எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 12 ஏப்ரல், 2021

கொல்லம் ( கொய்லோன் ) - குமரகம். மை க்ளிக்ஸ். KOLLAM ( QUILON) TO KUMARAKOM, MY CLICKS.

கொல்லம் ( கொய்லோன் ) - குமரகம். மை க்ளிக்ஸ். KOLLAM ( QUILON) TO KUMARAKOM, MY CLICKS.

கடவுளின் தேசத்தைப் பார்க்க வேண்டுமா ? கேரளா குமரகம் வாங்க என்ற விளம்பரங்களைப் பார்த்திருக்கலாம். ஒருமுறை கடவுளின் தேசத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. வேம்பநாடு ஏரியும் குமரகமும் பறவைகளும் ஈர்த்தன.

மூன்று நாள் விடுமுறை கிடைக்க கும்பகோணத்தில் இருந்து திருச்சி, மதுரை அங்கேயிருந்து திருவனந்தபுரம் சென்று அனந்தபத்மநாப சுவாமி கோவில்,ஆற்றுக்கால் பகவதி கோவில், கொச்சுவெளி பீச், கோவளம் பீச், பாலோடு, பொன்முடி எல்லாம் பார்த்துவிட்டு கொயிலோன் வந்தோம்.

கொயிலோனில் புத்தம்புதுக் காலை. ரயில்வே ஸ்டேஷனிலேயே இட்லி சாம்பார். (தேங்காய் அரைச்சுவிட்ட வாழைக்காய் குழம்பு :) ) சாப்பிட்டோம். ட்ரெயினிலேயே ஏழுமணிக்கு ப்ரெட் ஆம்லெட் சாப்பிட்டு இருந்தாலும் ஒன்பது மணிக்குப் பசித்தது.


கொயிலோன் ரயில்வே ஸ்டேஷன் நெருங்குகிறது. தகதகக்கும் சூரியன் எழுகிறது.


இதோ பஸ்ஸில் கிளம்பி வந்து இந்த பேக் வாட்டர்ஸ் எனப்படும் காயலில் வள்ளப் போக்குவரத்துக்காகக் காத்திருக்கிறோம். இந்த பயணிகள் வள்ளத்தை எடுக்க நேரமாகும் போல் தெரிந்தது.


நம்மூரில் எல்லாம் பஸ், ட்ரெயின் , எலக்ட்ரிக் ட்ரெயின் பயணம்போல் இங்கே காயலில் நீர்ப் போக்குவரத்து ( வள்ளம் ) உண்டு. கட்டுவெள்ளம் என்றால் கட்டுமரப் படகு. இங்கே மோட்டார் போட்டுகளும் உள்ளன.


காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனபின்பு வள்ளத்தைக் கிளப்பாததால் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு நாம் கிளம்பி ( குமரகம் > ஆலப்புழா > கொச்சி > எர்ணாகுளம் > கோவை > கும்பகோணம்  என பஸ், ட்ரெயின், பஸ் மாறி ஊருக்கு மறுநாள் காலை வரணுமே ) பஸ்ஸிலேயே புறப்பட்டோம்.



இந்தக் காயலும்  வள்ளங்களும் ( பேக் வாட்டர்ஸ் எனப்படும் நன்னீர் உப்பு நீர் ஏரிகள் )  மற்றும் படகுகள் சினிமாக்களிலும் காமிரக்களிலும்தான் அழகு. நேரில் கிய்யா முய்யாதான். ஒரே கசகச.

இதோ பஸ் நம்மை உதிர்த்துவிட்டுப் போக லேசாக ஆசுவாசம் அடைந்தோம். பழம்பொரியும் டீயும் சாப்பிட்டு ஒரு போட்டைத் தேடினோம்.

இவ்ளோ போட் இருக்கே ஏன் தேடுறீங்கன்னு கேக்குறீங்களா. நமக்கு ஹவர்ஸ் கணக்குல போதும். நாள் வாடகைக்கு எதுக்கு. அதான் இரண்டுமணிநேரத்துக்கு 800 ரூ பேசி ஒரு போட்டில் ஏறி உட்கார்ந்தாச்சு.

“கடலில் அக்கரை போனோரே..
காணாப் பொன் தேடிப் போனோரே
போய்வரும்போள் என்ன கொண்டு வரும்..
கை நிறையப் போய் வரும்போள் என்ன கொண்டு வரும்..”

ஒந்துமில்ல.. கொஞ்சம் பறவை கொஞ்சம் வள்ளம், கொஞ்சம் படகுவீடுகள் ஃபோட்டோஸ்தான் எடுத்து.. :)


வெய்யில் கொளுத்தி எரிக்கிறது. வேர்வை கூட ஆவியாகிறது. அவர்கள் மூன்று வேளையும் கூடக் குளிக்கலாம். தண்ணீரிலேயே கிடக்கலாம். அவ்வளவு வெக்கை.


இதுதான் நாம் அமரப் போகும் போட். அறுவர் அமரலாம். ஆனால் இருவர்தான் சென்றோம்.

