எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 2 ஏப்ரல், 2021

அனந்தபத்மநாப சுவாமி கோவில். மை க்ளிக்ஸ். ANANDHAPADMANABA SWAMY TEMPLE. MY CLICKS.

அனந்தபத்மநாப சுவாமி கோவில். மை க்ளிக்ஸ். ANANDHAPADMANABA SWAMY TEMPLE. MY CLICKS.

திருவனந்தபுரம், அனந்தபத்மநாப சுவாமி கோவிலுக்குச் சென்று வந்தோம். மிகப் பிரம்மாண்டமான கோபுரம். நடைகள். ஸ்ரீரங்கப்பட்டினா ஆதி ரங்கநாத சுவாமியைப் போல திருச்சி ஸ்ரீரங்கனைப் போல என்னைக் கவர்ந்தவர் அனந்தபத்மநாபசுவாமியும். திருவட்டாறு ஆதிகேசவர் கோவில் போல அமைந்திருக்கிறது இக்கோவில் என்கிறார்கள். பெருமாளுக்கு நேர் கீழேதான் நிலவறை இருக்கிறது.

இங்கே அனந்த சயனத்தில் கிடந்த கோலம். அதனால்தான் அனந்த பத்மநாபர். மூன்று கதவுகளின் வழியே சுவாமியைத் தரிசிக்க வேண்டும். முதல் கதவில் திருவடி தரிசனம், அடுத்ததில் நாபிக்கமலம் பிரம்மாவோடு, மூன்றாவதில் முகவடிவு தரிசனம்.  தைலக்காப்பில் தகதகக்கிறார் பெருமாள். பிரம்மாண்டம்.

தெற்கு வாயில் வழியே சென்றோம். ஆண்கள் சட்டை அணியாமல்  வெற்றுடம்புடன் துண்டு போர்த்தி வேஷ்டி அணிந்து செல்லலாம். செல்ஃபோனையும் இன்ன பிறவற்றையும் அவர்களிடம் ஒப்படைத்து சேஃப்டி லாக்கரில் வைத்து விட்டுச் செல்லவேண்டும். லாக்கர், வேஷ்டி, துண்டுக்கு தனியாகப் பணம் கட்டி வேண்டும்.

பயங்கர செக்யூரிட்டி கெடுபிடி. பின்னே நிலவறையில் டன் கணக்கில் தங்கம் இருக்கின்றதல்லவா. திரு அனந்தபுரம் என்ற பேரே இவரால்தான் ஏற்பட்டது.

தென்னிந்தியா ஸ்டைலில் கோபுரம். முதலில் இந்த ஆற்றுக்கால், ஆலாபாட், கல்யாண் ஆகிய நகைக்கடைகளையும் முத்தூட் ஃபைனான்ஸையும் கடந்து கோவிலுக்குப் போவோம் வாங்க.

இது ஏதோ 1891 இல் கட்டப்பட்ட காவல் கோபுரம் போல் இருக்கு. மார்க்கெட் பகுதி.


வங்கி போலத் தெரியுது.


இது கோவிலுக்கு எதிரில் உள்ள ரோட்டில் அமைந்த கட்டிடம். இதன் வித்யாசமான அமைப்புக்காக எடுத்தேன்.

இதன் எதிரில்தான் அமைந்துள்ளன எல்லா நகைக்கடைகளும்.


இதோ இந்த சிவப்புக்கட்டிடத்தில் எதிரில் அபவுட் டர்ன் ( லெஃப்ட்)  செய்தால் இடது பக்கம் கோவில்.

திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையின் ஆஸ்தான கோவில் . ஐந்து நிலை ராஜ கோபுரம் , தென்னிந்தியக் கட்டிடக்கலையின் எடுத்துக்காட்டாய் அமைந்தவை விஷ்ணு - பெருமாள் - ரங்கர் கோவில்கள். பதினாறாம் நூற்றாண்டின் திராவிடக் கட்டிடக்கலை.

பிரம்மபுராணம், மத்ஸ்ய புராணம், வராஹ புராணம், ஸ்கந்த புராணம், பத்மபுராணம், வாயு புராணம், பாகவதம் ஆகியவற்றிலும் சங்க இலக்கியங்களிலும் குறிப்பிடப்படும் கோவில் இது.

நாலாயிரம் திவ்யப் பிரபந்தத்தில் பாடப்பட்ட கோவில். மேலும் வைஷ்ணவர்கள் தங்கள் வாழ்நாளில் தரிசிக்க விரும்பும் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று.

அவ்வளவு ஏன் துவாபரயுகத்தில் பரசுராமரே இந்தக் கோவிலின் மூர்த்தியை நிர்மாணித்துக் கும்பாபிஷேகம் செய்தாராம். !


கோவில் வடக்குப் பார்த்து இருந்தாலும் சந்நிதி கிழக்குப் பார்த்துதான் அமைந்திருக்கிறது. இது கோவிலின் இடப்புறம் அமைந்த புஷ்கரணி.


நிறைய வேண்டுதல்கள், நிறையத் திருவிழாக்கள். பணம் கொழிக்கும் கோவில் இது.


நம்பூதிரிகள் பூஜை செய்கிறார்கள். மற்றையோர் எல்லாம் ஒரு படி கீழேதான் இந்தக் கோவிலைப் பொறுத்தவரை.


ஆதிசேஷனின் அரவணைப்பில் துயிலும் அனந்த சயனனை வரிசையில் சென்று  தரிசித்துவிட்டுத் திரும்ப இந்த நகைக்கடைகள், அடகுக் கடைகள், சந்தைப்பேட்டை வழியாக நண்பரின் வீடு வந்தோம்.

