எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 18 ஜனவரி, 2021

குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.

குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.

பெங்களூருவில் என்னக் கவர்ந்த இடம் என்றால் அது லால்பாக்தான். இரண்டு முறை சுதந்திர தினத்தன்றும் குடியரசு தினத்தன்றும் சென்று வந்திருக்கிறேன். போய் அங்கே இருக்க பூ ஒன்று விடாமல் புகைப்படம் பிடிக்க ஆசை. ஆனா அதுல பத்துல ஒரு பங்குகூட எடுக்க முடியல. அவ்ளோ கூட்டம். எடுத்ததிலும் பாதிக்கு மேல ப்ளாப். :) கோணல்மாணலா எடுத்தது அநேகம். அவுட் ஆஃப் ஃபோகஸில் அதில் பாதி. ஓரமா விழுந்திருக்கும் பூக்கள் அதில் பாதி. ஹிஹி அப்ப என்னதான் எடுத்தீங்கன்னு கேக்குறீங்களா. அடுத்து அடுத்த வாரங்களில் நான் எடுத்த படங்கள் வெளிவரும்.

இப்போ குடியரசு தினத்திலும் சுதந்திர தினத்திலும் லால் பாக் சென்றபோது லால்பாகை எடுத்த சில புகைப்படங்களைப் ( பூக்கள் தவிர்த்து - அதன் மெயின் தீம் தவிர்த்துப் ) பகிர நினைக்கிறேன்.

அதோ செண்டர்ல தூரத்துல தெரியுதுல்ல அதுதான்ன் கெம்பே கௌடா டவர் :) நல்லா உத்துப் பாருங்க :)
இதுல இருக்க எல்லா இடங்களுக்கும் கூட்டிப் போகல. சில இடங்களுக்கு மட்டும் அழைச்சிட்டுப் போறேன். :)



மாரி கௌடா சிலை
செண்டர் ஆஃப் சிட்டியில் ( நகரத்தோட நெக்லெஸ்னு சொல்லி இருக்காங்கப்பா ) ஆரம் போல அலங்கரிக்குது. இதுக்கு 3 கேட் இருக்கு.இதை வடிவமைச்சவர் மாரி கௌடா.

ஒவ்வொரு முறை போகும்போதும் பலதை ஃபோட்டோ எடுத்தாலும் முக்கியமான சிலது இதுதான்னு தெரியல. அதுபோலத்தான் கெம்பே கவுடா டவர்ஸ்னு சின்ன பாறைக் குன்று  மேல இருந்ததை என்னவோ ஏதோன்னு எடுக்கலை. முக்கியம்னு நினைச்சதைத் தெரிஞ்சதை எடுத்துருக்கேன்.எல்லாரும் அதை நோக்கிப் போனாலும் டிக்கெட் வாங்குற இடமும் ஜப்பானீஸ் கார்டனும், போன்சாய் கார்டனும் இந்தப் பக்கம் இருந்ததால் இப்பிடிக்கா திரும்பிட்டோம்.

புறா மாடம். ( DOVE COT )

 ஏரி,  ( LAKE )


தாமரைக் குளம், LOTUS POND



ஜப்பானிஸ் கார்டன், JAPANESE GARDEN

 ஃப்ளோரல் க்ளாக் , FLORAL CLOCK

மகாராஜா சிலை,

புதர்ச்செடிகளை வெட்டி உருவமைக்கப்பட்ட கார்டன், TOPIARY GARDEN

  ரோஸ் கார்டன், ROSE GARDEN


சில்க் காட்டன் ட்ரீ,SILK COTTON TREE

 ட்ரீ ஃபாசில், TREE FOSSIL

கண்ணாடி மாளிகை GLASS HOUSE

 இதெல்லாம் பார்த்தேன்.

இதுல அக்வேரியம், பேண்ட் ஸ்டாண்ட், வாட்ச் டவர், ஹார்டிகல்சர் இன்ஃபார்மேஷன் செண்டர், டைரக்டரேட், வாட்டர் ரிசைக்ளிங் ப்ளாண்ட் ஆகிய சிலது பார்க்கல.

ஆனால் எழில் மிகு லால் பாகை எத்தனை முறை வேண்டுமானாலும் போய் பார்க்கலாம். எந்த ஃபோட்டோவைப் போடலாம். எதை விடலாம்னு ஒரே குழப்பம். கைக்கு வந்ததைப் போட்டிருக்கேன். விட்டுப் போனதைஎல்லாம் அடுத்த இடுகையில் தொடர்வேன்.

தினப்படி இங்கே நடைப்பயிற்சியில் நிறையப் பேர் ஈடுபட்டிருக்காங்க.போய் வந்த பின்னும் சுவாசம் முழுக்கப் பூவாசம்.

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.

1.  மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.

2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள். 

4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1

5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2

வந்தே மாதரம் . :) குடியரசு தின வாழ்த்துகள்.  !!

1 கருத்து:

  1. priyasaki26 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 10:42
    படங்கள் எல்லாமே அழகாய் இருக்கு!!.

    பதிலளிநீக்கு

    Someone is Special26 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 3:30
    Arumaiyana Pathipu :)

    Someone is Special

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan26 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 4:48
    நன்றிடா ப்ரிய சகி :)

    நன்றி சம் ஒன் ஸ்பெஷல் :)

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan26 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 4:48
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

    yathavan64@gmail.com26 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 7:02
    நெஞ்சை கொள்ளைக் கொள்ளும் அழகிய படங்கள்!
    அருமை!

    வணக்கம்!

    "இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!"
    ஜெய் ஹிந்த்!

    நன்றியுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    (இன்றைய எனது பதிவு "இந்திய குடியரசு தினம்" கவிதை காண வாருங்களேன்)

    பதிலளிநீக்கு

    'பரிவை' சே.குமார்26 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 11:15
    படங்கள் அருமை அக்கா...

    பதிலளிநீக்கு

    திண்டுக்கல் தனபாலன்27 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 6:21
    ஆகா....! என்னே அழகு...

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்27 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 11:38
    அழகான படங்கள்..... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan30 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 2:35
    நன்றி யாதவன் நம்பி சகோ

    நன்றி குமார்

    நன்றி தனபாலன் சகோ

    நன்றி வெங்கட் சகோ.

    ஜெய் ஹிந்த் . ! இனிய குடியரசு தின வாழ்த்துகள் அனைவருக்கும் :)

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...