எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 21 ஜனவரி, 2021

ப்ரேக்ஃபாஸ்ட்.. BREAK FAST.

ப்ரேக்ஃபாஸ்ட்.. BREAK FAST.

இரவு உணவு ஒன்பது மணிக்கு சாப்பிட்டா காலை ஒன்பது மணிக்கு டிஃபன் சாப்பிடுறோம். கிட்டத்தட்ட பன்னிரெண்டு மணி நேரம் வயிறு காலியா இருக்கு. அதனால காலை உணவு இன்றியமையாததுன்னு சொல்றாங்க. அதுனால வெயிட் லாஸ் பண்றேன்னு ஜூஸ் மட்டும் குடிச்சிட்டுக் காலை உணவைத் தவிர்க்காதீங்க.

காலை உணவை மஹாராஜா மாதிரி சாப்பிடுங்கன்னு சொல்வாங்க. நம்மூரு ஸ்பெஷல் இட்லிதான். ஆனா பொங்கல், வடை, அல்வா, பணியாரம்னு விதம் விதமாக் கட்டுவோம் விசேஷம்னா. இங்கே வீட்ல ,ஹோட்டல்ல, விருந்துல, சாப்பிட்டதெல்லாம் அணிவகுத்து வருது :) 

வீட்டில்செய்த ரவா தோசை வித் மிளகாய் சட்னி  :)
ரவா கோதுமை மைதா தோசை வித் பச்சடி மல்லித் துவையல் மிளகாய்த்துவையல்.
சுடச் சுட இட்லியும் புதினா சட்னியும். ( பசியைத் தூண்டும். )
ஆப்பம் நல்லது. வயிற்றுப் புண் வாய்ப்புண் ஆற்றும்.
முருகல் தோசை முறுக்கு தோசை ஆயிடுச்சு . வெங்காயக் கோஸும் பச்சைமிளகாய் கொத்துமல்லிச் சட்னியும்.
பூயீ. பூரி மசால் :)

அமீரகம் சென்றிருந்தபோது தம்பி மக்களுடன் சாப்பிட்ட குப்பூஸ் ஹலுவா ( வெள்ளை எள்ளு ஸ்வீட் )

துபாய் ஏர்ப்போர்ட்டில் மசால் தோசையும் சாம்பார் தேங்காய்ச் சட்னியும்.
கோவை ஆர் எஸ் புரம் அன்னபூர்ணாவில் சீஸ் ஆப்பம். குருமா, தேங்காய்ப்பால்.

சென்னை பி கே ஆரில் இட்லி சாம்பார் வடை இடியாப்ப சட்னிகள், தர்ப்பூஸ் ஜூஸ்.

சரவணபவன் பலகாரம். ஸ்பெஷல் டிஃபன். :) கேசரி, பொங்கல் வடை, இட்லி, கெட்டிச்சட்னி, தக்காளித் துவையல் ,சாம்பார்.
சேலம் கேஸில் ஹோட்டலில் காலை பஃபே.பூரி மசால், பொங்கல், வடை, சாம்பார், சட்னிகள்.
வீட்ல சுட்ட பூயீஸ்ஸ்ஸ் :)
சேலம் கேஸில் ஹோட்டலில் ப்ரெட் பட்டர், ஆம்லெட், கார்ன்ஃப்ளேக்ஸ், ஃப்ரூட்ஸ், ஜூஸ்.
ஆர்வீயில் ப்ரெட் ஆம்லெட் காஃபி.
ஆர்வியில் ப்ரெட் பட்டர் ஜாம், ஆம்லெட், கார்ன்ஃப்ளேக்ஸ்,வாழைப்பழம், பழங்கள், ஜூஸ்.
கோவை ஆர்வியில் இட்லி, தோசை, வடை, பொங்கல், உப்புமா, சட்னிகள், சாம்பார், பொடி எண்ணெய், ஜூஸ்.

மதுரை ட்யூக்கில். இட்லி வடை பொங்கல் பூரி சட்னீஸ், மசால் , சாம்பார்
கோவா ஃபிடால்கோ ஹோட்டலில் இட்லி சட்னி தோசை ரோஸ்ட் சாம்பார். :)


ஹெல்தியா சாப்பிடுங்க. ஹெல்த்தை மெயிண்டெயின் பண்ணுங்க வேறெப்புடி நடந்து நடந்துதான். ஆனா நடந்துட்டு போயி இப்புடி விதம் விதமா வெட்டுனா அப்புறம் வெயிட் போட்டுடும். சோ கொறைச்சு கொறைச்சு ஊணு கழிக்கானு :)

இந்த நாள் இனிய நாளாகட்டும். :)

1 கருத்து:

  1. கரந்தை ஜெயக்குமார்23 டிசம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 6:36
    காலையிலேயே பசியைக் கிளறி விடுகிறீர்கள் சகோதரியாரே

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்23 டிசம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 6:58
    காலை உணவு மிக முக்கியம்.... படத்தில் உள்ள அத்தனையும் சாப்பிட முடியாது - சீஸ் ஆப்பம் மட்டும் இப்போதைக்கு போதும்!

    பதிலளிநீக்கு

    திண்டுக்கல் தனபாலன்23 டிசம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 7:53
    ஆகா...! ஆகா...!

    பதிலளிநீக்கு

    விஸ்வநாத்23 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 1:51
    // ஆனா நடந்துட்டு போயி இப்புடி விதம் விதமா வெட்டுனா அப்புறம் வெயிட் போட்டுடும்.//
    ஹிஹிஹி.

    பதிலளிநீக்கு

    G.M Balasubramaniam23 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 5:10
    படங்கள் எடுத்ததற்கான பதிவா இல்லை பதிவுக்காக எடுத்த படங்களா ஹெல்தியாக இருக்க உண்ட உணவுக் கேற்றமாதிரி காலரிகளைச் செலவு செய்யணும்

    பதிலளிநீக்கு

    Thulasidharan V Thillaiakathu27 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 11:12
    கொறைச்சு கொறைச்சுக் கழிக்கணும்னு பறைஞ்சிட்டு இங்கன படங்களிட்டாலு எங்கன கழிக்காதிரிக்காம் பற்றும்!!! ஹஹஹஹ் சரி சரி செர்வர் சீஸ் ஆப்பம் ரெண்டு ப்ளேட்!!! சகோ நீங்க செஞ்சதே ரொம்ப நல்லாருக்கு!!!!


    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan30 டிசம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 1:30
    நல்லா சாப்பிடுங்க ஜெயக்குமார் சகோ. அதுக்குத்தான் இந்தப் பதிவு :)

    சீஸ் ஆப்பம் ஒரு பார்சேல் வெங்கட் சகோவுக்கு :)

    ஓஹோ ஓஹோ டிடி சகோ :)

    ஆமாம் விசு சார் உண்மைதான். :)

    ரெண்டும்தான். போத்.. பாலா சார். ஆமாம் சரியா சொன்னீங்க.

    அஹா இம்புட்டு மலையாளம் யான் அறிஞ்சில்லா. கிகிகி. ரொம்பப் பேசினா என் குட்டு வெளிப்பட்டுடும். நன்றி துளசி சகோ & கீத்ஸ். வெங்கட் சகோவுக்கு கொடுத்த அதே சீஸ் ஆப்பம் ரெண்டு ப்ளேட் பார்சேல்ல்ல்ல் :)

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan30 டிசம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 1:31
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...