எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 2 ஏப்ரல், 2021

தெருவோர வியாபாரிகள். மை க்ளிக்ஸ். STREET VENDORS. MY CLICKS.

தெருவோர வியாபாரிகள். மை க்ளிக்ஸ். STREET VENDORS. MY CLICKS.

பெங்களூருவில் இருந்து மைசூர் செல்லும் வழியில் பத்மநாப சுவாமி கோவிலின் வாசலில் இந்தக் கடை உள்ளது. விநாயகர் என்பதால் எடுத்தேன். அதன்பின் பார்த்தால் புத்தர், நந்தி,  உரல், குழவி, தொப்பிகள் என்று கலவையாக இருக்கு :)


அங்கேயே பக்கத்தில் இவர் அரிநெல்லிக்காய்/அரைநெல்லிக்காய் விற்றுக் கொண்டிருந்தார்.


இவங்க மைசூர் பிருந்தாவன் கார்டன் வாயிலில் மீன் பொரிச்சு வித்துக்கிட்டு இருந்தாங்க.


இது மாமல்லபுரம் போனபோது எடுத்தது.

இலந்தைப்பழமும் , சீமை இலந்தையும் ,வெள்ளரியும்,  மாங்காய் பத்தையும் பார்க்கவே ஜொள்ளூறுது இல்ல :)


இது லிச்சி குற்றாலத்தில். முதலில் பார்த்து என்னவோ ஏதோன்னு புரில. அப்புறம் கடைக்காரர் ஒன்றைப் பிய்த்துத் தின்னச் சொன்னார். அற்புதமான பழம். என்ன தோலும் கொட்டையும்தான் பெரிசா இருக்கு. உள்ளே உள்ள வெள்ளைச் சதைப்பகுதி கொஞ்சம்தான் இருக்கு. சிலது இனிப்பு சிலது இனிப்புப்புளிப்பு. விலை ஜாஸ்தி. கிலோ 300 க்கும் மேலே.


இதுவும் குற்றாலத்தில்தான். பன்னீர்ப் பழமாம். அது முழு நெல்லி. பக்கத்தில் உப்பு, மிளகாய்ப்பொடி பாட்டில் :)


இது இராமேஸ்வரத்திற்குச் செல்லும் வழியில் உள்ள பாம்பன் பாலத்தில்.

பைனாப்பிள் கீற்றுக்களும், மாங்காய்த் துண்டுகளும். என்ன கலைநயத்தோடு அடுக்கி இருக்கிறார் :)

இது பெங்களூரு பாஸ்போர்ட் அலுவலகம் எதிரில். நாவல்பழம். பேரிக்காய் & ப்ளம்ஸ்.

பேசாமல் இந்த இடுகைக்கு ஃப்ரூட்ஸ் மை க்ளிக்ஸ் என்று பெயர் வைத்திருக்கலாம் போலிருக்கு :)


நெல்லிக்காய் & அவித்த பனங்கிழங்கு.

இது பூம்புகாரில்.


இது பூம்புகார் அல்லது தரங்கம்பாடியில்.

மாங்காய்ப் பத்தை.


இவையும் அங்கேதன. ஐஸ்க்ரீம். & மிளகாய் பஜ்ஜி.


ரொம்ப மிளகாய் பஜ்ஜி தின்னா நாக்கு இப்பிடி வெந்து போயிரும்கிறாரா அந்த திருஷ்டி பொம்மை மனிதர் :)

இது ஹைதராபாத் அருகில் உள்ள சில்கூரில் இருக்கும் விசா பாலாஜி கோவிலுக்கு எதிரில்.

இங்கேயும் மாங்காய் , பைனாப்பிள், பப்பாளித் துண்டுகள்.


இது சென்னையில் உள்ள பிகே ஆர் ஹோட்டலில் இருந்து எடுத்தேன்.

டி நகர் தெருவோரக் கடைகள். காலை பத்துமணி இருக்கும். அப்போதுதான் வியாபாரம் ஆரம்பிக்கிறாங்க.


இது மருதமலை கோவில் மலையடிப்பாதையில் உள்ள கடை.


பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் கோவிலுக்கு எதிரில்  இந்தக் கொடுக்காப்புளியைக் கொட்டி வித்துக்கிட்டு இருந்தாங்க.


இது ஹைதை மாதாப்பூர் சைபர் டவர் அருகில். காரில் வெப்பம் தடுக்கும் கறுப்புத் தடுப்புகளை அந்த மனிதர் விற்றுக் கொண்டிருக்க கூட இரு பெண்கள் ( ஆதிவாசி ? ) அமர்ந்திருக்கிறார்கள்.


கோவை ஹட்கோ காலனியில் குறிப்பிட்ட நாட்களில் இந்த காய்கறி வேன் வருகிறது. அனைவரும் தனித்தனியாகவோ அல்லது 50 ரூ, 100 ரூ கொடுத்து மொத்தமாகவோ காய்கறிகளை எடை போட்டு எடுத்துச் செல்கிறார்கள்.


இது காரைக்குடி ஃபைவ் லாம்ஸ் ( ஐந்து விளக்கு ) அருகே. ஒரு சிறுவன்  காற்றடைத்த மீன்/டால்ஃபின் பொம்மைகளை விற்றுக் கொண்டிருந்தான்.



இது ஏதோ மூலிகை மருந்து போல் தெரிகிறது. தாவரங்களைப் பரப்பிக் கொண்டிருந்தார் இவர். இது காரைக்குடி அக்கினியாத்தாள் வீட்டருகே, புதிய ஐயப்பா கடையருகே.


இதுவும் மருதமலைதான். இளநீர்க்கடை.


திருமயத்தில் ஒரு பழக்கடை. பக்கத்திலேயே ஒரு கூல்ட்ரிங்ஸ் கடையும் :)


இது முத்துமாரியம்மன் கோவில் எதிரில் ஒருவர் நுங்கு வெட்டி விற்றுக் கொண்டிருந்தார். அது ஒரு கோடை காலம். இப்ப இனிமேல்தான் சீசன் வரும்.





டிஸ்கி:- இவற்றையும் பாருங்க. 






























33. பழம் நல்லது. - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS

































66. குன்றக்குடியின் சுப்புலெட்சுமி. மை க்ளிக்ஸ். MY CLICKS.  



71. துபாய் டு அபுதாபி. பார்ட் - 2 மை க்ளிக்ஸ் DUBAI TO ABU DHABI PART - 2. MY CLICKS.

72. வெய்யிலுக்குகந்த கீரை உணவுகள். மை க்ளிக்ஸ். DISHES FROM GREENS. MY CLICKS.

73. விராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.

74. பெஸ்ட் பெங்களூரு பில்டிங்க்ஸ். மை க்ளிக்ஸ். BEST BENGALURU BUILDINGS. MY CLICKS.

75. கொஞ்சம் மலையும் கொஞ்சும் நீரும். மை க்ளிக்ஸ். HOGENAKKAL. MY CLICKS.

76. சென்னை ஏர்ப்போர்ட் . மை க்ளிக்ஸ்.  CHENNAI AIRPORT - MY CLICKS.




















1 கருத்து:

  1. வெங்கட் நாகராஜ்6 ஜனவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 9:59
    நல்லதொரு பகிர்வு. தெருவோர வியாபாரிகள் - படங்கள் ரசிக்க வைத்தன.

    தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு

    ஸ்ரீராம்.7 ஜனவரி, 2020 ’அன்று’ முற்பகல் 5:32
    நல்ல தீம். சுவாரஸ்யமாய் இருந்தது.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan18 ஜனவரி, 2020 ’அன்று’ முற்பகல் 12:09
    நன்றி வெங்கட் சகோ

    நன்றி ஸ்ரீராம்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

காதல் வனத்தில் அபூர்வப் பூக்கள்.

 காதல் வனத்தில் அபூர்வப் பூக்கள்.  அபூர்வ ஆளுமைகள் என் காதல் வனம் நூல் வெளியீட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அவர்களைப் பற்றி முன்பே ஒ...