அவசரமா ஊருக்குப் போணுமில்ல :) .

இதோ இந்த போட்ல தடுமாறாம ஏறி கூச்சண்டி.


ரைட் கிளம்பியாச்சு போட் ரைட்.

எதிரே அநேகப் படகு வீடுகள். எல்லா வசதிகளும் கொண்டவை. நாள் வாடகை இவற்றுக்கு 3000 , 4000 ஆகும் . உள்ளே இருக்கும் வசதிகள் பொறுத்தது.

படுத்துத் தூங்கலாம். சாப்பிடலாம். குளிக்கலாம். பாத்ரூம் போகலாம். ஆடலாம் பாடலாம். மீன் துண்ணலாம், ஏன் மீனே பிடிக்கலாம்.


இங்கே தாஜ் ஹோட்டலின் ரெஸார்ட் இருக்கு. அது போக தனியார்கள் வாடகைக்கு விடும் ரெசார்ட் வீடுகள் இருக்கின்றன. வெளிநாட்டினர் பலர் தங்கிச் செல்கின்றனர்.


டயர்கள் மாட்டிய படகு வீடு. :) முன்புறம் பார்வையாளர்கள் அமர வசதி.


சீரும் சிறப்பும் கொண்ட இன்னொரு ராயல் போட். தூண்கள் எவ்வளவு அழகு.


நமக்கு முன்னே ஒரு படகு வீடு போகிறது.


ஆங்காங்கே பார்க்கிங் செய்யப்பட்ட படகு வீடுகள்.


இதோ எதிரில் ஒரு படகு வீட்டைச் செலுத்திக் கொண்டு போகிறார் ஒருவர்.


கடவுளின் தேசம்.. ஹ்ம்ம் கொஞ்சம் காயலாங்கடை மாதிரிக் குப்பையோடுதான் இருக்கிறது.



எதிரே வரும் படகில் இருந்து தண்ணீர் போல எதையோ ஊற்றுகிறார்கள். யாரும் குளிக்கிறாங்களா என்ன ? :)


வெங்காயத் தாமரை என்னும் ஆகாயத் தாமரைகள் ஆக்கிரமிப்பு. நன்னீர் ஏரி முழுவதும். காம்பவுண்டுக்கு அப்பால் ஏதோ ஐந்து நட்சத்திர ஹோட்டல்.


வளைவில் மெல்ல எட்டிப்பார்த்து ஓடிவரும் இன்னொரு போட்.


யப்பா. பறவைகளை விட அதிகமாய் ஆகாயத் தாமரைகள் ஆக்கிரமிப்பு.

கிடைத்த பறவைகளை எல்லாம் முன்பே ஒரு இடுகையில் போட்டிருக்கிறேன். :)


தூரத்தே தெரிவது தீவல்ல.. இதேபோல் ஆகாயத்தாமரை அடைசல்தான். அல்லது நீர்ப்புல் வகையறா.


ஓகே நம்மைப் போல் சூரியனின் தூண்டிலில் மாட்டி அங்குமிங்கும் அலையும் ஓரிரண்டு படகு வீடுகளைக் காமிராக் கொக்கியில் பிடித்துப் போட்டுவிட்டு விடு ஜூட். கிளம்புவோம்.  மதியமாகிவிட்டது :)

டிஸ்கி:- இவற்றையும் பாருங்க. 

1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS. 

2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS. 

3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.

4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.

5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS. 

6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.

7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS.  

8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS. 

9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS. 

10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள். 

11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..

12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.

13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)

14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL. 

16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY. 

17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS ) 

18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS. 

20.  மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.

21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.

22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.

23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.

24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS. 

25.  மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS. 

26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.

27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை.  MY CLICKS

28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.

29. மை க்ளிக்ஸ் -  கூல் கூல் கூல் . MY CLICKS.

30. நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.

31. ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.

32. பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS

33. பழம் நல்லது. - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS

34. பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS

35. எண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY CLICKS 

36.மாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLICKS

37. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள். மை க்ளிக்ஸ், MY CLICKS

38. சரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY CLICKS.

39. கோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.

40. சிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.

41. மலேஷியா. மை க்ளிக்ஸ் MY CLICKS.

42. கும்பகோணம் – மை க்ளிக்ஸ் MY CLICKS

43. புகார், தரங்கம்பாடி. ஆக்ரோஷ அலைகள். மை க்ளிக்ஸ் MY CLICKS.

44. மலைகள் - மை க்ளிக்ஸ். MY CLICKS. 

45. தாராசுரம் மை க்ளிக்ஸ் . MY CLICKS.

46. குமரகம், ஆலப்புழா மை க்ளிக்ஸ் MY CLICKS. 

47. கெம்பேகவுடா ஏர்போர்ட், பெங்களூரு. மை க்ளிக்ஸ் MY CLICKS.

48. சுதேசி ( ஐட்டம்ஸ் )உணவு. மை க்ளிக்ஸ்,MY CLICKS. 

49. துபாய், ஷார்ஜா, அபுதாபி, மை கிளிக்ஸ். MY CLICKS.

