சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு.
ஒரு நல்ல ஹோட்டலுக்குப் போனா நீங்க என்னென்ன எதிர்பார்ப்பீங்க. ஏதோ ஒரு தீம்ல சில ஹால்கள் அமைக்கப்பட்டிருக்கலாம். ஆனா கும்பகோணத்துல இருக்கிற சுவாமிமலை ஸ்டெர்லிங் ரெசார்ட் ஹோட்டல்ல நம்ம பாரம்பர்யமிக்க கலைப் பொருட்கள் எல்லாத்தையும் பார்க்க முடியும்.
நம்ம கலை, கலாச்சாரம் எல்லாத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து எல்லாத்தையும் சேர்த்துப் பாதுகாத்து வைச்சிருக்காங்க..நம்ம ஊரு கம்மாக்கரையில் இருக்கும் ஐயனார் சாமிகள், பிள்ளையார், ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் உலா வரும் சூரியன், முருகனை மடியில் வைத்திருக்கும் சிவன் எல்லாரும் இருக்காங்க.
அது மட்டுமில்ல.. விளக்கு மாடங்களோடு கூடிய அந்தக்கால அக்கிரஹார வீடுகள், அவற்றின் வாசலில் கோலம் போடப்பட்டிருக்கும் அழகு.உள் முற்றம், காமிரா உள், நடை , சமையல்கட்டு என்று பக்காவா இருக்கு
தென்னை, வாழை மரங்கள், குறிச்சின்னு செட்டிநாட்டுப் பக்கம் சொல்லப்படுற மர ஈஸி சேர், கண்ணாடியுள்ள மற்றும் கொசுவலை போட மேலே கம்பிகளுள்ள கட்டில்கள், வெல்வெட் படுக்கைகள்.
அந்தக் கால மாடல் கார், ஹாண்ட் பிரிண்ட் மாதிரி பேப்பர் பிரிண்ட் பண்ற மிஷின். (HARRILE & SONS )
தண்ணீர் சுட வைக்கிற வேம்பா.மண் அடுப்புக்கள். பித்தளை கூஜா, மங்கு டிஃபன் காரியர்,அரிவாள் மனை, குந்தாணி,
பழைய கை ரிக்ஷா, சாரட், பல்லாக்கு, பெரும் காசாணி அண்டாக்களோடு தண்ணீர் கொண்டு வரும் தண்ணீர் வண்டி, ஆதி ஏரோப்ளேனுக்கான மாடல்,
அந்தக்கால ஓட்டு வீடுகள், சீமை ஓடுகள், தேக்கு மரக்கதவுகள், அலங்கார மர நிலைகள், வேலைப்பாடு நிறைந்த தேக்கு மரத் தூண்கள், தென்னை மரத் தூண்கள் , சுவற்றில் சாய்வாக மாட்டி வைக்கப்பட்டிருக்கும் ஃபோட்டோக்கள், அலங்கார வேலைப்பாடுள்ள முகம் பார்க்கும் பெல்ஜியம் கண்ணாடிகள், வேட்டையாடப்பட்டு பதப்படுத்தப் பட்ட கொம்புகளோடு கூடிய மான் தலைகள்.
குளிர்சாதனப் பெட்டி, காட்ரெஜ் பீரோக்கள், ரொட்டிப் பொட்டித் தகரங்கள், அலங்காரப் பொருட்கள், ஒட்டியாணம், கங்கணங்கள், காசுமாலை, தலை சீவும் சீப்புகள், சிக்கெடுக்கிகள், ஈறுவலிகள், கருதுகள், கத்திகள், வேல்கள், அம்புகள்,
கைவினைப்பாடுள்ள தடுக்குகள், மணி மற்றும் பாசியினால் குரோஷாவினால் செய்யப்பட்ட கை வேலைகள், கை வினைப் பொருட்கள், பாக்கு வெட்டிகள், பணியாரக் கல், இடியாப்பக் கட்டை, ஜாடிகள், பானைகள், தவலைகள், கண்ணாடி அலமாரிகள், மர அலமாரிகள்,
பீங்கான் லாம்ப் ஷேடுகள், பித்தளை லாம்ப் ஷேடுகள்,கை கழுவும் பணிங்கங்கள். எச்சி எடுக்கும் பணிக்கங்கள், அந்தக் கால டெலிபோன், ஸ்விச்சு போர்டுகள், ஸ்விச்சுகள்,
ட்ரங்குப் பெட்டி, கலியம் பெட்டி, மங்கு பித்தளைச் சாமான்கள், பழைய சுதேசமித்திரன் பத்ரிக்கைகள், கடிதங்கள், ரவிவர்மா ஓவியங்கள், வாள்கள்
விளக்குகள், ( பெட்ரோமாக்ஸ் லைட், ஹைரிக்கேன் விளக்கு, முட்டைக்கிளாஸ் விளக்கு, சிலேட்டு விளக்கு, குத்து விளக்கு, காடா விளக்கு, மெழுகுவர்த்தி ஸ்டாண்டுகள், தொங்கும் நிலை விளக்கு,
மரம் மற்றும் வெண்கலம் , ஐம்பொன்னால் ஆன சாமி சிற்பங்கள், எனாமலால் வரையப்பட்ட கிருஷ்ணன் ஓவியங்கள், ( MUD TO METAL-- THE BEGINNING ) என்று சில இருந்தன. நிறைய கிருஷ்ணர், பாமா, ருக்மணி ஓவியங்கள், குழலூதும் கிருஷ்ணன், இவற்றுடன் பாரதியாரும் அவர் மனைவி செல்லம்மாளும் புகைப்படமாக இருந்தனர். ஓலைச்சுவடிகளும் ஏடுகளும் இருந்தன. வீணை போன்ற மற்ற இசைக்கருவிகளும் இருந்தன.
