குவாலியர் கோட்டையில் . பாகம் 1. புதிய பயணியில்
குவாலியர் என்றதும் நமக்கு சிந்தியாக்கள்தானே ஞாபகத்துக்கு வருவார்கள். பன்னிரெண்டாம் நூற்றாண்டில் மிகப் பெரும் அளவில் நடைபெற்ற சதி என்ற உடன்கட்டை ஏறுதலும் குவாலியர் கோட்டையில் நிகழ்ந்திருக்கிறது. இது இசைக்கலைஞர் தான்சேன் நகரி பிறந்த ஊர் கூட.
மத்தியப் ப்ரதேசத்தில் இருக்கும் குவாலியர் ஒரு மலை நகரம். இந்தியாவின் இதயம் என்று அழைக்கப்படும் இது பள்ளத்தாக்கும் , ஏரியும், சமவெளியும் கலந்து ஒரு அற்புதமான நகரம். ஸ்வர்ணரேகா என்ற ஆறு பாயும் தங்க நகரம். கோவில்கள், அரண்மனைகள், நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகம் ஆகியவற்றோடு கூட நிறைய கல்விக்கூடங்களும் கல்லூரிகளும் தொழிற் பயிற்சி நிலையங்களும் சேர்ந்து பழமையும் புதுமையுமாகக் காட்சியளிக்கிறது குவாலியர். காலை நேரங்களிலேயே வெய்யில் சீராட்டத் துவங்கி விடுவதால் மக்கள் அனைவரும் கண் மட்டும் தெரிய மாஸ்க் போல அணிந்துதான் இரு சக்கர வாகனங்களில் பயணிக்கின்றனர்.
மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும் நிறைந்த மிகப் பெரும் கோட்டை குவாலியர் கோட்டை. ஊரின் பெரும்பகுதியைக் கோட்டைதான் ஆக்கிரமித்திருக்கிறது. கோட்டைகளைக் கைப்பற்றும் போரில் இந்திய மன்னர்களும் அந்நிய மன்னர்களும் முகலாய மன்னர்களும் அதிகம் ஆசை வைத்தது குவாலியர் கோட்டை மேல்தான். உர்வாஹ் சமவெளி வழியாக குவாலியர் வந்தடைந்த மன்னர் பாபர் கோட்டைகளாலான இந்தியாவின் கழுத்து அணிச்சரத்தில் பதிக்கப்பட்ட அழகிய முத்து என்று மகிழ்ந்து பாராட்டினாராம்.
6 ஆம் நூற்றாண்டில் ஹூணர்களும், 9 ஆம் நூற்றாண்டு வரை கூர்ச்சர பிரதிஹரர்களும், பத்தாம் நூற்றாண்டில் கச்வாஹா ராஜபுத்திரர்களும், 11 ஆம் நூற்றாண்டில் டெல்லி சுல்தானிய அடிமை வம்சத்தின் அரசர் குத்புதீன் ஐபக்கும், 12 ஆம் நூற்றாண்டில் சம்சுதீன் அல்டுமிஷும் அரசாட்சி செய்திருக்கிறார்கள். அதன் பின் முகலாயர்களும், 15 ஆம் விக்கிரமாதித்யா என்ற அரசரும், 18, 19 ஆம் நூற்றாண்டில் மராத்தியரின் ஒரு பிரிவினரான சிந்தியாக்களும் (ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் மாதவராவ்ஜி ஷிண்டே )ஆண்டு வந்திருக்கிறார்கள். 17 ஆம் நூற்றாண்டிலிருந்தே ஆங்கிலேயர்கள் இதை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்திருக்கிறார்கள்.
சுதந்திரப் போராட்டத்தில் வீரப் பெண்மணி ஜான்சிராணி லெட்சுமி பாயும், தாந்தியாதோபேயும் இங்கேயிருந்துதான் ஆங்கிலேயரை எதிர்த்திருக்கிறார்கள். ரத்தம் தோய்ந்த கொடும் போர்கள் நிகழ்ந்த இடமும் கூட இது.
விந்திய மலைகளின் மேல் கட்டப்பட்ட நான்கு அடுக்குக் கோட்டை இது. இரண்டு அடுக்குகள் கீழேயும் இரண்டு அடுக்குகள் மேலேயும் தென்படுகின்றன.குவாலியர் கோட்டை, சூரஜ் குண்ட், ஜௌஹார் குண்ட், ,கேசர் குண்ட், பூல் பாக், ஹாத்தி பூல், மன்மந்திர் அரண்மனை, கரண் மஹால், ஜெய்விலாஸ் மஹால், குஜ்ரி மஹால், விவஸ்வான் மந்திர், (சூரியனார் கோயில்) பார்க்கத்தக்கன. இங்கே இருக்கும் கணேஷ் மந்திரில் தான் முதன் முதலாக பூஜ்யம் என்ற எண் கண்டுபிடிக்கப்பட்டு உலகத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டதாகச் சொல்றாங்க.
டிஸ்கி:- ஜனவரி 2015 இல் வெளியிடப்பட்டுள்ள முதல் பயணி இதழில் இந்தக்கட்டுரை பிரசுரமானது. இன்னும் இரு பாகங்களை அடுத்தடுத்து வெளியிடுகிறேன். :)



திண்டுக்கல் தனபாலன்23 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 7:38
பதிலளிநீக்குபடங்களே அசர வைக்கிறது...
பதிலளிநீக்கு
மனோ சாமிநாதன்23 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 12:11
புகைப்படங்களும் தகவல்களும் மிக அருமை! அதுவும் அந்த ஹாத்தி பூல் பிரமிக்க வைக்கிறது!
பதிலளிநீக்கு
Ponchandar23 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 5:46
இந்திய விமானப்படையில் சேர்ந்து குவாலியரில் நான்கு வருடங்கள் இருந்திருக்கிறேன். கோட்டையை பார்த்ததுண்டு..இவ்வளவு விஷயங்கள் எனக்குத் தெரியாது. அருமை....
டைனிங் மேஜையில் இரு ட்ரெயின் உண்டே ! ! !
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan24 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 2:00
நன்றி தனபாலன் சகோ
நன்றி மனோ மேம்
முதன் முதலில் கருத்திட்டுள்ளமைக்கு நன்றி பொன்சந்தர்.
ஓரளவு சுற்றிப் பார்த்தோம். டைனிங் மேஜையில் இரு ட்ரெயின் எங்க இருக்கு.. நாங்க பார்க்கலையே.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan24 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 2:00
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
பதிலளிநீக்கு
Ponchandar25 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 3:09
https://www.youtube.com/watch?v=g7zbL-6ufsI வெள்ளியினால் செய்யப்பட்ட ட்ரெயின் அது. யூட்யூபில் பாருங்கள்