எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 17 ஜனவரி, 2021

கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.

கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.

கொஞ்சம் ஆன்மீகம்  ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.

ஒரு முறை ட்ரெயினில் சென்று கொண்டிருந்தபோது வானத்தில் மேகங்கள் ஆஞ்சநேயர் உருவிலும் சஞ்சீவி மலை உருவிலும் தென்பட்டது. உடனே காமிராவை எடுத்து ( டூஃபான் மெயிலில் செல்லும் சம்பல் கொள்ளைக்காரி என்ற நினைப்பு :) ) சுட்டது இது.
காரைக்குடி முனியையா கோயிலில் உறவினர் ஒருவர் அபிஷேகத்துக்குக் கொடுத்திருந்தார். அங்கு சென்ற போது அர்ச்சகர் இந்தப் பாவை விளக்குகளைப் பக்கம் வைத்தவாறு சாமிக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தார். எடுக்கலாமோ என்று தயக்கத்துடன் பார்த்துவிட்டு ரகசியமாய் சுட்டது இது.

மகாபலிபுரம் இரதங்கள் இது ஆன்மீகத்தில் சேருமா எனத் தெரியவில்லை. ஆனால் கடற்கரைக் கோயில்கள் என்று சொல்லப்படுவதால் இந்த லிஸ்டில் சேர்த்துள்ளேன். இது தம்பதியினர் ஜோடியாக நிற்கும் உணர்வைக் கொடுத்தது எனக்கு.

திருக்கடையூர் சென்ற போது மதியம் கோயில்  சாத்தி இருந்தது. வெளியே பெருங்கூட்டம்.  4 மணிக்குத்தான் வெளி நடையே திறந்தார்கள். அதுவரை காத்திருந்தபோது கோயிலுக்கு ஒருவர் இந்த தென்னம் கீற்றுத் தோரணங்களைக் கொண்டு வந்தார். அலுவலகத்தில் இதைக் கொத்தாகப் பிடித்தபடி நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது நவராத்திரி சமயம். மிக அழகாக இருந்ததால் எடுத்தேன்.

தாராசுரம் தொல்லியல் துறையினால் நிர்வகிக்கப்படுகிறது. தஞ்சைப் பெரிய கோயில் கூட. எனவே அதிகம் தீபதூபம் இல்லை. கல்லால் கட்டப்பட்ட புராதனப் பாரம்பர்யக் கோயில்களை அதன் இயல்பிலேயே நிலை நிறுத்தப் பாதுகாத்து வருகிறார்கள். சுற்றிலும் பூஞ்சோலையும் பூந்தோட்டமுமாக கண்ணைக் கவருகிறது கோயில். அம்மன் தனிக் கோயிலிலும், சிவன் தனிக் கோயிலிலும் உறைந்திருக்கிறார்கள். சிவன் கோயில் பிரகாரத்தில் இந்தத் தூண்களின் அணிவகுப்பு கவர்ந்ததால் எடுத்தேன்.  கும்பகோணம்  ஏரியாவில் நிச்சயம் தரிசிக்க வேண்டிய கோயில்களில் ஒன்று இது.

டிஸ்கி :- இது எனது 1,000 ஆவது இடுகை. நன்றி மக்காஸ் தொடர்ந்த ஆதரவுக்கு :)

1 கருத்து:

  1. திண்டுக்கல் தனபாலன்19 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 9:25
    வாழ்த்துக்கள் சகோதரி...

    பதிலளிநீக்கு

    MADURAI NETBIRD19 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 11:13
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

    'பரிவை' சே.குமார்19 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 6:50
    1000க்கு வாழ்த்துக்கள்....
    படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு

    ராமலக்ஷ்மி19 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 8:29
    ஆயிரம் பதிவுகள்! மனமார்ந்த வாழ்த்துகள் தேனம்மை:)!

    எல்லாப் படங்களும் அருமை. பிரகாரத்தின் படம் மிகவும் கவருகிறது.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan21 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 2:41
    நன்றி தனபால்

    நன்றி மதுரை நண்பன்

    நன்றி குமார்

    நன்றி ராமலெக்ஷ்மி


    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan21 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 2:41
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

    cheena (சீனா)22 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 3:09
    அன்பின் தேனம்மை - ஆயிரமாவது பதிவினிற்கு நல்வாழ்த்துகள். படங்கள் அத்த்னையும் அருமை - பிரகாரம் சூப்பர் - அப்படியே கண்னைக் கவரும் படம்,

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு

    டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 22 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 8:13
    ஆயிரம் தொட்ட அபூர்வ பதிவர்களில் ஒருவராகி விட்டர்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை

 காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை  திருநெல்வேலியைச் சேர்ந்த நெல்லை உலகம்மை என் அன்புத்தோழி. கல்வி ஆலோசகர், சிறப்புப் பேச்சாளர், தன்னம்பி...