எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 19 ஜனவரி, 2021

காதல் ரோஜாவே. -- பாகம் 4

காதல் ரோஜாவே. -- பாகம் 4

இருமுறை சென்ற போதும் லால்பாகில் அள்ளமுடியாத ரோஜாக்கூட்டம். அது மட்டுமில்லை டேலியா கினியா இன்னும் பெயர் தெரியாத பூக்கள் அநேகம்.

அவர்களிலும் ஒற்றைக்கால் தவமிருந்த சில ஒற்றையர்களை இங்கே பிடித்துப் போட்டிருக்கிறேன்.

அடுத்து ஒரு அழகான வண்ணக்காரி

அடுத்து ஒரு வெளிர் வண்ணக்காரி.
அடுத்தும் ஒரு ரோஸ் பேபி

இவளுக்குப் பக்கத்திலேயே இன்னொரு ரோஸி

பனி இதழ்களுடன் இன்னொரு ரோஸி
அடுத்து ஒரு சந்தனத் தென்றல்
 அடுத்து ஒரு ஆரஞ்சு மேனி. :)

நிஜ பிங்கி. :)

மிச்சம் மீதி ஒற்றையர்களோடு அடுத்து ஒரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம்.:)

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.

1.  மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.

2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள். 

4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1

5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2

6. மஞ்சள் முகமே வருக. (LAL BAGH )

7. குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.

 8. இன்னும் சில ஒற்றையர்கள் பாகம் 3

1 கருத்து:

  1. priyasaki17 பிப்ரவரி, 2015 ’அன்று’ முற்பகல் 10:41
    வா..வ் சூப்பரா எல்லா ரோஜாக்களும் இருக்கு. எதை சொல்ல. ஒவ்வொரு ரோஜாவும் ஒவ்வொருவித அழகு. தாங்க்ஸ் அக்கா பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு

    வை.கோபாலகிருஷ்ணன்17 பிப்ரவரி, 2015 ’அன்று’ முற்பகல் 10:49
    அனைவரும் ஒவ்வொருவிதத்தில் நல்ல அழகிகளே !

    ஒவ்வொருவருக்கும் தாங்கள் ஒரு பெயர் கொடுத்துள்ளதில் எனக்கு மேலும் மகிழ்ச்சி.

    //அடுத்து ஒரு சிவப்பு ரோஜா க்ளைமேட் காரணமா என்று தெரியவில்லை லேசாக சிதைந்திருந்தார்.//

    ஐயோ பாவம்! பூவையும் பூவையரையும் மிகவும் மென்மையாகக் கையாலாமல், அவள் மீது கைவைத்து அவளை சற்றே சிதைத்துச்சென்ற கயவன் யாரோ ? :))))) அவன் பெயர் க்ளைமேட்டா?

    சரி. ஆசிட் ஊற்றி விட்டுச் செல்லாமல் அவளை விட்டானே, அதுவரை நிம்மதியே !

    ‘சந்தித்த வேளையில் .......’ பகுதி-4 மற்றும் பகுதி-5 க்கு தேன் மழை பொழியாமல் உள்ளதால் அவைகளும் இந்தமலர் போல சிதைந்து போய் விடும் ஆபத்து உள்ளது என்பதை அறியவும்.

    http://gopu1949.blogspot.in/2015/02/5-of-6.html

    http://gopu1949.blogspot.in/2015/02/4-of-6.html

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு

    yathavan64@gmail.com17 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 4:02
    மெட்டுக்கு பாட்டெழுத
    ரோஜா மொட்டொன்று
    வேண்டும்!
    சட்டென்று இதை நினைத்தால்
    பட்டென்று மிளிரும்
    ஹிட் வகை ரோஜவின்
    பாடல்கள்!
    ரசித்தேன்

    நட்புடன்,
    புதுவை வேலு
    (எனது இன்றையை கவிதை "மங்கலம் தரும் மகா சிவராத்திரி (சிவ கவி)" காண வாருங்களேன்)

    பதிலளிநீக்கு

    ADHI VENKAT17 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 7:41
    அத்தனையுமே அழகு...

    பதிலளிநீக்கு

    'பரிவை' சே.குமார்17 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 11:35
    அக்கா (காதல்)ரோஜாக்கள் அழகு...

    பதிலளிநீக்கு

    திண்டுக்கல் தனபாலன்18 பிப்ரவரி, 2015 ’அன்று’ முற்பகல் 7:46
    சிதைந்திருந்தாலும் அதுவும் ஒரு அழகு...

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan24 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 10:14
    நன்றிடா அம்மு

    நன்றி கோபு சார். அவளை சிதைத்த கயவன் க்ளைமேட்டா என்ற தங்களின் கமெண்ட் படித்து சிரித்து விட்டேன். :)

    நன்றி யாதவன் நம்பி சகோ

    நன்றிடா ஆதி

    நன்றி குமார் சகோ

    நன்றி தனபாலன் சகோ :)


    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan24 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 10:18
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...