எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 30 ஜனவரி, 2021

சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு.

சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு.

மணி இரண்டாகப் போகுது . பசி வயித்தைக் கிள்ளுது. சிங்காநல்லூர் ரோட்டில் ஆட்டோ பறந்துகிட்டு இருக்கு.  இன்னும் வேகமா போனாத் தேவலை.

சாப்பாடு சாப்பாடுன்னு வயிறு கூப்பாடு போடுது. சிங்காநல்லூர் சிக்னல்ல நிக்கிது வண்டி. இன்னும் கொஞ்சம் தூரம்தான்னு சமாதானப்படுத்திட்டு ட்ராஃபிக்கைப் பார்த்துட்டு இருக்கோம்.

டக்குன்னு கிளம்புது வண்டி . அடுத்த ஐஞ்சாவது நிமிஷம் ஷாந்தி கியர்ஸ் வாசல். யே யப்பா என்னா பிரம்மாண்டமா இருக்கு.

இங்க ஒரு பெட்ரோல் பங்க் இருக்கு. இங்கேதான் ரங்கமணி பெட்ரோல் போடுவார். ஏன்னா என்ன விலை ஏறினாலும் ஸ்டாக் தீரும்வரை பழைய விலைதான்.

அதே போல மருந்துகளும் ரீடெய்ல் விலையை விட 20 பர்சண்ட் குறைத்துக் கிடைக்கும் என வாங்குவார்.

அங்கே ஒரு முறை சாந்தி காண்டீனில் சாப்பிட்டதாகவும் விலை மிகக்குறைவாக இருந்ததாகவும் சொன்னார். பலமுறை கோவை சென்றும் போக இயலவில்லை . ஆனால் போனமாதம் ஒருநாள் செல்ல வாய்ப்புக் கிட்டியது. ஆனால் மணியோ இரண்டை நெருங்கிட்டிருந்தது. சாப்பாடு மிச்சம் இருக்குமா.

3000 பேருக்குத்தான் டோக்கன் கொடுக்கப்படுமாம். முதலில் வருபவர்களுக்கு அனைத்தும் கிடைக்கும். கடைசியில் வந்தால் வெரைட்டி ரைஸ்தான் கிடைக்கும். என்றார். ஒரே பதக் பதக்.

ஆட்டோவுக்கு 200 ரூ செலவழித்து ( ஆர் எஸ் புரத்திலிருந்து   இன்னிக்குத்தான் போணுமா இன்னொரு நாள் போலாமே என்ற விவாதங்களில் இருந்து தப்பி என் பிடிவாதத்துக்காக ) 20 ரூபாய் சாப்பாடு சாப்பிடச் சென்றோம். :)

கிடைச்சுச்சோ தப்பிச்சேன். இல்லாட்டி என்ன செய்ய . ரங்க்ஸுக்கும் எனக்கும் நல்ல பசி. உள்ளே நுழைந்தால் அப்பாடா இன்னும் போர்டு ஒளிர்ந்தது. 350 டோக்கன் இருப்பதாக.

அட இதென்ன அனுமார் வாலாட்டம் க்யூ. 400 பேர் இருக்கும் போலிருக்கே. வண்டி நிறுத்தும் இடங்களில் எல்லாம் வரிசை. க்யூ நகர்ந்தது. திருப்பதி க்யூ மாதிரி. பெருமாளே இன்னிக்கு அன்னம் கிடைக்குமா. என நகர நகர கிட்டத்தட்ட 35 ஆவது டோக்கன் பாக்கி இருக்கும்போது உள்ளே நுழைந்தோம்.  வெரைட்டி ரைஸ்தான் கிடைக்குமோ..

அந்த சீட்டைக் கொடுத்து பஞ்ச் பண்ணி திரும்ப வரிசையில் நுழைந்தால் டப் டப் என ஒரு கிண்ணத்தில் தட்டிய தயிர்சாதமும் , ஒரு கப் புலவும் கிடைத்தது.

மிகப் பெரும் உணவு அரங்கம். ருசி மிகுந்த உணவுகள். வைக்கப்பட்டிருப்பதோ சுத்தமும் சுகாதாரமும் மிகுந்த சில்வர் ப்ளேட்டுகள், கப்புகளில். தண்ணீர் ஜக்கும் டம்ளர்களும் கூட மின்னின.

ஆனால் உட்காரத்தான் இடமில்லை. ஜாதி மத இன பேதமற்று சமரசம் உலாவும் இடமாக இருந்தது. ஒரு வழியாக சீட்டைப் பிடிச்சோம். அப்பாடா அரசாங்கத்துல ஒரு சீட் கிடைச்சிருந்தா கூட இப்பிடி சந்தோஷம் இருக்காது.

சாப்பிட்டதும் சென்று சிறிது ப்ளெயின் ரைஸ், சாம்பார், மோர், கீரை வாங்கி சாப்பிட்டோம். அவ்ளோதான் இருந்தது. ஆனால் வயிற்றுக்குப் போதுமான அளவு கிடைத்தது.

திருப்தியுடன் வெளியே வந்து ஒரு ஐஸ்க்ரீமை வெட்டினோம். பார்க் போல மக்கள் கும்பல் கும்பலாக உக்கார்ந்திருந்தார்கள். ஐஸ்க்ரீமுக்கும் க்யூ.  ஒன்றை வாங்கி ரங்க்ஸும் நானும் சாப்பிட்டோம். இல்லாட்டி வெயிட் போட்டுடும்ல. :) 
அடிதடி இல்லாக் கூட்டம்.  மெல்லிய இசை, ஏசி.!!!

