எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 5 ஜனவரி, 2021

கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.

கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.

கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.

கேரள மக்களின் முக்கிய உணவு மீனும் அவித்த மரவள்ளிக் கிழங்கும்தான். நன்கு முத்துக்களைப் போலப் பெரிதாக இருக்கும் கேரள அரிசிச் சாதமும், கப்பக்கிழங்கும் மீனும் செம ருசி.. ஆனால் அதிகம் சாப்பிட முடியாது.


சதர்ன் ரயில்வேயில் கோவையிலிருந்து டெல்லிக்குச் சென்றால் மங்களா எக்ஸ்ப்ரஸ் அல்லது கேரளா எக்ஸ்ப்ரஸ்ஸில் செல்வோம். இட்லி, சப்பாத்தி, எலுமிச்சை, தயிர் சாதம் எடுத்துச் செல்வோம். ஏசி என்றால் கெட்டுப் போகாது . ஆனாலும் இரண்டு நாட்கள் பிரயாணம் என்றால் உணவை ஆர்டர் செய்தே ஆகவேண்டும். பேண்ட்ரி காருடன் கூடிய ட்ரெயின் என்பதால் எல்லாம் ஃப்ரெஷாக வந்து கொண்டே இருக்கும். அதில் நாங்கள் கட்டாயம் எங்கள் பிள்ளைகளுக்குப் பிடித்த முட்டக் கறி, மீனு கறி அல்லது கோழிக் கறி இந்த மூன்றில் ஒன்றை ஆர்டர் செய்து கட்டாயம் சாப்பிடுவோம்.

கோவளம் பீச்சில் இத்தனை வகை மீன்கள் ஒவ்வொரு கடையின் வெளிப்புறத்திலும் ஃப்ரெஷாக டிஸ்ப்ளே செய்யப்பட்டிருந்தன. கடல் உணவை விரும்பி உண்பவர்களுக்கு இங்கே விருந்துதான். ஆனால் எங்களுடன் வந்த நண்பர் இங்கே காஸ்ட்லிங்க.. என்று சொல்லி எதையுமே வாங்க விடவில்லை.

நாமே செலக்ட் செய்து சொல்லும் மீன், நண்டு, இறால், சிப்பி, சங்கு போன்றவற்றை அங்கேயே வெட்டி எடுத்து உள்ளே சென்று சில நிமிடங்களில் சமைத்துத் தருகிறார்கள். ஆனால் அங்கே ஒரு துண்டு மீனுக்கான விலையில்  ஒரு ஸ்டார் ஹோட்டலில் பஃபே சாப்பிட்டு விடலாம் என்பதால் வாங்கவில்லை. மேலும் வெளிநாட்டுக்காரர்களுக்கு ஏற்றாற்போல அரை வேக்காடாக சமைக்கப்படுமாம். ( ஹாஃப் குக்டு ).

ஒவ்வொரு கடையிலும் ஃபாரினர்ஸ் ட்ரிங்ஸுடன் கடலைப் பார்த்தவாறு பேசிக் கொண்டே தங்கள் உணவை ( மீன், நண்டு, இறால்.. -- காரம் அதிகமிடப்படாமல் வேகவைக்கப்பட்டு எல்லா விதமான சாஸ்களும் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்தன. சில்லி, டொமாட்டோ, சோயா, வொர்செஸ்டர்ஷயர், ஆயிஸ்டர் ஆகிய சாஸ்களும் பெப்பர், சால்ட் ஸ்ப்ரேக்களும் வைக்கப்பட்டிருந்தன. )

சில கடைகளில் பெட்ரோமாக்ஸ் போல உயரத்தில் விளக்குகள் தொங்க அதன் மாடியில் நார்த் இந்தியர்களும் குடும்பத்தோடு குடித்துக் கொண்டிருந்தார்கள். கடல் மீனில் என்னென்ன  வெரைட்டி உண்டோ அத்தனையும் அங்கே காணக் கிடைத்தது.

திருவனந்தபுரம்  நகருக்குள் வந்தால்  இரவிலும் மீன் வியாபாரம் மெயின் ரோடு வளைவில் நடந்துகொண்டிருந்தது. இங்கே மக்கள் மூன்று வேளையும் மீனு கறி சாப்பிடுகிறார்கள். மீனில்லாவிட்டால் உணவே இல்லை என்பது போலத்தான். மீன் சாப்பிட்டால் கண்ணுக்கு நல்லது என்று அவ்வப்போது ஒவ்வாமையோடு கொறிக்கும் நாம் கூட அந்த வறுத்த பொறித்த மீனுக்கு அடிமையாகி விட்டோம்.

