எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 22 ஜனவரி, 2021

கழிவுநீரிலும் உயிர்க்கும் கல்வாழைகள்.

கழிவுநீரிலும் உயிர்க்கும் கல்வாழைகள்.

கல்வாழைப்பூக்கள் காரைக்குடியிலும் பார்க்கலாம். இது நான் லால்பாக் சென்றிருந்த போது எடுத்தது.

எந்தச்சூழ்நிலையிலும் சிறிதளவே தண்ணீரில் வளர்ந்து பூக்கும் தன்மையுடையது கல்வாழைச்செடிதான். கழிவு நீரைக்கூட சுத்திகரிக்குமாம் இந்தச் செடி. சோப்பு நீரைக்கூட சுத்தம் செய்யுமாம்,.


கழிவு நீர் வரும் பாதையில் தொட்டி அமைத்து இதை வளர்த்தால் அது கழிவு நீரை சுத்தமாக்கி விடுமாம். அதன்பின் மற்ற செடிகளுக்கு அவை சென்றால் பாதிப்பு இல்லை என்கிறார்கள்.


வீட்டின் முன்புறங்களை அழகுபடுத்த நாம் பயன்படுத்துவது போல லால்பாகிலும் கல்வாழைப்பூக்களை கிழக்கு வாயிலில் நீளமாக அடர்த்தியாக வளர்த்து அழகூட்டி இருக்கிறார்கள்.

இது அலங்காரத் தாவரம் என்றும் அழைக்கப்படுது.

மஞ்சள் கிழங்கு இலை போல வந்தாலும் இது இஞ்சிக் குடும்பத்தைச் சார்ந்ததாம். 

மெயினா நாலு கலர்தான் கண்ணுல தட்டுப்பட்டுது. அதையே எடுத்து வந்தேன். ப்ரிக் ரெட், லைட் ரோஸ் காம்பினேஷன், ஆரஞ்ச் பார்டர் போட்டது , யெல்லோ .

அலங்காரக் கல்வாழைகளை வீட்டிலும் வளர்த்துப் பயன்பெறுவோம். :) தோட்டத்தை வளப்படுத்துவோம். நீர் சிக்கனத்தோடு நல்ல காய்கறியும் பெறுவோம். :)

டிஸ்கி:- இவற்றையும் பெங்களூருவில் பாருங்க.

1.  மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.

2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள். 

4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1

5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2

6. மஞ்சள் முகமே வருக. (LAL BAGH )

7. குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.

8. இன்னும் சில ஒற்றையர்கள் பாகம் 3

9.  காதல் ரோஜாவே. -- பாகம் 4

10. காதல் ரோஜாவே..-- பாகம் 5

11. கோடையைக் குளுமையாக்கும் ஒரு கூடைப் பூக்கள்.

12. கழிவுநீரிலும் உயிர்க்கும் கல்வாழைகள்.

13. பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின் வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை.

14. பணம் கொழிக்கும் பனசங்கரி – சாகம்பரி.

15. என் தோட்டத்தில் எத்தனை ரோஜா. இருவர்

1 கருத்து:

  1. வை.கோபாலகிருஷ்ணன்29 மே, 2015 ’அன்று’ பிற்பகல் 7:18
    கல்வாழை பற்றிய அழகான படங்களும், அவற்றின் பயன்கள் பற்றிய அற்புதமாக செய்திகளும் இந்தப்பதிவின் மூலம் அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan29 மே, 2015 ’அன்று’ பிற்பகல் 9:21
    உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி கோபால் சார். தொடர்ந்து எனக்குப் பின்னூட்டமிட்டு ஊக்கமளித்து வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி.


    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan29 மே, 2015 ’அன்று’ பிற்பகல் 9:21
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

    திண்டுக்கல் தனபாலன்30 மே, 2015 ’அன்று’ முற்பகல் 7:52
    கல்வாழை பற்றிய பயன்களை அறிந்தேன்... நன்றி சகோ...

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan31 மே, 2015 ’அன்று’ பிற்பகல் 10:06
    நன்றி டிடி சகோ.

    பதிலளிநீக்கு

    Thulasidharan V Thillaiakathu3 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 11:06
    கல்வாழை பல நல்ல உபயோகங்கள் கொண்டது...இந்தப் பயனும் இப்போது அடிஷனல்....மலர்கள் எல்லாம் என்ன அழகு?!!!!! மனதைக் கொள்ளைக் கொள்ளுகின்றன...பார்க்கும் போதே சந்தோஷம்....

    பதிலளிநீக்கு

    Unknown5 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 5:44
    கல் வாழை சேப்பங்கிழங்கு இரண்டும் கழிவு நீரை சுத்தம் செய்யும்.

    பதிலளிநீக்கு

    Unknown5 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 5:45
    கல் வாழை சேப்பங்கிழங்கு இரண்டும் கழிவு நீரை சுத்தம் செய்யும்.

    பதிலளிநீக்கு

காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை

 காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை  திருநெல்வேலியைச் சேர்ந்த நெல்லை உலகம்மை என் அன்புத்தோழி. கல்வி ஆலோசகர், சிறப்புப் பேச்சாளர், தன்னம்பி...