எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 21 ஏப்ரல், 2021

துபாய் - சில டெக்ஸர்ட் ஷாட்ஸ். DUBAI .MY CLICKS.

துபாய் - சில டெக்ஸர்ட் ஷாட்ஸ். DUBAI .MY CLICKS.

துபாயில் பயணம் செய்யும்போது எதை எடுப்பது எதை விடுப்பது எனத் தெரியாது. பாலை தேசத்தை சுமார் 30  ஆண்டுகளுக்குள் சோலைவனமாக்கி இருக்கிறார்கள்.

இது குடியிருப்புப் பகுதி.


உள்கட்டமைப்பும் அழகானதே.

வெளிக் கட்டமைப்பு பாலை தேசத்துக்கு ஏற்றாற்போல் ஜாலிகளுடன் ( ஹவா -காற்றுவரும்படி) கட்டப்பட்டுள்ளது.


ஒவ்வொரு கட்டிடமும் ஒவ்வொரு தேசத்தின் ஆர்க்கிடெக்ஸிங் மாடலில் கட்டப்பட்டது.


எதிரும் புதிரும். :)


உயரம், அகலம் நீளம், பருமன் உருண்டை முக்கோணம், செவ்வகம் இன்னும் பல்வேறு அமைப்புகளில் கட்டப்பட்டவை.


அப்பாடா முழுதாய் ஒன்றைக் க்ளிக்கியாச்சு. இது பாம்க்ரோவ் போகும் ட்ரெயினில் இருந்து எடுத்தது. அதுதான் க்ளியரா இருக்கு. நேராவும் இருக்கு:)


இது ஏதோ ஒரு மாலில் எடுத்தது.

நம் காமிராக் கண்களுக்குள் அடங்காதவை.



பயணம் செய்யும் நாம் கோணம் பார்ப்பதற்குள் கார் டனல் , மேம்பாலம் போன்றவற்றிற்குள் புகுந்துவிடும். இல்லாவிட்டால் கட்டிடம் லாப்ஸ் ஆகிவிடும்.


இந்தக் கட்டிடத்தில் இப்படி ஒரு ப்ரோஜக்‌ஷன். லிஃப்டுக்காக இருக்குமோ என்னவோ.

அதுவே இன்னொரு கோணத்தில் முழுமையாய் உங்கள் பார்வைக்கு.


அப்பாடா எவ்வளவு கட்டிடங்கள். எங்கு பார்த்தாலும் கட்டிடங்கள்.


இதன் ஆர்க்கியாலஜிகல் & ஜியாக்ரஃபிகல் அமைப்பை ஒட்டி இவற்றின் அஸ்திவாரங்கள் அமைக்கப்படுகின்றன.

டொயோட்டோ & ரோலக்ஸ் கட்டிடங்கள்.

இதன் ஆரோ போன்ற அமைப்பை பாருங்க. எவ்ளோ அழகு . எப்படித்தான் டிசைன் செய்து எப்படித்தான் கட்டினார்களோ.





 செல்ஃபோன் வடிவங்களிலும் சில.

இந்தியாவில் எல்லாம் எல்லாக் கட்டிடத்துக்கு முன்னும் அதன் உயரத்திற்கு ஏற்றாற்போல் முன்பகுதியில் இடம் விட வேண்டும். இங்கே எல்லாம் அப்படி இல்லை போல.

மகா நெருக்கமாய் தீப்பெட்டிகளைச் செருகி வைத்தாற்போலக் கட்டிடங்கள்.

எல்லாமே அலுவலகக் கட்டிடங்கள்தாம்.  வீடுகள் இவ்வளவு உயரத்தில் அமைக்கப்படுவதில்லை.



இது லூலூ சூப்பர் மார்க்கெட் இதெல்லாம் நான்கு மாடிதான். அதேபோல்தான் வீடுகளும்.
 

அடுத்து ஏர்போர்ட்டிற்கு வந்துவிட்டோம்.

மினார் போன்ற அமைப்பில் மேங்கோப்பு. இது துபாய் ஏர்போர்ட். மிகப் பிரம்மாண்டமான ஏர்போர்ட்களில் ஒன்று.

சலங்கை ஒலியில் ஒரு கத்துக்குட்டி ஃபோட்டோகிராஃபர் கமலின் நடனத்தைக் கை கால் என எடுத்ததுபோல் நான் எடுத்திருக்கும் புகைப்படங்களை மனக்கண்ணால் முழு பில்டிங்காக இணைத்துப் பார்த்து (அட்ஜஸ்ட் செய்து) கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.

1 கருத்து:

  1. திண்டுக்கல் தனபாலன்3 ஆகஸ்ட், 2020 ’அன்று’ பிற்பகல் 8:39
    ஆகா...! உழைப்பே அனைத்து உயர்வையும் தரும்...

    பதிலளிநீக்கு

    மனோ சாமிநாதன்3 ஆகஸ்ட், 2020 ’அன்று’ பிற்பகல் 8:54
    புகைப்படங்களை அழகாகவே எடுத்திருக்கிறீர்கள் தேனம்மை! 43 வருடங்கள் வாழ்ந்து முடிந்து விட்ட இந்த நாடும் நகரமும் என்னுடைய ஊர் தான்! கொரோனாவால் கட்டாயமாக தஞ்சையில் இருப்பதால் ஐந்து மாதங்கள் ஆகி விட்டது பார்த்து! ஏக்கப்பெருமுச்சு எழுகிறது!

    பதிலளிநீக்கு

    Thulasidharan V Thillaiakathu4 ஆகஸ்ட், 2020 ’அன்று’ முற்பகல் 11:52
    விரைவாக ஓடும் காரில் இருந்து எடுத்ததே இத்தனை அழகாக வந்திருக்கிறதே. ஒவ்வொன்றும் பிரமிப்பாக இருக்கிறது.

    துளசிதரன்

    கீதா

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan12 ஆகஸ்ட், 2020 ’அன்று’ பிற்பகல் 2:34
    ஆம் டிடி சகோ. நன்றி

    அஹா நன்றி மனோ மேம்.

    மிக்க நன்றி துளசி சகோ & கீத்ஸ்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை

 காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை  திருநெல்வேலியைச் சேர்ந்த நெல்லை உலகம்மை என் அன்புத்தோழி. கல்வி ஆலோசகர், சிறப்புப் பேச்சாளர், தன்னம்பி...