எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 15 ஜனவரி, 2021

சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.

சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.

சென்னையில் வசிக்கும் பெரும்பாலோர் கட்டாயம் சென்றிருக்கக்கூடிய இடம் திருவல்லிக்கேணியில் உள்ள ரத்னா கேஃப். இதன் இட்லி சாம்பார் சுவையில் மயங்காத சென்னைவாசிகளே இருக்க முடியாது. திருவல்லிக் கேணி என்றால் பீச், பார்த்த சாரதிப் பெருமாள் , இராகவேந்திரர் கோயில்களோடு ரத்னா கஃபேயிலும் எட்டிப் பார்த்துவிட்டு வரலாமே எனத் தோன்றும். பாரம்பரியப் பெருமை மிக்கது இந்த ஹோட்டல். எனக்கு தெரிஞ்சே 30 வருஷமா இதே இடத்தில் இருக்கு அந்த ஹோட்டல். இங்க இட்லிதான் ராஜான்னா சாம்பார் ராணி. எவ்ளோ வேணாலும் கிடைக்கும்.

சென்னைக்கு மெட்ரோ ரயில் வந்திருக்கு. சென்னை வரைக்கும் போயிட்டு அதுல போகாம வருவேனா.

அசோக்  நகரிலிருந்து கோயம்பேடு போய் அங்கேருந்து பஸ்ஸுல ட்ரிப்ளிகேன். அங்க ரத்னா கஃபேல சாப்பிட்டு லேட்டாயிட்டதால ஆட்டோல கே கே நகருக்கு விடு ஜூட்.


மெட்ரோ எக்ஸ்பீரியன்ஸ் சூப்பர்தான். சிங்கப்பூர் மாதிரி பணம் கொடுத்து கார்டு வாங்கி ஸ்வைப் பண்ணனும். எக்ஸலேட்டர்ல ஏறி வந்தா ஸ்டேஷன் . கீழேயும் மேலேயும் செக்யூரிட்டீஸ். அழகான ப்ளாட்ஃபார்ம்ஸ்.

காத்திருக்கும்போது ஓடி வந்தான் ரயில் ராட்சசன். ஏறி ஜில்லுன்னு மூணாவதோ நாலாவதோ ஸ்டாப்புல எறங்க வேண்டியதா போச்சு.அம்புட்டுத்தான் வந்திருச்சு கோயம்பேடு. பட் சிங்கப்பூர், மலேஷியா, துபாய் மாதிரி ஜில் ஜில் எக்ஸ்பீரியன்ஸ்.

ரத்னா கஃபேலயும் ஏசி ரெஸ்டாரெண்ட் முன்ன கூட்டமில்லாம இருக்கும். இப்ப எப்பப் போனாலும் கூட்டம் அள்ளித் தள்ளுது. எப்பவும் போல ஒரு நெய் ரோஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ட். வித் பாசந்தி, சாம்பார் இட்லி , பரோட்டா ஃபாலோவ்ட் பை காஃபி. போன தரம் மினி ஜிலேபியும் பனீர் ரோஸ்டும் சாப்பிட்டுப் பிடிக்கல அவ்வளவா. அதான் ரிஸ்க் எடுக்க வேணான்னு எப்பவும் ஆர்டர் பண்றதே சாப்பிட்டோம். மனசுக்கும் நிறைவு.

ஒருபிடி பிடிச்சிட்டு தெம்பா வந்தோம். ராகவேந்திரரையும் பார்த்த சாரதியாரையும் பார்க்க நேரம் பத்தல. அடுத்த முறை இவங்க ரெண்டு பேரையும் பார்த்துட்டு பீச்சுக்குப் போய் கண்ணகி, காந்திஜிக்கு ஹலோ சொல்லிட்டு ரத்னா கஃபேல சாப்பிட்டுட்டு வரணும். :)

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1.  சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு.

2.மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா..

3. பாரடைஸ் ரெஸார்ட். 

4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி) 

5.  ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.

6.  கேரளா சோழா & ஹைலாண்ட். 

7.கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :-

8.  பார்பக்யூ நேஷன் 

9. மை ப்ளேஸ்.

10.   குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :-

11. பிகேஆரும் இண்டர்காமும். :-

12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.

13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.

14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS) 

15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.

16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து. 

17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி . 

18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.

19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்‌ஷனும். 

20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.

21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.

22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி. 

23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.

24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

25. ழ வில் வலைப்பூ வடை...

24. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.

1 கருத்து:

  1. ஸ்ரீராம்.22 செப்டம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 6:26
    மெட்ரோ ரயிலில் இன்னும் போகவில்லை! ரத்னம் கேப் அனுபவம் சூப்பர். என்ன சாப்பிட்டாலும் அதன் கூட பரோட்டா சாப்பிடும் பழக்கத்ஹ்ட்டை விடுவதில்லை நாம்!

    பதிலளிநீக்கு

    கார்த்திக் சரவணன்22 செப்டம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 6:31
    சென்னையிலேயே இருந்தாலும் மெட்ரோ ரயிலில் ஒரே ஒரு முறை மட்டுமே பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது... ரத்னா கபே நம்ம கடை தான்... அடிக்கடி போவதுண்டு...

    பதிலளிநீக்கு

    கரந்தை ஜெயக்குமார்22 செப்டம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 6:48
    அருமை
    அடுத்த முறை சென்னை செல்லும்போது
    ரெத்னா கபேக்குச் சென்றுவிடவேண்டியதுதான்

    பதிலளிநீக்கு

    Jayaraj22 செப்டம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 8:44
    Intresting pist

    பதிலளிநீக்கு

    G.M Balasubramaniam22 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 5:30
    எனக்குத் தவறுதலாக துளை கோபாலின் தளத்துக்கு வந்து விட்டேனோ என்னும் சந்தேகம் படங்களைப் பார்த்ததும் வந்தது

    பதிலளிநீக்கு

    Bhanumathy Venkateswaran24 செப்டம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 10:27
    சென்னை வாசியாக இருந்தாலும் இன்னும் மெட்ரோவில் பயணம் செய்யவில்லை. துபாய், டில்லி மெட்ரோக்களில் பயணித்திருக்கிறேன்.
    ட்ரிப்ளிகேன் ரத்னா காபியின் இட்லி சாம்பார் சிறப்புதான். குறிப்பாக சாம்பார்...ம்ம்ம்ம்! Y..u..m..m..y!

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்24 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 8:15
    தில்லியில் அடிக்கடி மெட்ரோ பயணம் உண்டு. சென்னை மெட்ரோ பயணிக்க வாய்ப்பு இதுவரை இல்லை.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan20 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 12:10
    ஆமாம் ஸ்ரீராம். ஆமாம் மெட்ரோவில் போனீங்களா. :)

    நன்றி ஸ்கூல் பையன்

    போனீங்களா கரந்தை ஜெயக்குமார் சகோ.. ?

    நன்றி ஜெஜெ

    அஹா பாலா சார் .. நன்றி :)

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன்.

    இங்கேயும் நல்லா இருக்கு வெங்கட் சகோ :)

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan20 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 12:10
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...