எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 27 ஜனவரி, 2021

கலாச்சாரம் காக்கும் சிலைகள் - ஹைதை & சென்னை ஏர்போர்ட். MADRAS & HYDERABAD AIRPORTS

கலாச்சாரம் காக்கும் சிலைகள் - ஹைதை & சென்னை ஏர்போர்ட். MADRAS & HYDERABAD AIRPORTS.

பல முறை ஹைதை ஏர்போர்ட் சென்றிருந்தாலும் சிலமுறையே சுதாரிப்பாக ஃபோட்டோ எடுத்தேன். ஹைதை ஏர்போர்ட் ஒரு டிலைட். ஓவியங்களும் சிலைகளுமாகக் கலக்கி இருப்பாங்க.

ஆகஸ்ட் 15 ஐ ஒட்டி காந்தி சிலை. 

 ராமர் , ஆஞ்சநேயர், ராவணன் என நினைக்கிறேன். யக்ஷகானம் போல ஏதோ கூத்துக் கலையின் உடையம்சம் எனத் தோன்றுகிறது. சாதாரண நாளிலே இந்த கண்ணாடிக் கதவுகளில் ஓவியங்கள் அழகூட்டும் ( பாத்ரூம் பக்கம் ) .

அங்கிருந்து செக் அவுட் செய்யும் பகுதியில் இந்த நீல மயில். இருந்தது. 


யுகாதியை கருப்பொருளாகக் கொண்டும் அமைக்கப்பட்ட  சிலைகள். பெண் சிற்பங்கள் கண்ணைக் கவர்ந்தன.

பேகேஜ் கலெக்‌ஷனுக்காகக் காத்திருந்த போது சுட்டது.

பெண் தெய்வங்களும் தேவதைகளும் அன்னங்களும் கொள்ளை அழகு இல்லையா :)

தமிழகத்தின் பாரம்பரியக் கலைகளான தெருக்கூத்து,

பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம்,

கரகம்

ஏன் கர்நாடக இசை நிகழ்ச்சியையும் சிவபார்வதி நடனத்தையும் கருப்பொருளாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கின்றது அதன் பக்கவாட்டுச் சுவர்கள்.

சென்னை ஏர்போட்டில் கண்டு களித்தேன் இக்குதிரைச் சிலையை ( இந்தத் தலைப்புக்குப் பொருத்தமில்லை எனினும். ஏர்போர்ட் சிலையல்லவா அதான் பகிர்கிறேன் ) :) HELEN OF TROY - ஹெலன் ஆஃப் ட்ராய் படம் ஞாபகம் வந்தது. :)

அது போக இந்த மீனவ உழைப்பாளர் சிலையும் மிக அழகு. :) 



கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் முயற்சியில் சிறப்பாக ஈடுபட்டிருக்கும் ஹைதை & சென்னை ஏர்போர்ட் மேனேஜ்மெண்ட்களுக்கு வாழ்த்துகள். ::)

1 கருத்து:

  1. சென்னை பித்தன்15 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 8:06
    அழகை அழகாகப் படம் பிடித்திருக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு

    கரந்தை ஜெயக்குமார்16 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 6:57
    அருமை
    ஒவ்வொரு படமும் ஒரு ஓவியமாய்

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்16 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 8:10
    அழகிய படங்கள். சமீபத்திய பயணத்தின் போது சென்னை விமான நிலையத்தில் மஹாபலிபுரம் சிற்பங்களின் மாடல்கள் வைத்திருந்தார்கள். புகைப்படம் எடுக்க வில்லை! :(

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan17 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 9:58
    நன்றி சென்னைப் பித்தன் சார்

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி வெங்கட் சகோ :) ( ஏன் புகைப்படம் எடுக்கலை.. நேரமின்மையா.. ?

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan17 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 9:58
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...