எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 7 ஜனவரி, 2021

பாலோடும், பால் மரக்காடும், பால் ஷீட்டுக்களும்.

பாலோடும், பால் மரக்காடும், பால் ஷீட்டுக்களும்.

கேரளாவில் ரப்பர் மரங்கள் நிறைந்த பாலோடுக்குச் செல்ல நேர்ந்தது. குறுமிளகென்ன, பலாமரமென்ன, தேங்காய் எண்ணெயில் பொறித்த நேந்திரம் சிப்ஸ் என்ன  என சுவையும், அழகும் , அசத்தலுமான ஊர். இயற்கை அழகு கொட்டிக் கிடக்கிறது.

அகிலனின் பால் மரக் காட்டினிலே எப்போதோ படித்ததுண்டு. நாம் அழிக்கப் பயன்படுத்தும் ரப்பரில் இருந்து , கூடை, பந்து, காலணிகள் , பைகள், எம் ஆர் எஃப் டயர்கள் வரை இதில் உருவாக்கப்படுகின்றன.

ஹிவியா என்னும் ரப்பர் மரங்களை நம் தோட்டத்தில் முருங்கை மரம் போல வளர்க்கிறார்கள்.

மலைப்பாங்கான பிரதேசம். மரங்கள் எல்லாம் நெடு நெடுவென 40 அடி உயரம் இருக்கும். 2, 3 மாடி உயரம். அதன் அடித்தண்டுகளில் கீறி கொட்டாங்கச்சிகளைக் கட்டி விட்டிருக்கிறார்கள்.

நம் ஊரில் வேப்பமரங்களில் பிசின் வடிந்து ஒட்டிக் கொண்டிருப்பதைப் போல இந்தக் கீறலில் இருந்து வெள்ளையாகப் பால் சொட்டுச் சொட்டாக  இந்தக் கொட்டாங்கச்சிகளில் வடிகின்றன.

 இந்தச் சாறைப் பிடித்து வாளிகளில் ஊற்றி கனமான அலுமினிய ட்ரேக்களில் தண்ணீர் கலந்து ஊற்றுகிறார்கள்.

 உடனே அது நுரையோடு மேலே எழும்பி ஒரு லேயராக நிற்கிறது. இது போல எல்லா ட்ரேக்களையும் குறுக்காக நெடுக்காக ஊற்றி நிரப்புகிறார்கள்.

இது வெய்யிலில் காய்ந்துகொண்டே இருக்கிறது.  நன்கு காய்ந்து தண்ணீர் உறிஞ்சப்பட்டதும் இந்த ரப்பர் ஷீட்டுக்களை ட்ரேக்களில் இருந்து பிரித்து கொடிகளில் முதலில் நிழற்காய்ச்சலாக உலர்த்துகிறார்கள்.

முதலில் வெள்ளை நிறத்துடன் இருக்கும் இந்த ஷீட்டுக்கள் திரும்ப வெய்யிலில் உலர்த்தப்படுகின்றன.உலர உலர இவை லேசான அரக்கு நிறம் பெறுகின்றன.

இந்த ஷீட்டுக்களை பக்கத்தில் இருக்கும் தொழிற்கூடத்தில் கொஞ்சம் டானிங் வேலைகள் செய்து வண்டியில் அடுக்கி மொத்தமாக இந்த ஷீட்டுக்களை வாங்கும் நிறுவனத்துக்கு எடுத்துச் செல்கின்றார்கள்.

விதைகள் ஊன்றிவிட்டால் போதும். தங்களை வடித்துச் சொட்டுச் சொட்டாய் இவர்களுக்குப் பணத்தைத் தந்தபடி இருக்கின்றன ஒவ்வொரு ரப்பர் மரங்களும். மெல்ல மெல்ல அவற்றிலிருந்து இலைகள் உதிர்ந்து வசந்த காலத்தை அழகாக்கியபடி இருந்தது.

1 கருத்து:

  1. ஸாதிகா20 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:05
    அறிந்திராத காட்சிகளை படங்களாக்கி பகிர்ந்தமைக்கு நன்றி தேனு.

    பதிலளிநீக்கு

    திண்டுக்கல் தனபாலன்20 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:11
    படங்களுடன் விளக்கம் அருமை சகோதரி...

    பதிலளிநீக்கு

    Unknown20 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 3:14
    marathil irunthu pall eduthu oru periya drum la antha palai vuthi 1\4class asid kalapanga.asid & kuripita alavu water kalanthu athai oru try la vuthi adukaka vaithu viduvargal.marunal kalayil antha pall kattiyaga irukum naam vutriya thannir athil thalumbi irukum.athan pin antha kattiyana rubberai nangu nasuki periya vadivam agum.athanai line illatha plain misin la potu illupanga.athan pin line ulla rolar misin la pottu eduthathum athan thickness aga irukum.(naam misin la potu illukum pothe naam vuthiya thannir ellam velivarum).udane antha rubber sheetai veliyil ulla kodiyil eram pogum varai kaya vaipargal.eram kaintha pin athanai aru araiku eduthu sentru thee mooti antha theeyin vetkai antha sheetil pada athu oru nira kalaragamarum.udane athanai 100 count sheet aga aduki pack panni anupuvanga.

    பதிலளிநீக்கு

    அம்பாளடியாள் 20 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 3:52
    மிக மிக அருமையாகவுள்ளது படங்களுடன் கூடிய விளக்கம் !!
    வாழ்த்துக்கள் இன்னும் இது போன்ற பகிர்வுகள் தொடர வேண்டும் .
    மிக்க நன்றி தோழி பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு

    பெயரில்லா20 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 5:03
    வணக்கம்
    சிறப்பான பதிவு சிறப்பான விளக்கம் அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan21 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:03
    நன்றி ஸாதிகா

    நன்றி தனபாலன் சகோ

    நன்றி சுடலை சார்.. ரப்பர் ஷீட் உருவாகும் விதத்தை விளக்கியமைக்கு நன்றி.

    நன்றி அம்பாளடியாள்

    நன்றி ரூபன் சார்.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan21 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:03
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை

 காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை  திருநெல்வேலியைச் சேர்ந்த நெல்லை உலகம்மை என் அன்புத்தோழி. கல்வி ஆலோசகர், சிறப்புப் பேச்சாளர், தன்னம்பி...