கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)
அழகு கொஞ்சும் மலையாளக் கரையோரம் சில மாதங்களுக்குமுன்பு சென்றிருந்தோம். அங்கே என் மனதை விட்டு நீங்காத பத்மநாபரைத் தரிசிக்கச் சென்றிருந்தோம். டைட் செக்யூரிட்டி. காமிரா மட்டுமில்ல, கார்ச்சாவியையும் வாங்கி வைத்துவிடுவார்கள். புடவை கட்டிய பெண்கள் போகலாம். மார்டர்ன் உடையணிந்த பெண்கள் உடையின் மேல் முண்டு கட்டினால்தான் போகலாம். ஆண்கள் பேண்டின் மேல் வேஷ்டியும் மேலே துண்டும் அணிந்தால்தான் போகலாம். டன்கணக்கில் தங்கம் இருப்பதால் இந்த செக்யூரிட்டி. எனவே வெளியே வந்து ஆசுவாசமாக மூச்சை இழுத்துவிட்டு புஷ்கரணியின் ஒரு ஓரமாகக் காரை நிறுத்திவிட்டு இந்த க்ளிக். ஃபோட்டோகிராஃபர் மீரா இதைப் பாராட்டி இருந்தார். ( முழுமையாகத் தெரியவில்லை இருந்தும் நல்ல பிக் ப்ரசண்டேஷன் என்று )
அடுத்து சென்ற இடம் கொச்சுவெளி பீச்.. இங்கே கல் சிற்பங்கள் அழகூட்டியிருந்தன. மார்டன் ஆர்ட் சிற்பங்கள். இதில் கணவன், மனைவி போல அந்யோன்யமாயிருந்த இந்த சிற்பம் பிடித்தது. எனவே காமிராவில் சிறைப் பிடித்தேன்.
இது கடவுளின் தேசத்தில் ஒரு நீர்ப்பறவை. பெயரெல்லாம் தெரியவில்லை. என் லூமிக்ஸ் காமிராவில் அசங்காமல் நான் சுட்ட ஒரே பறவை இதுதான்.. போட்டிங்கில் கிட்டத்தட்ட 100 படம் எடுத்திருப்பேன். இது ஒன்றுதான் பர்ஃபெக்டாக வந்தது. எப்பிடி ஜம்முன்னு போஸ் கொடுக்குது பாருங்க. ஃபோட்டோகிராஃபர் மீரா கூட popping out from nowhere.. nice எனக் கமெண்டியிருந்தார்.
இது ஆழப்புழாவில் உள்ள ஒரு ரெசார்ட் ஹோட்டல். போட்டிங் போகும்போது எடுத்தது.

Venkat7 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 11:41
பதிலளிநீக்குபுகைப்படங்கள் அருமை. நீங்கள் அழகு கொஞ்சும் மலையாளக்கரை என்று எழுதியுள்ளீர்கள். என்னுடைய கேரளா சுற்றுலா பதிவிற்கு வைத்த தலைப்பு: எழில் கொஞ்சும் மலை நாடு. நல்ல ஒற்றுமை. ஆலப்புழா படகுவீடு அனுபவம் அற்புதமானது. புகைப்படம் மற்றும் காணொளி கீழே உள்ள வலைத்தளத்தில் உள்ளது. பார்த்துவிட்டு, கருத்திடவும். நான் அதிகம் பதிவெழுதுவதில்லை ஆனால், உங்கள் பதிவுகள் விடாமல் படிப்பது வழக்கம். கூகிள்+ லும் நாம் நண்பர்கள்.
எனது வலைத்தளம்: http://tamizhnesan.blogspot.ae/
அன்புடன் வெங்கட்
பதிலளிநீக்கு
சேக்காளி7 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 11:42
யாரந்த போட்டோகிராபர் மீரா?
பதிலளிநீக்கு
ராமலக்ஷ்மி7 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 1:48
நான்கும் அருமையான படங்கள்.
பதிலளிநீக்கு
ராமலக்ஷ்மி7 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 1:49
தலைப்பில் எழுத்துகள் இடம் மாறியுள்ளன. கவனியுங்கள்.
பதிலளிநீக்கு
'பரிவை' சே.குமார்7 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 3:55
படங்கள் அருமை....
வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்கு
சாந்தி மாரியப்பன்7 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 10:24
அத்தனையும் அழகு தேனக்கா..
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan10 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 1:28
நன்றி வெங்கட்
சேக்காளி அவங்க ஒரு ஃபோட்டோகிராஃபர்..:)
நன்றி ராமலெக்ஷ்மி . திருத்திட்டேன்
நன்றி குமார்
நன்றி சாரல்
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan10 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 1:28
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!