குங்குமம் தோழியில் ”கீரை மண்டி..”
குங்குமம் தோழியின் சமையல் இணைப்பில் சமையல் டிப்ஸும், ( வத்தக்குழம்பு/புளிக்குழம்பு/கெட்டிக்குழம்பு வைக்கும்போது ஒரு ஸ்பூன் சீனியையும் வறுத்து க் குழம்பு வைத்தால் ருசி கூடுவதோடு குறைந்த அளவு எண்ணெயே போதும். அந்த எண்ணெயும் சீக்கிரம் பிரிந்து விடும். )
அகத்திக்கீரை/சுக்குடிக் கீரை மண்டியும். அகத்திக் கீரை அல்லது சுக்குடிக் கீரை ( மணத்தக்காளிக் கீரை )யை ஒரு ஸ்பூன் எண்ணெயில் சின்ன சீரகம், சின்னவெங்காயம் 10 உரித்துப் போட்டு வதக்கி அரிசி களைந்த திக்கான தண்ணீர் விட்டு வேகவைத்து கால் கப் தேங்காய்ப் பால ஊற்றி இறக்கவும்.
இத சாப்பிட்டா வாய்ப்புண் வயிற்றுப் புண் ஆறும். எனவே செய்து குடிச்சுப் பார்த்துட்டு சொல்லுங்க.

திண்டுக்கல் தனபாலன்26 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 8:58
பதிலளிநீக்குவீட்டில் வாரம் ஒரு முறை தருவார்கள்...
அது என்னவோ தெரியலே.. உடம்பு முழுவதும் அந்தக் கீரையை கட்டிப்பிடித்தது போலேவே இருக்கும் (மதியம் சாப்பிடும் வரை...!)
பதிலளிநீக்கு
சாந்தி மாரியப்பன்26 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 10:23
நல்ல டிப்ஸ்தான். ஆனா இங்கே அகத்தி கிடைக்காதே, பாலக்கில் செஞ்சாலும் பலன் உண்டான்னு சொல்லுங்க தேனக்கா :-)
பதிலளிநீக்கு
VOICE OF INDIAN26 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 10:42
அகத்திக்கீரை --தேன்
பதிலளிநீக்கு
Jaleela Kamal26 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 11:16
மிக அருமையான டிப்ஸ் , வாழ்த்துகக்ள் தேனக்கா
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan26 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 11:48
ஹாஹா வித்யாசமா இருக்கே தனபால்..:)
சாந்தி இத அகத்திக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, முளைக்கீரை, மணத்தக்காளிக் கீரை , ( இத மிளகு தக்காளிக்கீரைன்னும் சொல்வாங்க., சுக்குடிக் கீரைன்னும் சொல்வாங்க. ) , சிறு கீரை, அரைக்கீரையில் செய்யலாம்..
பாலக்கில் மசியல் செய்யலாம். இத நான் செய்து பார்த்ததில்லை.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan26 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 11:49
நன்றி பாலா
நன்றி ஜலீலா :)
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan26 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 11:49
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
பதிலளிநீக்கு
கோமதி அரசு26 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 6:10
குங்கும தோழியில் கீரை மண்டி வந்தைமைக்கு வாழ்த்துக்கள்.
எல்லா காயிலும் மண்டி செய்வீர்கள் அல்லாவா!
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan4 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 7:31
நன்றி கோமதி.. எல்லாக்காயிலும் அல்ல குறிப்பிட்ட சில காய்களில் மட்டும்.
பொதுவா கீரை மண்டி வேறு. மற்ற மண்டிகள் வேறு. கீரையில் தேங்காய்ப் பால் மற்றும் அரிசி களைந்த நீர்.
மற்ற மண்டிகளில் பொதுவாக நாட்டுக்காய்களுடன் அரிசி களைந்த நீரும், புளியும் பச்சைமிளகாயும் வெந்தயம் பெருங்காயமும் சேர்ப்போம்