எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 3 ஜனவரி, 2021

சிங்கங்களும் பெண் வில்லாளிகளும்.

சிங்கங்களும் பெண் வில்லாளிகளும்.

இரண்டு பெண் சிங்கங்களின் மேல் அமர்ந்த நிலையில் இரண்டு பெண் வில்லாளிகளின் சிற்பத்தை ஒரு பேட்டிக்காக சென்ற போது சென்னை அடையாறு திரு வி க பாலத்தில் பார்த்தேன்,

வழக்கம் போல காமிராவில் சுட்டுட்டு வந்தேன். சிமிண்டினால் ஆன சிற்பங்கள் தான். பாலத்தின் இருபுறமும் உள்ளன. ஆனால் அந்தப் பெண்கள் யார்.. ஏன் சிங்கம் பாலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை ஒவ்வொரு ஊரிலும் எல்லைக் காளி, எல்லைப் பிடாரியம்மன் கோயில் , கருப்பர், முனீஸ்வரன், முனியையா கோயில் இருப்பது போல காவல் தெய்வங்களா. அல்லது  யதேச்சையாய் வடிவமைக்கப்பட்ட சிற்பங்களா எனத் தெரியவில்லை.


பெண் புலி என்போம், பெண் சிங்கம் என்போம்.. இதில் சிங்கத்தில் அமர்ந்து வில்லேந்திய பெண்கள் . இது ரொம்ப என்ன ஈர்த்தது. வீரப் பெண்கள்.

இது பற்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் கூகுள் செய்தால் அடையாறு பாலத்தின் போக்குவரத்து இட நெருக்கடி பற்றித்தான் செய்திகள் இருக்கின்றன. தற்போதைய புதிய பாலம் பற்றியும் இருக்கிறது.

1973 இல் கட்டப்பட்ட இந்தப் பாலம் மலர் மருத்துவமனைக்கு அருகில் இருக்கிறது. இதைக் கடந்தால் ஆந்திர மகிள சபா இருக்கிறது.

இது பற்றி முகநூலில் வினவிய போது சென்னை அடையார் பிரிட்ஜும் அதைக் காக்கும் சிங்கங்களும் என்று கூறினார்கள் . பக்கத்துலேயே செட்டிநாடு பேலஸ் இருக்கு.. அதன் தொடர்பாக ஏதும் அமைக்கப்பட்டிருக்கா எனக் கேட்டார்கள். பதில் தெரியவில்லை . தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

1 கருத்து:

  1. திண்டுக்கல் தனபாலன்3 மே, 2013 ’அன்று’ முற்பகல் 10:52
    சிற்பங்கள் அழகு...

    புதிய தகவலுக்கு நன்றி சகோதரி...

    பதிலளிநீக்கு

    A. Manavalan3 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 3:01
    Pen Singham illamal eppadi Singha kuttigal varum. Singham. Puli pontravai veeramaga adutha uyirinangalai thanakku unavaakki kolvathal avattrai veeramana piraanigalaga makkal pesukiraargal.

    Ivaigalidamirunthu thaan aduthavargalai eppadi vayitril adithu thaan munneruvathu enbathai manithan kattrukondaanoo ?, antha vagai perumaikkaga intha maathiri silai undaaki irukkalaamo ?

    Aayvu katturai. Therinthavargal kooruvargal athan kathayai en ippadi vaithullargal entru.

    பதிலளிநீக்கு

    மாதேவி3 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 6:05
    அழகிய சிற்பம்.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan23 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 6:56
    நன்றி தனபாலன்.

    நன்றி மணவாளன் சார்.

    நன்றி மாதேவி.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan23 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 6:56
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...