ROYAL டைப்ரைட்டிங் மெஷின், அயர்ன் பாக்ஸ், ஃபான், பழைய கிராம ஃபோன், இரும்பு, மர வாக்கிங் ஸ்டிக்குகள், சாவி கொடுக்கப்படும் கடிகாரங்கள்,
குழந்தைகள் நடை வண்டிகள், குழந்தை ஊஞ்சல், ஊறுகாய் ஜாடிகள், கொலு பொம்மைகள், மண், பீங்கான் பொம்மைகள்,
குழந்தைகள் ஆடும் மரக் குதிரை பொம்மைகள், தாயக் கட்டங்கள், ஆடுபுலி ஆட்டம் ( ஒரு துணியில் தைக்கப்பட்டிருந்தது ) , சோகிகள், சிப்பிகள், தாயக்கட்டைகள், பல்லாங்குழி,
தண்ணீர் இறைக்கும் கருவிகள், திருகை, அம்மி, ஆட்டுக்கல், பாதாள கரண்டி, சாணை பிடிக்கும் மிஷின்,
பொய்க்கால் குதிரைகள், உலோக சிங்க சிற்பங்கள், சந்தனாதி தைல விளம்பரம், ரெமி பவுடர் விளம்பரம்,
பழைய சிங்கர் தையல் மிஷின், வலைக்கூண்டு அடைப்புள்ள அலமாரி,
இன்விடேஷனை பிரிண்ட் பண்ணும் மெஷின்,
சிவன் கேசங்கள் பறக்க நாகங்கள் உலவ இருக்கும் பிரம்மாண்டமான சிற்பம் அழகு.
ஸ்லேட்டுல மெனுகார்டு. கைப்பெட்டில பில் என்று இதுவும் கூட வித்யாசம்தான்.
உண்ண மட்டுமல்ல கண்ணுக்கும் விருந்தாக இருந்தது சுவாமிமலை ஸ்டெர்லிங் ரெசார்ட்.. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். அடுத்த முறை வந்தால் இங்கே குழந்தைளோடு ஒரு விசிட் செய்து குழந்தைகளாகி குதுகலமாகக் கண்டு களியுங்கள்.

VELUMANI22 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 10:59
பதிலளிநீக்குநல்ல பதிவு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு
திண்டுக்கல் தனபாலன்22 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 11:19
ஆகா... பிரமாதம்... அழகான படங்கள்...
வாழ்த்துக்கள்... நன்றி...
பதிலளிநீக்கு
K.T.ILANGO22 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 12:20
அருமையான பகிர்வு...
பதிலளிநீக்கு
K.T.ILANGO22 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 12:21
அருமையான பகிர்வு...
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan26 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 11:43
நன்றி வேலு
நன்றி தனபால்
நன்றி இளங்கோ
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan26 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 11:43
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
பதிலளிநீக்கு
iyarkai anu26 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 12:29
நல்ல பகிர்வு ,மற்றும் பதிவு.. தோழி
பதிலளிநீக்கு
Bhanumathy Venkateswaran29 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 10:56
படங்களும்,தகவல்களும் அருமை!அடுத்த முறை கும்பகோணம் விஜயம் செய்யும் பொழுது குறிப்பிட்டிருக்கும் ரெசார்ட் விசிட் செய்கிறோம்.
பதிலளிநீக்கு
நிஷா14 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 5:46
அழகான பதிவு, அருமையான் படங்கள்