றிலும் தென்னை மரங்கள் அழகூட்டுகின்றன. பலா, தென்னை, வாழை இல்லாத வீடுகளைப் பார்ப்பது அரிது.

நேர்த்தியாகக் கட்டப்பட்டது மட்டுமல்ல. மிகுந்த கலை நயத்தோடும் அலங்கரித்திருக்கிறார்கள். கம்பளம் கூட வாசலில் பச்சைக் கம்பளம். ஒரே பசுமை.

தோட்டங்களைப் பராமரிப்பதும் தொட்டிச் செடிகளைப் பராமரிப்பதும் அவர்களுக்கும் பிடித்தமான ஒன்று.

தோட்டத்தில் இருக்கும் பூக்களோடு நூற்றுக் கணக்கில் தொட்டிச் செடிகளையும் வளர்க்கிறார்கள்.

 இயற்கையின் காதலர்கள் இவர்கள் எனச் சொன்னால் மிகையாகாது.

வீட்டைச் சுற்றிலும் மட்டுமல்ல. தொட்டிகளிலும் பால்கனியிலும் தட்டில் தொட்டிகள் வைத்துச் செடிகள் வளர்க்கிறார்கள்.

எளிமையும் அழகும் கொண்ட டைனிங் டேபிள்.

இன்னொரு டைனிங் டேபிள் சாப்பாட்டு வகையறாக்களுடன். 

மாடிப்படிகளிலும் அலங்காரப் பொருட்கள். பூக்கள், பொம்மைகள்,

அழகான ஷாண்ட்லியர்கள்.


குளிர் , மழை, வெய்யில் என எல்லா சீசன்களிலும் தாக்குப் பிடிக்கும் மர வேலைப்பாடு கொண்ட சுவர்கள். 

அரண்மனையைப் போன்ற பிரம்மாண்டமான வீடுகள். நுண்ணிய வேலைப்பாடுகள்.

இது பத்மநாப சுவாமி கோயிலின் அருகில் உள்ள ஒரு வீடு. அப்பப்பா.. கண் கொள்ளாத அழகுகளைப் பார்த்துப் பிரமித்து புகைப்படம் எடுத்து வந்தேன்.

1 கருத்து:

  1. Asiya Omar16 மே, 2013 ’அன்று’ முற்பகல் 10:12
    மிக அழகான பகிர்வு.ஓவ்வொரு முறை திருவனந்த புரம் ஏர்போர்ட்டிற்கு போகும்,வரும் பொழுது நான் பார்த்து வியப்பவை.

    பதிலளிநீக்கு

    ஸாதிகா16 மே, 2013 ’அன்று’ முற்பகல் 10:14
    உண்மையில் ரொம்பவே அழகுதான் தேனு.மிகவும் ரசித்தேன்.

    எல்லா சீசன்களிலும் தாக்குப் பிடிக்கும் மர வேலைப்பாடு கொண்ட சுவர்கள் கொண்ட அறை..அப்பா...கொள்ளை அழகு.

    பதிலளிநீக்கு

    A. Manavalan16 மே, 2013 ’அன்று’ முற்பகல் 10:46
    Good report about the houses seen by you.

    பதிலளிநீக்கு

    திண்டுக்கல் தனபாலன்16 மே, 2013 ’அன்று’ முற்பகல் 11:48
    அழகு... அருமை...

    பதிலளிநீக்கு

    கீதமஞ்சரி17 மே, 2013 ’அன்று’ முற்பகல் 5:46
    கேரள வீடுகள் அழகு. வீடும் தோட்டமுமாய் இயற்கை சூழ்ந்த வாழ்வு அது. அழகான படங்களின் பகிர்வுக்கு நன்றி தோழி.

    பதிலளிநீக்கு

    kalaikumar17 மே, 2013 ’அன்று’ முற்பகல் 11:03
    கேரள வீடுகள் அழகு. வீடும் தோட்டமுமாய் இயற்கை சூழ்ந்த வாழ்வு அது. அழகான படங்களின் பகிர்வுக்கு நன்றி தோழி. நன்றி, வணக்கம், வாழ்த்துக்கள்!.
    " இனிய தமிழால் இணைவோம் "
    " இயற்கையை பராமரிப்போம் "
    " இல்லார் , இயலாரை பாதுகாப்போம் "
    " வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் "

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan7 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 6:23
    நன்றி ஆசியா

    நன்றி ஸாதிகா

    நன்றி மணவாளன்

    நன்றி தனபாலன்

    நன்றி கீத மஞ்சரி

    நன்றி கலைக்குமார்.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan7 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 6:24
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...