எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 5 ஜனவரி, 2023

பச்சைக் கிளிகளும் தாமரை மண்டபமும்.

பச்சைக் கிளிகளும் தாமரை மண்டபமும்.

ஒரு உறவினர் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்டேன். மிக மிக க்ராண்டாக காரைக்குடியே வியக்கும் வண்ணம் பி எல் பி பேலஸில் நடந்த திருமணம் அது. அதன் சில காட்சிகளும் உணவு வகைகளும் உங்கள் பார்வைக்கு.

வாசலில் வரவேற்பு அலங்காரம். கார் பார்க்கிங்கிற்கென தனி ஏரியாவே ஒதுக்கி இருந்தார்கள்.
காலை உணவை ப்ரிண்ட் அடித்தே கொடுத்துவிட்டார்கள். பால் பேணி, பாதாம் அல்வா, மைசூர் போண்டா, சிவப்பரிசிப் பணியாரம், பாலக் பூரி, பீட்ரூட் பூரி, இட்லி, பொங்கல், பனீர் தோசை, டாங்கர் சட்னி, அவியல் , சன்னா மசாலா, சாம்பார் என பத்துவகைப் பலகாரம்.
காரைக்குடி மட்டுமல்ல சுற்றி உள்ள ஊரின் பெருமக்கள் அனைவரும் கலந்துகொண்ட விழாவாக அது இருந்தது.

சென்னை, மும்பை மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏகப்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டார்கள்.
மணமேடை அலங்காரம் வெகு விமரிசை. கவின்மிகு பச்சைக்கிளிகள் மணமக்கள் போல் கொஞ்சி விளையாடின.
தாமரை மண்டபம். எல்லாமே அசல் பூக்கள். தோரணங்கள் வெகு அழகு.
விதான சாண்ட்லியர்கள். விளக்கு அலங்காரங்கள். ஒலி அமைப்புகள்.
பக்கவாட்டு விதானங்களில்  திருமணங்கள் புடைப்புச் சிற்ப வடிவில்.
திருமணக் காட்சிகளும் சாந்தி சதாபிஷேகம் போன்றவையும் இடம் பெற்றிருந்தன.
அந்தத் திருமணத்தில் பல விஐபிக்கள் வந்திருந்தாலும் என்னைக் கவர்ந்த சினேகா பிரசன்னா தம்பதிகள்.
சினேகாவும் பச்சைக்கிளி போல இருந்தார். பச்சை பார்டர் போட்ட தாமரைப்பூ நிற புடவை கட்டி நகைகளோடு ஜொலித்தார்.
குழந்தை வெகு அழகு. ஒரு கட்டத்தில் அனைவரும் சினேகாவுடன் புகைப்படமெடுக்கப் படையெடுக்க பிரசன்னா குழந்தையுடன் சென்று ஒரு சேரில் அமர்ந்தார். உடனே அடுத்த சில நொடிகளில் ரசிகர்களின் சில க்ளிக்குகளுக்கு அவசர போஸ் கொடுத்துவிட்டு  சினேகாவும் வேக வேகமாகச் சென்று கணவருடன் இணைந்து அமர்ந்து கொண்டார்.
கார்த்திக்கின் இன்னிசைக் கச்சேரி களைகட்டியது. எதிரே மிகப் பிரம்மாண்டமான திரையில் திருமணக் காட்சிகள் அங்கங்கே காணக் கிடைத்தன.
டைட் செக்யூரிட்டி. எந்தப் பக்கமும் போக வர முடியாது. மணமேடைக்கு செல்ல செருப்பைக் கழட்டிவிட்டுச் சென்றேன். அதன்பின் இன்னொரு புறம் இறங்கிவிட்டதால் மணமேடையைக் கடந்து சென்று செருப்பைத் தேடினேன். ஹோ கயா காணவில்லை.மணமேடையில் ஏறிய அனைவருமே செருப்பைப்போட்டுவிட்டு ஏறி இறங்க,  எங்கோ அதற்குள் எடுத்துச் சென்று அந்த இடத்தை எல்லாம் க்ளீன் செய்திருந்தார்கள். தேடிக் கொண்டே இருந்தேன். கடைசிவரை கிடைக்கவேயில்லை.
மதிய உணவு. வெஜ் புலவ், பட்டர் நான், பன்னீர் க்ரேவி, மல்லி ரைஸ், அக்காரவடிசல், கட்லெட், துவட்டல், பச்சடி, கூட்டு, மண்டி , பிரட்டல் வகையறா, வாழைக்காய் கருவாட்டுப் பொரியல் அப்பளம், குட்டி பானையில் தயிர், பழப் பாயாசம் என க்ராண்டாக இருந்தது சாப்பாடு.
ஆச்சு திருமணம் முடிச்சதும் மணமக்களை ஆசீர்வாதம் செய்துட்டு வெரைட்டி வெரைட்டியான ஐஸ்க்ரீம்களை ஒரு கை பார்த்துட்டு அவர்கள் கொடுத்த தாம்பூல கிஃப்டோடு வீட்டுக்குக் கிளம்பியாச்சு. ஊருக்கே கல்யாண சாப்பாடு போட்ட அந்தத் தம்பதிகள் வாழ்க. வாழ்க. :)

1 கருத்து:

  1. Thenammai Lakshmanan18 ஏப்ரல், 2018 அன்று பிற்பகல் 7:20
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...