எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 20 ஜனவரி, 2021

ஜெய்னிகா & கார்மெட்.

ஜெய்னிகா & கார்மெட்.

காரைக்குடியில் ஆரியபவன், அன்னலெட்சுமி, சிங்கார் ஹோட்டல் , பிரசிடெண்ட் ( புரோட்டா), அம்சவல்லி ( பிரியாணி), அன்னபூர்ணா, மல்லி , ஐங்கரன், செக்காலை பேக்கரி, பேக்கரி டிசோட்டா  எனப் பல பிரபலமான உணவிடங்கள் இருந்தாலும் ருசியால் என்னைக் கவர்ந்தது ஹோட்டல் ஜெய்னிகாவும் கார்மெட் பேக்கரியும்.

தாப்பா கார்டன்,  பங்களா , ஆகியவை பஃபே உணவுகளுக்கான இடங்கள். அநேகமா ஃபாரின் டூரிஸ்ட் வந்து போகும் இடம். முன்பே புக் செய்ய வேண்டும். 1750 என்று சொல்கிறார்கள் பர் ஹெட்.

ஓரிரு வருடங்களுக்கு முன்புதான் புதிய பேருந்து நிலையம் அருகில் துவங்கப்பட்டிருக்கிறது ஜெய்னிகா. ஒருமுறை சனிக்கிழமை அன்று அரியக்குடி போகும் முன் இங்கே காஃபி அருந்திவிட்டுச் சென்றோம். என்ன சுவை என்ன சுவை. சும்மா 3 மணி நேரம் பசியெடுக்கவில்லை. !

எல்லா ஐட்டமும் விலை சீப்தான். 100 ரூபாய்க்குள்  சராசரி மனிதர் காலை உணவை முடித்துவிடலாம். அந்த நெய் ரோஸ்ட் இருக்கே. அது ரொம்ப ரொம்ப சூப்பர். அதிலும் நீங்க எச்சரிக்கையா 80 ரூபாய்க்கு உள்ள ரோஸ்டை ஆர்டர் பண்ணனும். சும்மா தோசை ரோஸ்ட் என்றால் வதக் வதக்னு ஒரு ரோஸ்டைக் கொண்டு வந்து கொடுத்திருவாங்க. 80 ரூபாய் ரோஸ்டில்தான் நெய் வழியும் மொறு மொறுவென்று பொன்னிறமாக மின்னும் :)
ட்ரைவரும் என் சின்னப் பையனும். அவங்களுக்கு இட்லி, மினி இட்லி, வடை ஆர்டர் பண்ணிக்கிட்டாங்க.

கையைக் கடிக்காத பட்ஜெட்டில் காலை உணவு.
காஃபி இல்லாம நிரக்குமா. :) இங்கே காஃபி ரொம்ப சூப்பர்.
அடுத்து கார்மெட். இங்கே அமர்ந்து சாப்பிட ஏசி ஹாலும் இருக்கு. மைல்டான ஏசி, அதிகம் கூட்டமில்லாத இடம். எவ்ளோ நேரம் வேணும்னாலும் அமர்ந்து பேசிட்டு இருக்கலாம். ஆனா நான் மட்டும் தனியாப் போய் ஆர்டர் பண்ணி வரும்வரை எல்லாரையும் வேடிக்கை பார்த்து சாப்பிட்டு பொழுதைக் கழிச்சிட்டு வந்தேன் ஒரு மழை நாள் மாலையில்  :)
விளக்கெரிக்கும் மரங்கள் அழகா இருந்தது ஒரு பக்க சுவரில்.
சுடச் சுட பனீர் ஃப்ரிட்டர்ஸும், சாஸும் மயோனிஸும்.
சிக்கன் பஃப்ஸ். அதுவும் கரமோ கரம்.
முழு வியூவில் நான் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த அந்த மரமும் சுவரும். :)
விநாயகர் படம் போட்டா மாதிரி இருக்க இந்த டிஷ்யூ ரொம்பப் பிடிச்சிருந்தது :)
காஃபி இல்லாமலா.. அதுதானே ஃபினிஷிங் டச் கொடுக்கும் :)
உள் அலங்காரம்.
இது அங்கேயிருந்து இரண்டு நாள் கழித்து வீட்டிற்கு வாங்கி வந்த சமோசாவும் முட்டை பஃப்ஸும்.

இது நானே வீட்டில் செய்த பனீர் ஃப்ரிட்டர்ஸ்ஸ்ஸ் :) அட நல்லாத்தான் செய்திருக்கேன் :) ஹிஹி தனக்குத்தானே ஷொட்டு. :)

 சரி காரைக்குடி வந்தா சாப்பிட அநேக இடங்கள் இருக்கு. இங்கேயும் சாப்பிட்டுப் பாருங்க.

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1.  சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு.

2.மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா..

3. பாரடைஸ் ரெஸார்ட். 

4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி) 

5.  ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.

6.  கேரளா சோழா & ஹைலாண்ட். 

7.கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :-

8.  பார்பக்யூ நேஷன் 

9. மை ப்ளேஸ்.

10.   குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :-

11. பிகேஆரும் இண்டர்காமும். :-

12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.

13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.

14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS) 

15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.

16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து. 

17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி . 

18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.

19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்‌ஷனும். 

20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.

21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.

22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி. 

23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.

24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

25. ழ வில் வலைப்பூ வடை...

26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.  

27. ஜெய்னிகா & கார்மெட். 

28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு. 

29.  சமணர் படுகையும் சாந்தி இன்னும்.

1 கருத்து:

  1. மு. கோபி சரபோஜி21 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 1:59
    ஆச்சி...லீவுக்கு வரும் போது ஒரு எட்டு போய் வருகிறேன்.

    பதிலளிநீக்கு

    மனோ சாமிநாதன்21 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 2:05
    இந்த ஜெய்னிகா பற்றி நீங்கள் ஃபோனில் சொல்லவேயில்லையே ? மறந்து விட்டீர்களா? ஆனாலும் இந்த உணவகத்தின் பனீர் ரோல்ஸை விட உங்களுடையது தான் சூப்பர் தேனம்மை!

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan21 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 2:20
    கட்டாயம் போயிட்டு வாங்க கோபி சகோ

    ஆம் மனோ மேம் மறந்துட்டேன் :) நன்றி :)

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan21 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 2:21
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும். !

    பதிலளிநீக்கு

காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை

 காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை  திருநெல்வேலியைச் சேர்ந்த நெல்லை உலகம்மை என் அன்புத்தோழி. கல்வி ஆலோசகர், சிறப்புப் பேச்சாளர், தன்னம்பி...