எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 5 டிசம்பர், 2022

நூற்றாண்டுகள் கடந்த அலங்கார விதானம் . மை க்ளிக்ஸ். DECORATIVE CEILING. MY CLICKS.

நூற்றாண்டுகள் கடந்த அலங்கார விதானம் . மை க்ளிக்ஸ். DECORATIVE CEILING. MY CLICKS.

நூறாண்டுகளுக்கு மேலாக ஒரு வீட்டின் விதானம் அன்று வைத்த மேனிக்கு அழிவில்லாமல் அப்படியே இருக்க முடியுமா. இருக்கும் என்று நிரூபித்திருக்கிறது சாமி வீட்டில் காணப்படும் இந்த விதானம்.


ஒருமுறை படைப்பு சமயம் சாமி வீட்டிற்குச் சென்றபோது மதிய வேளையில் உணவுக்குப் பின் படுத்திருந்து மேல்நோக்கிப் பார்த்தவாறு பேசிக்கொண்டிருந்தேன் உறவினரோடு. அப்போது இந்த  விதானம் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது.




மிகவும் நுட்பமான வேலைப்பாடுகள். மெலிதான டைல்ஸ் அல்லது ஆத்தங்குடிக் கல்லை மேலே பாவி விதானம் அமைத்திருக்கிறார்கள். செட்டிநாட்டில் வீட்டின் விதானங்கள் தேக்கு மரச்சட்டங்கள் & தேக்கு மரப்பலகைகளால் அடைக்கப்பட்டதாக  கொண்டதாக இருக்கும். எனவே இதுவும் தேக்கில் வரையப்பட்ட ஓவியம் என நினைத்தேன்.


இந்தச் சாமி வீடு கட்டப்பட்டது 1920/25 களில் இருக்கலாம். இதைக் கட்டியவர் ஆவுடையான் செட்டியார் வீட்டுப் பங்காளிகளில் ஒருவரான திருமிகு தேனப்பச் செட்டியார் அவர்கள்.  தமிழறிஞரான எங்கள் மாணிக்கப் பெரியப்பாவின் தந்தையார். இன்றுவரை இந்த விதானம் இன்னும் வியப்புக்குரியதாகவே இருக்கிறது.


இந்த விதானத்தில் காணப்படுபவை  மரத்தில் வரையப்பட்ட இயற்கை ஓவியங்களாக இருக்கலாம் என்றே எண்ணியிருந்தேன். எப்படி இத்தனை ஓவியத்தையும் சாரம் கட்டி வரைந்தார்களோ என்று ஆராயப் புகுந்தபோது இந்தக் கோவில் வீட்டுக்கான மராமத்துப் பணிகளை இன்றளவும் செய்துவரும் உறவினர் ஒருவரிடம் இது பற்றி விசாரித்தேன்.


இயற்கை ஓவியமா அல்லது எனாமல் பெயிண்டிங்கா என்று கேட்டபோது இயற்கை ஓவியம் என்றால் அது மங்கலாகி இருக்கும். இது டைல்ஸைப் பதித்தது போல் தெரிகிறது என்றார். பூக்கல். 124 பூக்கற்கள். நடுவில் சதுரப் பூக்கல் ஒன்று. நான்கு புறமும் நடுவிலும் நீளமான ஓவியம் வரைந்த அல்லது பூக்கல் பதித்த வரந்தை.






அதிலும் பாருங்கள் ஓரங்களில் நான்கு பக்கமும் சிறகு கொண்ட தேவர்களின் நடனம். இவர்கள் கந்தர்வர்களா, கின்னரர்களா, கிம்புருடர்களா, சாரணர்களா   தெரியவில்லை.


மேலே ஃபால்ஸ் சீலிங் இருப்பதாகவும் அதில் இந்த ஸ்லாபுகள்/டைல்ஸுகள்/ஆத்தங்குடிக் கற்கள் பாவி கீழே மரச்சட்டங்கள் வைத்து முடுக்கி இருப்பதாகத் தெரிகிறது.