முந்திரி , கிஸ்மிஸ் போட்ட புளிப்பில்லாத தயிரன்னம் அருமை. புலவும் தயிர்ப்பச்சடியும் கூட. 


அதன் பின் சாப்பிட்ட ப்ளெயின் ரைஸ், கீரை ,சாம்பாரை ஃபோட்டோ எடுக்கல.
நமக்குப் பிடிச்ச கசாட்டா.
ஒரே கப்புல ரெண்டு ஸ்பூன் :) நட்ஸ் எல்லாம் நமக்கு, ஐஸ்க்ரீம் ரங்க்ஸுக்கு. நல்ல பாகப் பிரிவினை இல்ல :)

அப்புறம் இந்த சாந்தி கியர்ஸ் பத்தி சில விஷயங்கள்.

இதன் உரிமையாளர் சுப்ரமணியன் இதை சேவை நோக்குல நடத்திக்கிட்டு வர்றார். 2010 லேருந்து இயங்குது. இது முதல்ல இங்கே இருக்குற மருத்துவமனையில் டயபடீஸுக்காக வெறும் வயித்துல ப்ளட் டெஸ்ட் செய்றவங்க அதன் பின் ( உணவு சாப்பிட்டுவிட்டு டெஸ்ட் எடுப்பதற்காக )  சாப்பிட ஆரம்பிக்கப்பட்ட உணவகம். பொதுமக்களுக்கும் இப்போ சேவை ஆற்றுது.

பார்சல் இல்லை. ஆனால் பள்ளிக்கூடப் பிள்ளைகள் ஐடியை காட்டினா பார்சல் உண்டு. வேலைக்குப் போற பெரும்பகுதி மக்கள் இங்கே சாப்பிடுவதைக் காண முடிந்தது. குறைஞ்ச விலையில் நிறைஞ்ச சாப்பாடு. கடைசி வரைக்கும்.

வண்டி நிறுத்த, பிள்ளைகள் விளையாட , பொதுமக்கள்  அமர இடம் இருக்கு. காலை மாலை இரவு உணவுகள் கிடைக்குது. சுகாதாரமான ரெஸ்ட் ரூம்ஸ் உண்டு. தினம் 15,000 பேர் பயனடையிறாங்களாம். ஹெர்பல் ஜூஸ், பன், ப்ரெட் எல்லாம் கூடக் கிடைக்குதாம்.

இங்கே 24 மணி நேரமும் மருந்து வாங்கலாம். மருத்துவ வசதிகளும், டயாலிஸிஸ் போன்றவையும் 70% வரை மற்ற இடங்களை விடக் குறைவான தொகையில்  கிடைக்குது.

இவ்வளவு சேவைகளைச் செய்யும் அந்த நல்ல உள்ளம் படைத்த மனிதர் புகழ் வெளிச்சத்துக்கு வர விரும்பவில்லை என்பதே மிக ஆச்சர்யமளிக்கும் தகவல்.

--- இந்த உணவகத்துக்கு உணவு தயாரிப்புக்காகத் தினமும்  பூண்டு உரித்துக் கொடுக்க மிஷின் வாங்கி இருக்கும் நிறுவனத்தை ரங்க்ஸ்  வங்கி தணிக்கை அதிகாரியாகப் பார்வையிடச் சென்றார்.  அட பூண்டு உரிக்கிறதுக்குக் கூட  மிஷின் இருக்கா என ஆச்சர்யத் தகவல்., அது போக அப்பிடியாப்பட்ட உணவகத்தைப் பார்க்கணுமே என்ற ஆவல் உந்தித் தள்ளவே அவசரமாகச் சாப்பிடச் சென்றேன் என்பது கொசுறுத் தகவல் :)

நாவுக்கும் மனதுக்கும் பர்ஸுக்கும் இனிய சாத்வீக சாப்பாடு போட்ட சாந்தியே நீ வாழ்க. வளரட்டும் உன் சேவை :)

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1.  சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு.

2.மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா..

3. பாரடைஸ் ரெஸார்ட். 

4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி) 

5.  ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.

6.  கேரளா சோழா & ஹைலாண்ட். 

7.கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :-

8.  பார்பக்யூ நேஷன் 

9. மை ப்ளேஸ்.

10.   குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :-

11. பிகேஆரும் இண்டர்காமும். :-

12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.

13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.

14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS) 

15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.

16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து. 

17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி . 

18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.

19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்‌ஷனும். 

20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.

21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.

22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி. 

23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.

24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

25. ழ வில் வலைப்பூ வடை...

26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.  

27. ஜெய்னிகா & கார்மெட். 

28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு. 

29.  சமணர் படுகையும் சாந்தி இன்னும்.

1 கருத்து:

  1. Thenammai Lakshmanan30 டிசம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 1:53
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

    ஸ்ரீராம்.30 டிசம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 7:02
    வாழ்க அவர்.

    பதிலளிநீக்கு

    விஸ்வநாத்30 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 1:23
    அருமை அற்புதம்.

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்30 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 10:00
    இந்த உணவகம் பற்றி முன்னரே படித்திருக்கிறேன். நல்ல மனம் கொண்ட உரிமையாளர் வாழ்க....

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan8 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 6:44
    நன்றி ஸ்ரீராம்

    நன்றி விசு சார்

    நன்றி வெங்கட் சகோ

    பதிலளிநீக்கு

    Unknown28 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 10:54
    கடவுள்

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...