பொன்முடி :- ஷெனாய் நகர் டைம்ஸ் பத்ரிக்கையில்.
தேங்காய் எண்ணெயில் பொறித்த கேரள சிக்கன் கறி, கப்பக்கிழங்கு, சிவப்பரிசிச் சோறு, சிக்கன் க்ரேவி, தால்.
டிஸ்கி:- பாதாம் ஹல்வாவும் இன்னொரு முறை பிரசுரமாகி இருக்கு.
சென்னை அவென்யூவிலும் ஷெனாய் நகர் டைம்ஸிலுமாக இருமுறை. நெய் மட்டும் 200 கிராம்னு இருக்கணும். :)
தங்கச் சிகரம் பொன்முடி
திருவனந்தபுரம் சென்றபோது பொன்முடிக்கு கணவரில் அலுவலக நண்பர் அழைத்துச் சென்றார். மேற்குத்தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. மிக அழகான அற்புதமான அனுபவம் அது. மூணாறு, கொடைக்கானல் போல மலை ஏறுவதும் இறங்குவதுமே தெரியவில்லை. அவ்வளவு அழகான மலைப்பாதைகள். 22 ஹேர்பின் வளைவுகள். ஆனால் ஒரு மயக்கமில்லை, கிறக்கமில்லை. ஏனெனில் அவர் காரோட்டிய விதமும் அப்படி.
கேரளாவில் காணவேண்டிய இடத்தில் பொன்முடியும் ஒன்று . ஒவ்வொரு கோணத்திலும் ஒவ்வொருவிதமான அழகைக் கொடுத்த மலை அது.மலையிலேயே ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு மாதிரி இருந்தது. சில பசுமை போர்த்தியும் சில மொட்டைப் பாறைகளாகவும். இருவேறு விதமான அமைப்புகளில், இங்கே மலை ஏறி வருபவர்களும் உண்டு. தேயிலைத் தோட்டங்கள் மூணாறு அளவுக்கு இல்லாவிட்டாலும் அங்கங்கே இருந்தன.
எக்கோ பாயிண்ட் இருக்கிறது. அங்கே விளையாட்டாக குழந்தைகள் கத்திப் பார்த்தார்கள். பசுமை படர்ந்த மயில் போல விரிந்து கிடக்கிறது பொன்முடி. கண்ணுக்கு மிகக் குளுமையாகவும் காட்சிக்கு இனிமையாகவும் இருந்தது.
இங்கே அகஸ்தியர் கூடம் என்னும் சிகரமும் இருக்கிறது. ஆனா போகல. கிட்டத்தட்ட கேரளாவின் 60 சதவிகிதப் பறவைகள் இங்கேதான் இருக்கின்றன. பலவித வண்ணத்துப் பூச்சிகளும் இங்கே ஸ்பெஷல். அது போக வனத்தில் மட்டுமே இருக்கக்கூடிய டிரிவேங்கூர் ஆமை, மலபார் பறக்கும் தவளை, மலபார் மரத்தேரைன்னு பல உயிரினங்கள் இந்த மலையில் இருக்கின்றன.
பல வகையான பறவைகள் இருப்பதால் அதைக் காணவும் பக்கத்துல இருக்க சரணாலயத்துக்கும் மக்கள் படையெடுக்குறாங்க. நாங்க அங்க எல்லாம் போகல. கிடைச்ச அரை நாள்ல பாலோடிலிருந்து பொன்முடி போய் ( அங்கே உயரத்துல ஏதோ ஆராய்ச்சிக்கூடம் மாதிரி எல்லாம் இருக்கு. ) பார்த்துட்டு வந்தோம்.
மலை மலையா கொஞ்சம் நடந்து நடந்த களைப்பு தீர நண்பரோட மாமனார் வீட்ல கொடுத்துவிட்ட தேங்காய் எண்ணெயில் பொறித்த கேரள சிக்கன் கறியையும், கப்பக்கிழங்கையும் சிவப்பரிசிச் சோற்றையும், சிக்கன் க்ரேவியையும் தாலையும் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினோம். வெய்யில் கொளுத்தினாலும் மிக அழகான பயணமாக அமைந்தது தங்கச் சிகரப் பயணம்.
மார்ச் 15 - 28, 2015 ஷெனாய் நகர் டைம்ஸில் பிரசுரமானது.






