எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 3 பிப்ரவரி, 2023

லல்லியுடன்.

லல்லியுடன்.

முகநூலில் நாங்கள் மிகவும் நட்பாக இருந்ததோடு மட்டுமல்ல. லல்லியின் வீட்டுக்கும் ஒருமுறை சென்றிருக்கிறேன்.அடையார் ஆனந்தபவனில் அவளுடன் லஞ்ச் சாப்பிட்டிருக்கிறேன். 

கோவை சென்றிருந்தபோது மருதமலை செல்லும் வழியில் லல்லிக்கு ஃபோன் செய்தேன். உடனே தன் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு பிக்கப் செய்ய வந்துவிட்டாள். 

அழகான அருமையான வீட்டில் அம்மாவையும் பார்த்துக்கொண்டு அஷ்டாவதானம் செய்துகொண்டும் இருந்தாள்.( சினிமா டிஸ்ட்ரிப்யூஷனும் கூட !)

மகனுக்கு கான்வகேஷனுக்காகக் கோவை சென்றபோது இரண்டாம் முறையாகச் சந்தித்தோம். 
லல்லியின் பொண்ணு அப்ஸராவுடன்.
எனக்காக , என் ப்லாகுக்காக சாட்டர்டே ஜாலி கார்னர் என்ற தலைப்பில் முதல் முதலாக “ஊட்டி வரை உறவு “ என்று ஜாலியாக எழுதிக் கொடுத்தாள்.

இன்னொரு முறை காதலர் தினம் பற்றிக் கேட்டபோது தங்கள் காதல் திருமணம் பற்றி அழகாக எழுதி அனுப்பினாள். 

பல்துறை வித்தகி. :)


ஏடுபி யின் படிகளில் எல்லாம் படிப்படியாகப் புகைப்படம் எடுத்தோம். 

சுட்டித்தனத்துக்குச் சொந்தக்காரி என்றாலும் தன்மையானவள். 



அவள் வீட்டுக்குச் சென்றிருந்தபோது முரளியையும் சந்தித்தேன். இருவரும் மேட் ஃபார் ஈச் அதர் கப்பிள். 




எல்லா நாளும் எல்லா ஃப்ரெண்ட்ஸின் முகநூல் பக்கமும் போகமுடியாது என்பதால் எப்போதோ ஒருமுறை போய் ஒன்றாக நாற்பது ஐம்பது லைக்ஸ் போடுவது வழக்கம். அதனால் ஃபோன் ஜாம் ஆகிவிடுவதாக அவள் கோபித்துக் கொண்டாலும் விடுவதில்லை.ஆனால் சிறிது சிறிதாக முகநூல் போவதும் குறைந்துவிட்டது. தள்ளியே இருந்தாலும் நாங்கள் இன்னும் மனதளவில் ஒன்றாகவே இருப்பதாகவே நினைக்கிறேன்.

லல்லியைப் பற்றிச் சொல்ல இன்னும் நிறைய உண்டு. ஆனால் அது அக்காவுக்கும் தங்கைக்கும் இடையேயான மலரும் நினைவுகள் என்பதால் இங்கே புகைப்படங்கள் மட்டும். அருமையான சாப்பாட்டுக்கு நன்றி லல்லி. நல்ல எழுத்துக்களையும் எனக்காக அனுப்பியதுக்கும் நன்னி. என் மேலான உன் அன்புக்கு என் அணைப்பும் முத்தங்களும்.

1 கருத்து:

  1. ஸ்ரீராம்.7 நவம்பர், 2020 அன்று முற்பகல் 6:43
    நட்புக்கு மரியாதை. வாழ்க வளர்க நட்புறவு...

    பதிலளிநீக்கு

    Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University7 நவம்பர், 2020 அன்று முற்பகல் 10:04
    நட்பைப் பகிர்ந்த விதம் சிறப்பு

    பதிலளிநீக்கு

    திண்டுக்கல் தனபாலன்7 நவம்பர், 2020 அன்று முற்பகல் 11:40
    புன்னகை அரசிக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு

    சந்தான சங்கர்13 நவம்பர், 2020 அன்று பிற்பகல் 3:14
    நலமாக இருக்கின்றீர்களா?

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan28 டிசம்பர், 2020 அன்று முற்பகல் 2:08
    நன்றி ஸ்ரீராம்.

    நன்றி ஜம்பு சார்

    நன்றி டிடி சகோ

    நலம்தான் சந்தான சங்கர். நீங்க நலமா ..ரொம்ப நாளாயிற்று எல்லார் வலைப்பக்கமும் வந்து. நேரமே கிடைப்பதில்லை.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...