ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.
கும்பகோணத்தில் மகாமகக் குளக்கரையில் இருக்கும் ஹோட்டல் ரைஸ் & ஸ்பைஸ். உணவு ரொம்ப ருசிதான். இண்டீரியர்ஸ் கூட அழகுதான். ஆனால் சுத்தம் கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கிறது.
பக்கத்தில் இருக்கும் காசி விஸ்வநாதர் கோயிலில் தரிசனம் முடித்து விட்டுக் காலை உணவருந்த அங்கே சென்றிருந்தோம். வசதியான கார்பார்க்கிங். கண்ணாடிக் கதவுகளுடனான முன் பக்கம்.
அங்கே தங்கி இருந்தவர்களும் உணவருந்த அந்தக் காலை வேளையில் வந்திருந்தார்கள்.
பொங்கல், தோசை, சாம்பார், சட்னி, அண்ட் கும்பகோணம் டிகிரி காஃபி. சூப்பர். பரிமாறப்பட்ட ப்ளாஸ்டிக் தட்டுக்களைப் பார்த்தால்தான் என்னவோ போலிருந்தது.
ரைஸ் & ஸ்பைஸ் கொஞ்சம் க்ளீன் அண்ட் நீட்டாக இருந்தால் இன்னும் கூட வாடிக்கையாளர்கள் வருவார்கள். இருவர் டிஃபன் சாப்பிட 150 லிருந்து 200 ரூபாய்தான் ஆகும்.
இரவு உணவு உண்ண அமைதியான இடம் தாஜ் சமுத்ரா. இங்கே இண்டீரியர் டெக்கரேஷன் கொள்ளை அழகு. ஆதண்டிக் செட்டிநாட்டு உணவுகள் ரொம்ப ருசி.
அசைவ வகைகள் செட்டிநாட்டு சுவையில் நாக்கின் சுவை மொட்டுக்களைக் கொக்கி போட்டு இழுத்தன. சிக்கன் சூப்பில் தக்காளி மிதக்க நல்ல சுள்ளென்று சூடும் சுவையுமாக இருந்தது. கனமான சில்வர் கப் & சாஸரில் சூப் பரிமாறப்பட்டிருந்தது.
ருமாலி ரொட்டி, மட்டன் பிரியாணி, தயிர்ப் பச்சடி, பட்டர் சிக்கன் க்ரேவி என யூசுவல் மெனுதான் ஆர்டர் செய்து சாப்பிட்டோம். பின்னே கண்டதையும் பேரைப் பார்த்து ஆர்டர் செய்துட்டா யார் சாப்பிடுறது.. :)
வெங்காய ஸ்லைசுகளின் மேல் பீட்ரூட்டைச் சீய்த்துப் போட்டிருந்தார்கள். அழகாகவும் சுவையாகவும் இருந்தது.
எத்தனை வெளிநாட்டு உணவுகள் நம் உணவு வகைகளில் இடம் பிடித்தாலும் நம் பாரம்பர்யச் சுவைக்கு ஈடு இணை ஏது.
ஒரு இரண்டு மணி நேரம் மழை நேரத்தில் அங்கே அமர்ந்து சூடான உணவுகளை ஒரு பிடி பிடித்து விட்டு, சுவையான அரட்டைகளுடன் வந்தோம்.
கும்பகோணம் போனா இங்கே இரண்டு இடங்களிலும் சாப்பிட்டுப் பாருங்க. சுவையோ சுவைன்னு சொல்லுவீங்க.

திண்டுக்கல் தனபாலன்27 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 10:41
பதிலளிநீக்குபடங்களும் சுள்ளென்று தான் இருக்கிறது சகோதரி... சுவைக்கு வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்கு
sury siva27 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 10:46
வழங்கப்படும் இட்லி, தோசை, சப்பாத்தி, போன்றவை, மிகவும்
ருசியாக இருந்தாலும்,
அவைகளை வைக்கும் தட்டுகள் சரியில்லை என்றாலும்,
சுத்தம் குறைவாக என்பது இல்லை, அந்த தட்டுகளே கரை படிந்து சரியாக கழுவப்படாத நிலையில் இருந்தாலும், நாங்கள் அந்த மாதிரி ஆன உணவகங்களை தவிர்க்கத்தான் செய்கிறோம்.
இங்கே தி. நகர். உள்ள சில பிரபல ஹோட்டல்களும் இது போல ஆகிவிட்டன.
தஞ்சைக்கு செல்லும்போது மெடிகல் காலேஜ் ரோடில் கணபதி நகர் பக்கத்தில் இருக்கும் தேவர் ஹோட்டல் செல்லுங்கள். சுத்தம் எப்படி கடைப்பிடிக்கப்படுகிறது என்பதற்கு ஒரு உதாரணம். வாழை இலை நன்றாக சுத்தம் செய்து அந்த இலையில் தான் பரிமாறுகிறார்கள்.
தகவலுக்கு நன்றி.
சுப்பு தாத்தா.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan13 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 7:47
நன்றி தனபாலன் சகோ
நன்றி சுப்பு சார்.. உண்மைதான் சுத்தம் இல்லாவிட்டால் சுவையும் இல்லை..
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan13 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 7:47
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!