எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 23 ஜனவரி, 2021

கொள்ளை லாபம் தரும் கோழிக்கொண்டைப்பூ

கொள்ளை லாபம் தரும் கோழிக்கொண்டைப்பூ

பிரம்மாண்டக்கோழிக்கொண்டைப்பூக்களைப் பார்த்திருக்கீங்களா. லால்பாகில் மலர்க் கண்காட்சியில் பார்க்கலாம். கதம்பத்துல கட்டுவாங்க மாலையாக்குவாங்க. இங்க பிரம்மாண்டமா விரிஞ்சு முதலிடத்தை வேற தட்டிக்கிட்டுப் போயிருக்கு இந்தக் கோழிக்கொண்டைப்பூ. :)
நம்மூருல திருவிழான்னா உற்சவர் சாமிக்குச் சாத்துற மாலையில் கட்டாயம் இடம்பெறும் பூக்களில் ஒன்று கோழிக்கொண்டை.



அதுவும் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் அழகர் சூடிய மாலையில் எடுப்பாகத் தெரிவது கோழிக்கொண்டைதான். வாடமல்லி போல வாடாத பூ இது.


இதை வெல்வெட் பூன்னும் சொல்றாங்க. உண்மைதான் வெல்வெட் மாதிரி மெத்து மெத்துன்னு இருக்கும். வாடி உதிர நாளாகும் சொல்லப் போனா பல மாதங்களாகும்.

மாலையில் இருக்கும் எல்லாப் பூவும் வாடின பின்னாலும் கூட  இது மாலையில் உள்ள நூலோடு விடாப்பிடியா உறவாடிக்கிட்டு இருக்கும். :)

////”90 நாட்கள் மட்டுமே மகசூல் தரக்கூடிய ஒரு போகப் பயிர் இது. நாற்றங்கால்ல 15 நாள், பூத்து வர்றதுக்கு 35 நாள்னு மொத்தம் 50 நாள்ல மகசூலுக்கு வந்துடும். வாரம் ரெண்டு, மூணு முறை பறிக்கலாம். ஏக்கருக்கு மொத்தமா 3 ஆயிரம் கிலோ மகசூல் கிடைக்கும். சராசரியா ஒரு கிலோ 15 ரூபாய் விலையில விற்பனை செஞ்சாலே… 45 ஆயிரம் ரூபாய் வருமானமா கிடைக்கும். செலவு 15 ஆயிரம் ரூபாய் போக, 30 ஆயிரம் லாபமா கையில நிக்கும்” என்று சிக்கன விவசாயம் பத்தி ரமேஷ் என்ற திருப்பூர் மாவட்ட விவசாயி சொல்லி இருக்கார் ஒரு பத்ரிக்கைக்கு.///


இதுவும் வாடாமல்லியும் விதை தூவாமலே தானே எங்க தோட்டத்துல பூத்துக் கிடந்தது. இங்கே லால்பாகில் இது பிரம்மாண்டமா பூத்துக் குலுங்கி இருக்கு கண்காட்சியில்.


எனவே தோட்டம் இருக்கவங்க கோழிக்கொண்டையை வளர்க்கலாம். பூவைத் தூவினாலே செடி முளைக்கும் என நினைக்கிறேன். வாடாமல்லி போல. தண்ணீர் ஊற்றத் தேவையில்லை, மண்ணில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சி வேலியோரமாக வளர்ந்து அழகு கொடுக்கும் அந்தி மந்தாரை , வாடாமல்லி போல :) எப்பிடி லைன் கட்டி நின்னு ஃபர்ஸ்ட் ப்ரைஸ் அட்டையை கம்பீரமா பிடிச்சுக்கிட்டு நிக்குதுங்க பாருங்க :)

காலிஃப்ளவர் சைஸ் கோழிக்கொண்டைப்பூக்கள். !!!!!!!!!!!!!


டிஸ்கி:- இவற்றையும் பெங்களூருவில் பாருங்க.

1.  மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.

2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள். 

4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1

5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2

6. மஞ்சள் முகமே வருக. (LAL BAGH )

7. குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.

8. இன்னும் சில ஒற்றையர்கள் பாகம் 3

9.  காதல் ரோஜாவே. -- பாகம் 4

10. காதல் ரோஜாவே..-- பாகம் 5
 

1 கருத்து:

  1. Thenammai Lakshmanan23 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 10:24
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

    திண்டுக்கல் தனபாலன்23 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 10:26
    அழகிற்கு மேலும் அழகு சேர்ப்பது இது தான்...

    பதிலளிநீக்கு

    'பரிவை' சே.குமார்23 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 11:18
    அழகான படங்கள்...

    பதிலளிநீக்கு

    Thulasidharan V Thillaiakathu24 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 12:31
    ரொம்ப அழகாக இருக்குங்க எல்லா பூக்களும்...செம!

    பதிலளிநீக்கு

    magiceye24 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 6:50
    Beautiful flowers.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan25 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 2:01
    நன்றி டிடி சகோ

    நன்றி குமார் சகோ

    நன்றி துளசி சகோ

    நன்றி மாஜிக் ஐ.!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...