எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 3 நவம்பர், 2022

ராமேஸ்வரத்தில் தெற்கு வாயிலில் ஹோட்டல் குரு

 ராமேஸ்வரத்தில் தெற்கு வாயிலில் ஹோட்டல் குரு.

 இராமேஸ்வரத்தில் தெற்கு வாயிலில்தான் நகரத்தார் சத்திரம் அமைந்துள்ளது. 

அங்கே ரூம் கிடைக்காததால் அடுத்து இருந்த ஹோட்டல் குருவில் தங்கினோம். இருவர் , மூவர் தங்க வசதியான ஏசி அறைதான்.  டபிள் பெட் ஒன்றுதான். இன்னொருவர் தங்கினால் பெட் ஸ்ப்ரெட் , தலையணை, போர்வை தருகிறார்கள். தரையில் விரித்துத்தான் படுக்க வேண்டும். 


இந்தத் தெற்கு வாசலின் எதிரில்தான் அமைந்துள்ளது ஹோட்டல் குரு. 

ரொம்ப காம்பேக்டான ஹோட்டல். 
கீழே ரெஸ்டாரெண்ட். மாடியில் தங்கும் அறைகள். 
இதுதான் வரவேற்பறை. 
நமக்குப் பிடித்த நீளமான காரிடார்.

இங்கே தீர்த்தமாடிவிட்டு வந்து அமர்வார்கள் என்பதால் எல்லாமே லெதர் & ப்ளாஸ்டிக் சோஃபா & சேர்கள்தான். 

பொதுவாக அங்கங்கே மணலால் படி எல்லாம் நர நர என்று இருப்பதாக ஒரு பிரம்மை. 

இது பாத்ரூம் வித் கெய்சர். 
டாய்லெட் கம்மோட். ஹேண்ட் ஷவர் வசதி. 
குளிக்க வெந்நீர் . ரைட்டில் திருப்பினால் குளிர் நீர். லெஃப்டில் திருப்பினால் வெந்நீர். 
இருவர் தங்க வசதி. படுக்கை. ப்ளாங்கெட். 


கோயிலுக்குப் போகுமுன்னும், தீர்த்தமாடும் முன்னும் செல்ஃபோன் பணம் , கண்ணாடி எல்லாம் கொண்டு போக முடியவில்லை. எனவே இங்கே உள்ள அலமாரியிலேயே வைத்துச் சென்றோம். ஒரு பயமுமில்லை. அப்படியே இருந்தது. 


ட்ரெஸ்ஸிங் டேபிள், வாஷ் பேஸின். 
இதுதான் அந்த அலமாரி. 

டேபிள் சேர், டிவி எல்லாம் உண்டு. 

விதான லைட்டிங்கும் ஃபேனும். 

மொத்தத்தில் நிம்மதியான தங்குமிடம்.

இதற்கு என்னுடைய ரேட்டிங் 4 ஸ்டார்.

****

ஏனெனில் ரூமுக்கு வரும் நடைபாதை/காரிடார் கொஞ்சம் குறுகலாக உள்ளது. அதைக் கட்டும்போதே இன்னும் கொஞ்சம் விரிவாகப் பாதை விட்டுக் கட்டி இருக்கலாம். மற்றபடி எல்லாம் சிறப்பு.

1 கருத்து:

  1. Thenammai Lakshmanan2 அக்டோபர், 2022 அன்று முற்பகல் 11:07
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...