போன்சாய் பெரியவர்களும் சிறியவர்களும்.
பெங்களூருவில் இருந்த போது மலர்க் கண்காட்சிக்கும் காய்கனிக் கண்காட்சிக்கும், சுதந்திர தினத்திலும் குடியரசு தினத்திலும் லால்பாகுக்குச் சென்று வந்திருக்கிறேன்.
மனிதர்களில் குட்டையர்கள் நெட்டையர்கள் இருப்பது போல போன்சாயிலும் வெகு குட்டை மரங்களும், அதை விட ஓரளவு வளர்ந்த மரங்களும் லால்பாக் தாவரவியல் பூங்காவில் காட்சியளித்தன.
இந்த நெட்டையர்கள் வாசலின் முன்பே உள்ள ஒரு பெரிய புல்வெளியில் காட்சி அளிக்கிறார்கள். ஆனால் இந்த குட்டை போன்சாய் மரங்கள் தனியாக ஒரு பகுதியில் வளர்க்கப்படுகின்றன. அவற்றின் அருமை தெரியாமல் ( ப்லாக் போஸ்ட் மோகம் வரும் என்று உணராமல் ) மிகக் குறைந்த புகைப்படங்களே எடுத்து வந்துள்ளேன். அவை உங்கள் பார்வைக்கு.
ஆலமரங்களும் தென்னை மரங்களும் ஈச்ச மரங்களும் அசோக மரங்களும் சவுக்க மரங்களும் எவ்வளவு பிரம்மாண்டமானவை என்று உங்களுக்குத் தெரியும். அதிலும் பெங்களூரு மண்ணின் வளத்துக்கு அவை விண்ணைத் தொடும் அளவு வளர்ந்திருக்கும். அவை மலர்ந்து சிரிப்பதுபோல்தான் தோன்றுகிறது. ஆனால் இங்கோ மாதிரிப் படிவங்களாய்த்தான் உயிர்த்திருக்கின்றன.
.
போன்சாய் எனப்படுவது தொட்டியில் மரங்களையும் செடிகளையும் குட்டையாகவே வளர்ப்பது. மரங்களின் மினியேச்சர். இது ஜப்பானியக் கலை. இகபானா என்ற மலர் அலங்காரக் கலையையும் அறிமுகப்படுத்தியவர்கள் இவர்களே.இது சீனா வியட்நாம் ஆகிய நாடுகளிலும் பழக்கத்தில் உள்ளது.
இதை வளர்க்க நிறைய நுட்பங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. அங்கீகரிப்பட்ட முழுமையான வடிவங்கள் என்று அவர்கள் என்னதான் கூறினாலும் மரபணுக்களை ஒட்டியும் வெட்டியும் விதைகளை உருவாக்கி அவற்றிலிருந்து பெறப்பட்டவையே இந்த போன்சாய்கள்.
ஒரு சிறிய அழகியல் வடிவமைப்புக்காக மரங்களின் வளர்ச்சியைச் சிறைப்படுத்திக் குட்டையாக வளர்ப்பது ஏதோ ஒரு வருத்தம் தந்தாலும் பார்க்கும் கணம் தோறும் ஆச்சர்யமும் விளைவிக்கிறது.
இவை மட்டுமல்ல குட்டைத்தென்னை, காய் மட்டும் காய்க்கும் முருங்கை, மரபணு மாற்றத் தக்காளி , கத்திரிக்காய். என்று வளர்ச்சி குன்றிய மரத்திலிருந்து வடிவமைக்கபட்டுப் பெறப்பட்ட எதைப் பார்த்தாலும் அடுத்த தலைமுறைக்கு என்னாகுமோ என்ற எண்ணம் தோன்றுவது உண்மை.
ஒரு மிகப் பெரும் விருட்சத்தின் வாழ்க்கை ஒரு தொட்டிச் செடிக்குள்ளோ அல்லது தட்டுக்குள்ளோ அடங்கி விடுகிறது.
பறவைகள் அமர்ந்து தென்றல் உலவ வேண்டிய மரங்கள்.. ஆக்சிஜனைத் தருவதற்குப் பதிலாக அடைபட்டுக் கிடக்கின்றன மூச்சு விட இயலாமல் சில சில ஆர்ட் காலரிகளிலும் கூட.
போன்சாய்க்கான வரலாறும், பல்வேறு பெயர்களும் வளர்ப்பு முறைகளும் இங்கே முழுமையாகக் கூறப்பட்டுள்ளன.
டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.
1. மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.
2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள்.
4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1
5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2
6. மஞ்சள் முகமே வருக. (LAL BAGH )
7. குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.
8. இன்னும் சில ஒற்றையர்கள் பாகம் 3

வை.கோபாலகிருஷ்ணன்25 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 12:02
பதிலளிநீக்குகுட்டையும் நெட்டையுமாகக் குதூகலம் ஏற்படுத்தும் அழகான பதிவு.
பகிர்வுக்கு நன்றிகள்.
பதிலளிநீக்கு
வெங்கட் நாகராஜ்25 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 7:46
சமீபத்தில் தில்லியிலும் இப்படி ஒரு கண்காட்சியில் போன்சாய் மரங்களைப் பார்த்தேன். பார்க்கும்போதே மனதில் ஒரு வலி - நன்கு வளர வேண்டியவற்றை கம்பிகளால் கட்டி வளர்ச்சியைத் தடை செய்வது பாவமாக இருந்தது. நானும் படங்கள் எடுத்து வந்தேன்..... பிறிதொரு சமயத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.
பதிலளிநீக்கு
திண்டுக்கல் தனபாலன்26 பிப்ரவரி, 2015 ’அன்று’ முற்பகல் 6:33
வளைந்து நெளிந்து... ஒவ்வொன்றும் வியக்க வைத்தது சகோதரி...
அழகு...
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan26 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 8:00
நன்றி கோபு சார்
நன்றி வெங்கட் சகோ. பகிர்ந்ததும் இணைப்பு கொடுங்க :)
நன்றி தனபாலன் சகோ :)
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan26 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 8:01
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!