வை.கோபாலகிருஷ்ணன்11 மே, 2015 ’அன்று’ பிற்பகல் 6:07
பதிலளிநீக்குபடங்கள் அத்தனையும் அழகோ அழகு ! பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
ஷெனாய் நகர் டைம்ஸ் பத்ரிக்கையில் கட்டுரை வெளியானதற்கு சந்தோஷம்.
பாதாம் ஹல்வா அதுவும் இருமுறை ... ஆஹா இரட்டிப்பு இனிப்பாகவே உள்ளது. மிக்க நன்றி.
பாதாம் ஹல்வாவுக்கு மேலேயுள்ள படத்தில் கார் அருகே உள்ள ஒருவரை அடிக்கடி நான் பல பதிவுகளிலும், பத்திரிகைகளிலும் பார்த்த ஞாபகம் உள்ளது. :) மிக்க மகிழ்ச்சி. :)))))
பதிலளிநீக்கு
ஸ்ரீராம்.11 மே, 2015 ’அன்று’ பிற்பகல் 6:59
பசுமையான இடம் என்று சொல்லியிருந்தாலும் படங்களில் வறண்ட இடமாகவே காணப்படுகிறது.
:))))))
பதிலளிநீக்கு
வெங்கட் நாகராஜ்11 மே, 2015 ’அன்று’ பிற்பகல் 8:44
பொன்முடி - நானும் குடும்பத்தோடு அங்கே சென்று வந்தேன் - கேரள நண்பரின் குடும்பத்தோடு. சுகமான அனுபவம் அது. அங்கே நமது தமிழக எல்லையும் உண்டு தெரியுமா? மலைப்பகுதியில் ஒரு கேட் மட்டும் இருக்கும். ஆனால் தமிழகத்திற்கு கேட் வழியே வர முடியாது - சாலை கிடையாது!
பதிலளிநீக்கு
திண்டுக்கல் தனபாலன்12 மே, 2015 ’அன்று’ பிற்பகல் 6:17
வித்தியாசமான இடம்...!
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan13 மே, 2015 ’அன்று’ முற்பகல் 12:50
அஹா இனிமையான கருத்துகளுக்கு மிக்க நன்றி கோபால் சார் :)
இருவிதமான பாறைகள் காணப்பட்டன என்று குறிப்பிட்டு இருக்கேனே ஸ்ரீராம். சில பசுமை போர்த்தியும் சில மொட்டைப் பாறைகளாகவும்னு. இரண்டாவது படத்தில் பசுமையா தெரிஞ்சுது. மேலும் எடுத்த ஃபோட்டோஸ் ஒரு மாதிரி மயில்கழுத்துக் கலர்ல வந்திருந்தது.
அஹா அதெல்லாம் தெரியாதே வெங்கட் சகோ. அடுத்து செல்ல நேர்ந்தால் பார்க்கிறேன் :)
ஆம் டிடி சகோ
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan13 மே, 2015 ’அன்று’ முற்பகல் 12:51
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
பதிலளிநீக்கு
Thulasidharan V Thillaiakathu14 மே, 2015 ’அன்று’ முற்பகல் 7:49
அட பொன்முடி போய் வந்தீர்களா....எங்கள் ஊராச்சே! அருமையான இடம்தான்...கீதா திருவனந்தபுரத்தில் இருந்த போது போனதுண்டு......அப்போ இன்னும் பசுமை.....ஒரு 20 வருடங்களுக்கு முன்னால்.....தங்கள் கட்டுரை வெளியானதற்கு பாராட்டுகள்.
ஹூம் ! என்னத்த சொல்ல இப்படி பாதாம் ஹல்வா எல்லாம் போட்டு வெறுப்பேத்தக் கூடாது...ஹஹஹஹஹ எல்லாம் நாங்க ரொம்பவே ஸ்வீட்டா இருக்கறதுனாலதான்.....
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan16 மே, 2015 ’அன்று’ முற்பகல் 9:55
அஹா உங்க ஊரா சகோ. மிக அருமையான இடம்.
ஸ்வீட் பர்சன்ஸுக்கு வேற ரெசிப்பீ போடுறேன் சகோ :) ( வேப்பம்பூ ரசமும் வாழைப்பூ பால்கூட்டும் :)