இந்த சீலிங்குக்கு மேல் ஓடு பாவிய கூரை உண்டு. இந்தக் கூடத்தில் படுத்திருந்தால் மிகக் குளிர்ச்சியாக இருக்கும்.



நடுவில் சாண்ட்லியர் விளக்குத் தொங்குகிறது அலங்காரமாய்.


பச்சை முத்தைப் பதித்தது போன்ற இந்த வரந்தையைப் பாருங்கள். இதுவும் ஓவியமா இல்லை நீளமாக பூக்கல்லால் செய்து பதித்ததா தெரியவில்லை.


க்ளோசப்பில் ஓரிரு பூக்கற்கள் லேசாக விரிசல் விட்டிருப்பதுபோல் தெரிகிறது.


இது அந்தக் கூடத்தில் இருக்கும் அறைகள்.

தூண்கள் & ஜன்னல்களின் வடிவமைப்பைப் பாருங்கள்.

கதவுக் கொண்டிகளும் , பூட்டுமிடமும், கதவுமே கரவு செறிவாக இருக்கிறதல்லவா.

ஜன்னல்கள், யானைக் கால்களைப் போல ஓங்கி உயர்ந்த 8 தூண்களுடன் கூடிய கூடம் உங்கள் பார்வைக்கு.


பார்க்கும்போதே வெம்மையும் குளிர்ச்சியும் ஒருசேரப் பரவுகிறது அல்லவா.


பிரகாசமான விதானம்.

காற்றோட்டத்துக்காக இந்த மேல்மாடத்தைச் சுற்றி/தாங்கும் வண்ணக் கண்ணாடிகள் பதித்த சுவருண்டு. அவ்வப்போது இதைத் திறந்துவிட ஆண்பிள்ளைகள் மாடிக்குச் செல்வார்கள். ஆனால் விதானம் இருக்கும் இடம் மட்டும் பூக்கல்லோ, டைல்ஸோ என்று இன்னும் யூகிக்க முடியாத மர்மமாகவே இருக்கிறது.



ஒரு நூற்றாண்டுக்கு முன்பே கூட ஒன்று அல்லது இரண்டு பாட்டையாக்கள் கொண்டுவிக்கச் சென்று வந்து இப்படிக் கோட்டைபோல வீட்டையும் சாமி வீட்டையும் கட்டி உள்ளார்கள். இன்றைய நிலைமைக்கு அவர்களின் பேரப்பிள்ளைகளான நமக்கு( நாம் எல்லாரும் சேர்ந்து செலவழித்தாலும்கூட ) இவற்றை எல்லாம் பராமரித்துக் காப்பதே பெரும்பாடாக இருக்கிறது.

1 கருத்து:

  1. 4 கருத்துகள்:

    திண்டுக்கல் தனபாலன்22 ஜூலை, 2020 அன்று முற்பகல் 10:29
    கலைநயம் மிளிர்கிறது...

    பதிலளிநீக்கு

    Kamala Hariharan22 ஜூலை, 2020 அன்று பிற்பகல் 7:55
    வணக்கம் சகோதரி

    கட்டடத்தின் கலை அம்சங்கள் மிகவும் அழகாக உள்ளது. பார்த்துப்பார்த்து பரவசமாக வியக்க வைக்கிறது.வீட்டின் ஒவ்வொரு இடங்களும் அந்த கால பொருட்கள் எவ்வளவு விலை மதிப்புள்ளது என்பதை படம் பிடித்து காட்டுகின்றன பாரம்பரியம் மிகுந்த அழகான வீட்டை எங்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

    Kasthuri Rengan23 ஜூலை, 2020 அன்று முற்பகல் 6:06
    மீண்டும் ஒரு சுவரஸ்யமான. தகவல்
    அருமை

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan27 ஜூலை, 2020 அன்று பிற்பகல் 1:00
    நன்றி டிடி சகோ

    நன்றி சகோதரி கமலா.

    நன்றி கஸ்தூரி ரங்கன் சார்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...