குவாலியர் கோட்டையில். பாகம் 2. புதிய பயணியில்
சுதந்திரப் போராட்டத்தில் வீரப் பெண்மணி ஜான்சிராணி லெட்சுமி பாயும், தாந்தியாதோபேயும் இங்கேயிருந்துதான் ஆங்கிலேயரை எதிர்த்திருக்கிறார்கள். ரத்தம் தோய்ந்த கொடும் போர்கள் நிகழ்ந்த இடமும் கூட இது.
சூரஜ் சென் என்ற அரசர் ஒரு முறை கானகத்தில் வழி தெரியாமல் தவித்தபோது குவாலிபா என்ற ஒரு சாது அவருக்கு வழிகாட்டினார். மேலும் தாகவிடாயால் தவித்த அவருக்கு அங்கே இருந்த ஏரித்தண்ணீரைக் குடிக்கச் சொன்னார். தாகவிடாய் தீர்ந்தோடு அல்ல அவரைப் பீடித்த குஷ்டநோயும் குணமானதால் மன்னன் சூரஜ் சென் அவருக்கு கைமாறு செய்ய எண்ணியபோது சாது வனவிலங்குகளின் ஆதிக்கத்திலிருந்து யஞ்சம் செய்யும் சாதுக்களைக் காக்க மிகப் பெரும் மதிலை எழுப்புமாறு கூறினார். அதன்படி அரசன் மதில் கட்டினார். அதன் பின் இக்கோட்டையையும் கட்டி இந்த நகருக்கு சாதுவின் பெயரைச் சூட்டினார். அதனால் குவாலியர் ஆனது.
சூரஜ் மன்னர் நீர் அருந்தி குணமான ஏரி சூரஜ் குண்ட் என்று அழைக்கப்படுகிறது. யானை வரும் பாதை ஹாத்தி பூல் என்றும், பூந்தோட்டம் பூல் பாக் என்றும் அழைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட ஆறு வாயில்களைக் கடந்து கோட்டைக்கு உள் நுழையும் ஏழாம் நுழைவாயில்தான் ஹாத்தி பூல். மிகப் பெரும் கட்டுக் காவல் கொண்ட கோட்டை இது.
அங்கே வாயில் யானை நுழையும் அளவு பெரியதாக வடிவமைக்கப்பட்டிருக்கு. ஒரு யானையின் சிலையும் நிறுவப்பட்டிருக்கு. ராஜா மான்சிங் கட்டிய அரண்மனையைத்தான் மன்மந்திர்னு சொல்றாங்க. இது குவிந்த மாடத்துடன் உருளை வடிவ கோபுரங்களுடனும் அமைக்கப்பட்டிருக்கு. காவலுக்கு வீரர்கள் நிற்பதற்கு ஏற்ப வெளிப்புறப் பலகணிகளும் இருக்கு.
கோட்டையிலிருக்கும் அரண்மனை மன்மந்திர் என்றும், நகருள் இருக்கும் சிந்தியாக்கள் வசிக்கும் இன்னொரு அரண்மனை ஜெய்விலாஸ் மஹால் என்றும் அழைக்கப்படுகின்றன. ஆனால் இந்தக் கோட்டைகளிலும் மஹால்களிலும் யாரும் தற்போது வசிக்கவில்லை.
இந்த ஜௌஹார் குண்ட் தான் 12 ஆம் நூற்றாண்டில் ஆயிரக் கணக்கான ராஜ்புத்திரப் பெண்களைக் காவு கொண்ட இடம். சம்சுதீர் அல்டுமிஷ் இந்நகரை வெற்றி கொண்டபோது அவர்கள் கோட்டையினுள் நுழையுமுன் ஆயிரக்கணக்கான ராஜபுத்திர ராணிகள் அந்நியர் வசம் அகப்படலாகாது என்று அங்கே இருந்த குளத்தில் குதித்து இறந்திருக்கிறார்கள். இந்தக் குளத்தில் இருந்துதான் கோட்டை முழுமைக்கும் தண்ணீர் சேமித்து வழங்கப்பட்டிருக்கிறது. அது போக ஜௌகார் குண்ட் என்ற சிதையை மூட்டி அதில் அனைவரும் உடன்கட்டை ஏறியிருக்கிறார்கள். கொளுத்தும் வெய்யிலில் அந்த ஊரில் இருப்பதே கடினமாக இருந்தது. அதில் கொழுந்துவிட்டு எரிந்திருக்கும் ராணிகளை நினைத்தால் வருத்தமாகத்தான் இருந்தது.
டிஸ்கி :- இதையும் பாருங்க.


Thenammai Lakshmanan7 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 12:16
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
பதிலளிநீக்கு
வெங்கட் நாகராஜ்7 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 6:19
படித்தேன். ரசித்தேன். பதிவு படித்ததும் நான் சென்று வந்த பயணம் மனதில்.
என்னுடைய வலைப்பூவிலும் “மத்தியப் பிரதேசம் அழைக்கிறது” என்ற தலைப்பில். மொத்தம் 27 பதிவுகள்..... முடிந்த போது படித்துப் பாருங்கள்.
பதிலளிநீக்கு
திண்டுக்கல் தனபாலன்7 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 7:14
வர்ணக் கற்களை உபயோகித்தே... சிறப்பான தகவல்களுக்கு நன்றி...
பதிலளிநீக்கு
Thulasidharan V Thillaiakathu8 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 10:25
படங்கள் அருமை! விவரணமும் அருஅமி! ரசித்தோம். சகோதரி!
பதிலளிநீக்கு
வை.கோபாலகிருஷ்ணன்9 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 2:11
மிகச்சிறப்பான படங்கள் + தகவல்கள்.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan12 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 5:15
நிச்சயம் வெங்கட் சகோ. நேரம் கிடைக்கும்போது படிக்கிறேன் :)
நன்றி தனபாலன் சகோ
நன்றி துளசிதரன் சகோ
நன்றி கோபால் சார்.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan12 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 5:16
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!