பாரடைஸ் ரெஸார்ட்.
பாரடைஸ் ரெசார்ட்.
கும்பகோணத்தில் ஓவியம், ரிவர் சைட், ஸ்டெர்லிங் ஆகிய ரெசார்ட்டுகளோடு பாரடைஸ் ரெசார்ட்டும் தாராசுரம் தாண்டி தஞ்சாவூர் செல்லும் வழியில் இருக்கிறது.
நாங்கள் சென்ற அன்று பாண்டிச்சேரி செல்லும் வழியில் அங்கே வந்திறங்கிய வெளிநாட்டினர் பஃபே உணவருந்த வந்திருந்தனர்.
அதற்கான உணவுகள் பாரம்பர்ய முறைப்படி மண்ணால் செய்த குமுட்டி அடுப்பு போன்று டிசைன் செய்யப்பட்ட காஸ் அடுப்பில் மண் பாத்திரங்களில் வைக்கப்பட்டிருந்தன.
பீங்கான் தட்டுகளும் கிண்ணங்களும் ஓவனில் இருந்து எடுக்கப்பட்டவை போல சூடாகவும் சுத்தமாகவும் இருந்தன.
நாங்கள் என்னவோ தனியாக ஆர்டர் செய்துதான் சாப்பிட்டோம். சிக்கன் டிக்கா( பல்லு இருக்கவன் பகோடா சாப்பிடலாம் என்பது போல பச்சைக் கறியைக் கூடக் கடித்து ருசித்துச் சாப்பிடுபவர்கள் சாப்பிடலாம். இதில் தந்தூரி மசாலா தூவி க்ரீன் சட்னி வைத்திருந்தார்கள். ) , ஃபிஷ் ஃப்ரை, ( இதுதான் சூப்பரோ சூப்பர் ) .
செஷ்வான் சிக்கன் & எக் ஃப்ரைட் ரைஸ், பனீர் பைனாப்பிள் ரெய்த்தா. இது ரெண்டுமே காரமே சாப்பிடாதவர்களுக்குப் பிடிக்கும். வேணும்னா ரெண்டு பச்சை மிளகாயைக் கொண்டு போய் கடிச்சிக்கலாம்.
எத்தனையோ இருக்க இந்த இரண்டையும் ருசித்துப் பார்போமேன்னு வாங்கினோம். எனக்காவது பனீர் பைனாப்பிள் ரெய்த்தா பிடித்திருந்தது. பட் ரெங்கமணிக்கு எதுவுமே பிடிக்கலை. ( புதுசா ஆர்டர் பண்ணிப் பார்ப்போமேன்னு ஆர்டர் பண்ணி எதுக்கால வைச்சு பாத்துகிட்டு மட்டும் இருந்தோம். :) :) :)
இத பார்சல் பண்ணிக் கொண்டு வரலாம்னா , வீட்டுக்கு வந்தாலும் இதை எல்லாம் நீ மட்டுமே க்ளியர் பண்ணனும்னு ரெங்ஸ் குண்டு போட்டுட்டார். சோ அத எல்லாம் எனக்கு பிடிச்ச வரை சாப்பிட்டுட்டு அப்பிடியே வச்சுட்டு வந்தோம். ஆனால் அந்த ஃபிஷ் ஃப்ரையும், பனீர் பைனாப்பிள் ரெய்த்தாவும் ரொம்ப சூப்பர். ஒரு வேளை ஹாஃப் குக்டா சாப்பிடுறவங்களுக்கும் செஷ்வான் சிக்கன் ஃப்ரைட் ரைஸும், சிக்கன் டிக்காவும் பிடிக்கக்கூடும். ( நம்ம பல்லுக்கு எல்லாம் வயசாயிடுச்சோ என்னாவோ..:) :) :)
இந்தக் காரமில்லாக் காரத்தையே எல்லா ஃபாரினர்ஸும் அஸ்ஸு புஸ்ஸுன்னு கண்ணுல நீர் வராத குறையா குமுறி, செருமி, இருமி சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க..
வீட்டுல செஞ்சு சாப்பிட்டு போர் அடிச்சா மாசத்துல ஒரு நாள் இப்பிடி ஹோட்டல் விசிட் செய்யலாம் . விருப்பப்பட்டத ஆர்டர் பண்ணி சாப்பிட்டா சுமார் 2,000 ரூபாய்க்குள்ள வரும் ரெண்டு பேர் சாப்பிட. ஆனா பஃபே இதவிட கம்மிதான் ..
அங்கே இருந்த டேபிள் அரேஞ்மெண்ட்ஸ் அண்ட் இண்டீரியர் சூப்பர். சுவர் ஓவியங்களும் சூப்பரோ சூப்பர். நம்ம ஊர் ஊறுகாய் ஜாடியை ஒரு ஓரமா வைச்சிருந்தாங்க. கரண்டிகளை சுவற்றில் அலங்காரமா தொங்கவிட்டிருந்தாங்க. சாப்பாடு ஐட்டங்கள் பேரை ஸ்லேட்டுல எழுதி ஒவ்வொண்ணுக்குப் பக்கத்துலயும் வச்சிருந்தாங்க..
சரஸ்வதி, காமதேனு ஆகிய சிலைகள் ஒரு மர அலமாரி மேல அழகுக்காக வைக்கப்படிருந்தது. நாங்களும் இன்னொரு தமிழ் ஃபேமிலியும் தவிர எல்லாரும் வெளிநாட்டினர். வித்யாசமான சூழல்.
வரும் வழியில் சக்கரத்தாழ்வார், விநாயகர், ராமர் பட்டாபிஷேகம்னு பல சிலைகள் அருள் பாலிக்க உண்ட திருப்தியோடு தெய்வங்களைக் கண்டுகளித்தும் வந்தோம்.

திண்டுக்கல் தனபாலன்10 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:34
பதிலளிநீக்குஅழகான ரெசார்ட்... திருப்தியோடு தெய்வங்களைக் கண்டுகளித்து வந்தமைக்கு வாழ்த்துக்கள் சகோதரி...
பதிலளி
cheena (சீனா)10 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:34
அன்பின் தேனம்மை - பதிவு நன்று - படங்கஊகும் விளக்கங்களூம் அருமை - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளி
Thenammai Lakshmanan10 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 5:08
நன்றி தனபாலன் சகோ.
நன்றி சீனா சார்.
பதிலளி
Thenammai Lakshmanan10 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 5:08
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!