மீன் கடைகள் அதிகம். டீக்கடைதான் இல்லை. எல்லா நாயர்களும் உலகின் எல்லா இடங்களிலும் டீக்கடை நடத்துகிறார்கள். கேரளாவில்தான் ஒரு நாயரும் டீ ஆற்றுவதில்லை.

இந்த அழகான ஆர்ச்சைக் கட்டியதுதான் யாரெனத் தெரியவில்லை.

டிஸ்கி:- இவற்றையும் பாருங்க. 

1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS. 

2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS. 

3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.

4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.

5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS. 

6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.

7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS.  

8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS. 

9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS. 

10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள். 

11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..

12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.

13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)

14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL. 

16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY. 

17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS ) 

18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS. 

20.  மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.

21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.

22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.

23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.

24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS. 

25.  மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS. 

26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.

27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை.  MY CLICKS

28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.

29. மை க்ளிக்ஸ் -  கூல் கூல் கூல் . MY CLICKS.

30. நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.

31. ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.

32. பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS

33. பழம் நல்லது. - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS

34. பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS

35. எண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY CLICKS 

36.மாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLICKS

37. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள். மை க்ளிக்ஸ், MY CLICKS

38. சரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY CLICKS.

39. கோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.

40. சிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.

41. மலேஷியா. மை க்ளிக்ஸ் MY CLICKS.

42. கும்பகோணம் – மை க்ளிக்ஸ் MY CLICKS

43. புகார், தரங்கம்பாடி. ஆக்ரோஷ அலைகள். மை க்ளிக்ஸ் MY CLICKS.

44. மலைகள் - மை க்ளிக்ஸ். MY CLICKS. 

45. தாராசுரம் மை க்ளிக்ஸ் . MY CLICKS.

46. குமரகம், ஆலப்புழா மை க்ளிக்ஸ் MY CLICKS. 

47. கெம்பேகவுடா ஏர்போர்ட், பெங்களூரு. மை க்ளிக்ஸ் MY CLICKS.

48. சுதேசி ( ஐட்டம்ஸ் )உணவு. மை க்ளிக்ஸ்,MY CLICKS. 

49. துபாய், ஷார்ஜா, அபுதாபி, மை கிளிக்ஸ். MY CLICKS.

50. எங்கே செல்லும் இந்தப் பாதை.. மை க்ளிக்ஸ். ROADS . MY CLICKS

51. கொள்ளை கொள்ளும் கேரளா மை க்ளிக்ஸ். KERALA. MY CLICKS.

 52. சிங்கப்பூர் ஆர்கிட் பார்க், மை க்ளிக்ஸ். ORCHID PARK. MY CLICKS 

53.  சிங்கப்பூர் ஆழ்கடல் அதிசயங்கள். மை க்ளிக்ஸ். UNDERWATER WORLD, MY CLICKS. 

54. சிங்கை மலேயா சில உதிரி புகைப்படங்கள், மை க்ளிக்ஸ், MY CLICKS.

55. மலேஷியா சிங்கை, பெங்களூரு .. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS. 

56.  கொஞ்சம் மதிய விருந்து. மை க்ளிக்ஸ். MY CLICKS. 

57.  காய்கனி பூ பழம் மை க்ளிக்ஸ். MY CLICKS.

58. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.

59. பறவைகள் மை க்ளிக்ஸ். MY CLICKS. 

60. சுடச்சுட கொஞ்சம் சூப்ஸ் & ரசம். மை க்ளிக்ஸ். SOUPS & RASAM, MY CLICKS.


61. கொச்சுவேலி,கோவளம்,பாலோடு,பொன்முடி,கொச்சின் மை க்ளிக்ஸ்,KOCHUVELI,KOVALAM,PALODE,PONMUDI,KOCHIN, MY CLICKS. 





66. குன்றக்குடியின் சுப்புலெட்சுமி. மை க்ளிக்ஸ். MY CLICKS.  



71. துபாய் டு அபுதாபி. பார்ட் - 2 மை க்ளிக்ஸ் DUBAI TO ABU DHABI PART - 2. MY CLICKS.

72. வெய்யிலுக்குகந்த கீரை உணவுகள். மை க்ளிக்ஸ். DISHES FROM GREENS. MY CLICKS.

73. விராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.

74. பெஸ்ட் பெங்களூரு பில்டிங்க்ஸ். மை க்ளிக்ஸ். BEST BENGALURU BUILDINGS. MY CLICKS.

75. கொஞ்சம் மலையும் கொஞ்சும் நீரும். மை க்ளிக்ஸ். HOGENAKKAL. MY CLICKS.

76. சென்னை ஏர்ப்போர்ட் . மை க்ளிக்ஸ்.  CHENNAI AIRPORT - MY CLICKS.





















1 கருத்து:

  1. Bhanumathy Venkateswaran20 ஜனவரி, 2020 ’அன்று’ முற்பகல் 8:00
    வித்தியாசமான கோணங்களில் எடுக்கப்பட்ட அழகான படங்கள்.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan28 ஜனவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 3:59
    நன்றி மா பானுமதி :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்29 ஜனவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 2:27
    அழகான படங்கள். நானும் சென்று வந்ததுண்டு - படங்கள் எடுக்கவில்லை.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan6 பிப்ரவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 2:47
    அஹா ! நன்றி வெங்கட் சகோ.

    பதிலளிநீக்கு

காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை

 காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை  திருநெல்வேலியைச் சேர்ந்த நெல்லை உலகம்மை என் அன்புத்தோழி. கல்வி ஆலோசகர், சிறப்புப் பேச்சாளர், தன்னம்பி...