அட மீன் வறுத்த நாற்றமே அடிக்காமல் நல்லா காரம் போட்டுத் தேங்காய் எண்ணெயில் வறுத்துக் கொடுத்தார்கள். ”அடோலி” என்று அங்கே நண்பர் இதற்குப் பெயர் சொன்னார். முகநூலில் எல்லா மலையாளிகளும் ”கறி மீன்” என்றார்கள். நம்ம கோயமுத்தூரில் இது போல சின்னதாக இருப்பதை ”மத்தி” என்று சொல்லி எல்லா மலையாளிகளும் வாங்கி விரும்பி உண்பார்கள்.

ஆனால் கேரளாவில் இருந்தவரை எந்த உணவு சாப்பிட்டாலும் வயிறு லேசாக இருப்பது போலவே இருந்தது. நான் வெஜ்ஜிலும் டாக்டர்கள் வேகவைத்த மீனைப் பரிந்துரைப்பதால்  உண்பது நல்லது என்று தோன்றுகிறது. இதைச் சாப்பிட்டுத்தானோ என்னவோ எல்லா மலையாளிகளும் சுறுசுறுப்பாகவும் ஃப்ரெஷாகவும் இருக்கிறார்கள்.

1 கருத்து:

  1. திண்டுக்கல் தனபாலன்30 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 10:33
    இன்றைக்கு மீன் வறுவல், மீன் குழம்பு செய்து விட வேண்டியது தான்... ஹிஹி... படங்கள் அப்படி...!

    வாழ்த்துக்கள் சகோதரி...

    பதிலளிநீக்கு

    சாந்தி மாரியப்பன்30 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 2:54
    pomfret பார்க்கவே நல்லாருக்கு. மத்தியைத்தான் சொல்றேன். நாங்க பாப்லெட்ன்னு சொல்லுவோம்.

    மீனும் மயக்கின கிழங்கும் சாப்பிட்டாத்தான் கேரளப்பயணம் நிறைவுபெறுமாக்கும். இந்த உணவுப்பழக்கம் எங்க நாஞ்சில் நாட்டிலும் உண்டு.

    பதிலளிநீக்கு

    quadhirababil30 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 3:26
    :)
    MOUTH WATERING.

    பதிலளிநீக்கு

    sathishsangkavi.blogspot.com30 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 4:02
    மீன் வறுவல் அருமை..

    பதிலளிநீக்கு

    VELUMANI30 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 5:47
    நான் அசைவு பிரியன் ..அதும் மீன் உணவு என்னக்கு ரொம்பபிடிக்கும் ..நன்றி,,

    பதிலளிநீக்கு

    மாதேவி30 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 7:51
    கேரளத்து மீன்கள் நன்றாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு

    cheena (சீனா)31 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 1:54
    அன்பின் தேனம்மை - புகைப்படஙள் அருமை - விளக்கங்களூம் அருமை - நன்று கேரளாவில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய போதும் ( மேரீட் பாச்சிலர் ) - ஒரு நாள் கூட அசைவம் சாப்பிட்டதில்லை - ஏன் தெரியுமா - கண்டு பிடியுங்க பாக்கலாம். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan1 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 3:22
    நன்றி தனபால்

    நன்றி சாரல்..நாஞ்சில் நாட்டுக்கும் ஒரு முறை வந்துட்டாப் போச்சு .:)

    ஜெய்லானி.. :)

    நன்றி சங்கவி

    நன்றி வேலு

    நன்றி மாதேவி

    நன்றி சீனா சார். ஏன் சாப்பிட்டதில்லை.. ஒரு வேலை செல்வி ஆச்சி சைவமோ.. :)
    நன்றி

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan1 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 3:22
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

    cheena (சீனா)2 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 1:18
    அன்பின் தேனம்மை - நான் தான் பிறவிச் சைவம் - என்னைத் தவிர வீட்டில் அனைஅவ்ரும் சுத்த அசைவம் -என்ன செய்வது ..... நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...