50. எங்கே செல்லும் இந்தப் பாதை.. மை க்ளிக்ஸ். ROADS . MY CLICKS

51. கொள்ளை கொள்ளும் கேரளா மை க்ளிக்ஸ். KERALA. MY CLICKS.

 52. சிங்கப்பூர் ஆர்கிட் பார்க், மை க்ளிக்ஸ். ORCHID PARK. MY CLICKS 

53.  சிங்கப்பூர் ஆழ்கடல் அதிசயங்கள். மை க்ளிக்ஸ். UNDERWATER WORLD, MY CLICKS. 

54. சிங்கை மலேயா சில உதிரி புகைப்படங்கள், மை க்ளிக்ஸ், MY CLICKS.

55. மலேஷியா சிங்கை, பெங்களூரு .. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS. 

56.  கொஞ்சம் மதிய விருந்து. மை க்ளிக்ஸ். MY CLICKS. 

57.  காய்கனி பூ பழம் மை க்ளிக்ஸ். MY CLICKS.

58. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.

59. பறவைகள் மை க்ளிக்ஸ். MY CLICKS. 

60. சுடச்சுட கொஞ்சம் சூப்ஸ் & ரசம். மை க்ளிக்ஸ். SOUPS & RASAM, MY CLICKS.


61. கொச்சுவேலி,கோவளம்,பாலோடு,பொன்முடி,கொச்சின் மை க்ளிக்ஸ்,KOCHUVELI,KOVALAM,PALODE,PONMUDI,KOCHIN, MY CLICKS. 





66. குன்றக்குடியின் சுப்புலெட்சுமி. மை க்ளிக்ஸ். MY CLICKS.  



71. துபாய் டு அபுதாபி. பார்ட் - 2 மை க்ளிக்ஸ் DUBAI TO ABU DHABI PART - 2. MY CLICKS.

72. வெய்யிலுக்குகந்த கீரை உணவுகள். மை க்ளிக்ஸ். DISHES FROM GREENS. MY CLICKS.

73. விராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.

74. பெஸ்ட் பெங்களூரு பில்டிங்க்ஸ். மை க்ளிக்ஸ். BEST BENGALURU BUILDINGS. MY CLICKS.

75. கொஞ்சம் மலையும் கொஞ்சும் நீரும். மை க்ளிக்ஸ். HOGENAKKAL. MY CLICKS.

76. சென்னை ஏர்ப்போர்ட் . மை க்ளிக்ஸ்.  CHENNAI AIRPORT - MY CLICKS.





















108. அனந்தபத்மநாப சுவாமி கோவில். மை க்ளிக்ஸ். ANANDHAPADMANABA SWAMY TEMPLE. MY CLICKS.

109. வெளி பீச்சும், வெங்காயத் தாமரைகளும். மை க்ளிக்ஸ். VELI BEACH & WATER HYACINTH. MY CLICKS.

110. கொல்லம் ( கொய்லோன் ) - குமரகம். மை க்ளிக்ஸ். KOLLAM ( QUILON) TO KUMARAKOM, MY CLICKS.

111. ஆலப்பியில் கெட்டுவல்லப் பயணம். மை க்ளிக்ஸ். ALLEPPEY HOUSE BOAT RIDE, MY CLICKS.

112. தாமரைக் குளம். மை க்ளிக்ஸ். LOTUS POND, MY CLICKS.

113. சுவாமிமலை ஸ்டெர்லிங் கலைப் பொருட்கள், மை க்ளிக்ஸ். SWAMIMALAI STERLING, ANTIQUES, MY CLICKS.

114. சோலாஹ் கம்ப் மாஸ்க் - 16 தூண் மசூதி. மை க்ளிக்ஸ். SOLAH KHAMBH MOSQUE. MY CLICKS.

115. வளையத்துள் புகுந்த வால்ரஸ்கள். மை க்ளிக்ஸ். WALRUS SEALS. MY CLICKS.

116. ஊனையூர் , மை க்ளிக்ஸ். OONAIYUR, MY CLICKS.

117. சிறு தெய்வங்களும் சித்திரக் குள்ளர்களும் சிங்கயாளியும். மை க்ளிக்ஸ். MY CLICKS.

118. திருமயம் கோட்டை,மை க்ளிக்ஸ். THIRUMAYAM FORT, MY CLICKS.

119. டால்ஃபின்களின் பந்தாட்டமும், ஓவியமும். மை க்ளிக்ஸ்.PAINTING BY DOLPHINS,MY CLICKS.

120. குவாலியர் மயில். மை க்ளிக்ஸ். GWALIOR - PEACOCK. MY CLICKS.

1 கருத்து:

  1. Thenammai Lakshmanan28 ஜனவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 4:09
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்1 பிப்ரவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 8:10
    அனைத்தும் அழகான படங்கள். கேரளம் கடவுளின் தேசம் என்று சும்மாவா சொன்னார்கள். அங்கே பல இடங்கள் அழகு.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan6 பிப்ரவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 2:52
    ஆமாம் வெங்கட் சகோ. நன்றி.

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...