அபாய அழகோடு ஒரு அணை.
தூரத்தில் மனிதர்கள் இறங்கிக்கொண்டிருக்கிறார்கள். |
மாலையில் கோவளம் பீச் செல்லும் வழியில் இப்படி ஒரு அணை போன்ற ஒன்று இருக்கு. அதன் மேல் பக்கங்களிலேயே வீடுகளும் இருக்கு.ஹைவேஸ் ரோடு போல இருக்கு. அந்த ரோட்டின் மேலே பாலம். அதிலிருந்து எட்டிப்பார்த்து இந்தப்புகைப்படங்களை எடுத்தேன்
அபாயமான அழகோடு இருந்தது அந்த இடம். ஒரு அணை/ நீர்த்தேக்கம் எப்பிடி வேணாலும் சொல்லலாம்.
பசுமை சூழ ஆழத்தில் தண்ணீர். ரகசியம் பொதிந்த இடம் போல் ஒரு வசீகரக் கவர்ச்சி.
அபூர்வமான அமைப்பில் அமைந்திருந்த அதன் பக்கங்களில் பாறை போன்ற அமைப்புகள் இருக்கு. இது இயற்கையானதா உருவாக்கப்பட்டதான்னு தெரியல.
ஆனா வீடுகளும் அமைந்து கீழேஏஏ பள்ளத்தில் தண்ணீரும் தெரிவதால் இது இயற்கையானது என்றுதான் தோன்றுகிறது.
இதன் பெயர் எல்லாம் தெரியல. ஆனால் தூரத்தில் ஒரு பக்கமாக சிலர் அந்தத் தண்ணீரில் இறங்கிக்கொண்டிருப்பது கண்ணில் பட்டது.
அவரது காரை நிறுத்திவிட்டு அந்தத் தென்னை மரங்கள் சூழந்த சோலை போன்ற இடத்தில் அமைந்த அழகான அந்த நீர்த்தேக்கத்தைப் படம் பிடித்து வந்தோம்.
யாராவது இந்த நீர்த்தேக்கத்தின் பெயர் தெரிந்தால் சொல்லுங்கள் இது திருவனந்தபுரத்திலிருந்து கோவளம் பீச் செல்லும் வழியில் இருக்கு.
டிஸ்கி :-
இதையும் பாருங்க.
1. ஒற்றை ஆள்.. தயாபாய். சமூகப் புரட்சியாளர். OTTAYAAL. DAYABAI SOCIAL ACTIVIST.
2. மனமாச்சர்யங்களை உடைப்போம். அணைகளை அல்ல.
3. காலால் வரையும் சாதனை ஸ்வப்னா..
4. கொள்ளை கொள்ளும் கேரள வீடுகள்.
5. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.
6. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)
7. இன்னும் கொஞ்சம் இன்னெழில் கொஞ்சும் கேரளா.
8. பாலோடும், பால் மரக்காடும், பால் ஷீட்டுக்களும்
9.கேரளா கொச்சு வெளி பீச்சில் பெண் சிற்பங்கள்..
10. கேரளா சோழா & ஹைலாண்ட்.
11. தங்கச்சிகரம். பொன்முடி :- ஷெனாய் நகர் டைம்ஸ் பத்ரிக்கையில்.
12. கண்ணகி கோயில் பூக்கள்.
13. ஆற்றுக்கால் பகவதி கோயிலில் அகிலம் புகழும் பொங்காலை.
14. அபாய அழகோடு ஒரு அணை.
”தளிர் சுரேஷ்”4 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 3:45
பதிலளிநீக்குஅழகான படங்கள்! இயற்கை எழிலை ரசித்தேன்! நன்றி!
பதிலளிநீக்கு
வெங்கட் நாகராஜ்4 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 9:06
அழகான படங்கள்...... பார்க்கவே ரம்மியம். ஆனாலும் அதில் ஒரு அபாயம்!
பதிலளிநீக்கு
துபாய் ராஜா5 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 9:01
கல் வெட்டி எடுக்கப்பட்டு பின் கை விடப்பட்ட குவாரி போல் தெரிகிறது.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan7 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 1:57
நன்றி தளிர் சுரேஷ் சகோ
நன்றி வெங்கட் சகோ.
இருக்கலாம் துபாய் ராஜா சகோ. !!!!!!!!
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan7 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 1:57
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!