முதலாம் சந்திப்பில்..
2010 மே 29, லாமிக்கிள் ஹோட்டலில் முதல் முகநூல் தோழிகள் & நண்பர்கள் சந்திப்பு. இதற்கு முன்பே கயலை மட்டும் நான் சந்திருக்கிறேன். அதாவது முதன் முதலில் எங்கள் வீடு தேடி வந்து என்னை சந்தித்த முகநூல் தங்கை அவர்தான். அது பற்றி தனியா ஒரு போஸ்ட் போடுவேன்.
கயல், செல்வா, செல்வாவின் மனைவி ஜெயந்தி, தம்பி அன்பு, தங்கை தமிழ்ச்செல்வி, அவரின் அழகு மகள் மது , இவர்களோடு பாகி என்று நாங்கள் பாசத்துடன் அழைக்கும் பா கிருஷ்ணன் சார், செந்து என்று நான் அழைக்கும் நண்பர் சொக்கலிங்கம் செந்தில்வேல், இவர்களோடு இயக்குநர், நடிகர் சேரன் அவர்களையும் சந்தித்தோம்.
நண்பர் கா வா அவர்களின் பிறந்தநாள் என நினைக்கிறேன்.
நண்பர் சேரனுடன் மதுவும் நானும்.
முதலில் நிற்பவர்தான் நண்பர் கா வா. இந்த சந்திப்பில் முகநூலில் மட்டுமே சந்தித்த அனைவரையும் நேரில் கண்டு அளவளாவினோம். ரொம்ப ரொம்ப உற்சாகமான சந்திப்பு. மதியம் 12 மணியில் இருந்து மாலை 3 மணி வரை நீடித்தது.
தாம்பரத்திலிருந்து தங்கை தமிழும் அவர் மகள் மதுவும், மாயவரத்திலிருந்து நண்பர் செந்துவும் வந்திருந்தார்கள். பேச்சு பேச்சு பேச்சுத்தான். பஃபே உணவு அருமை. நடுவில் ஒவ்வொருவரும் அறிமுகப்படுத்திக் கொண்டோம். பாகி நிறையத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
முகநூல் நண்பர்கள் சந்திப்பு என்பது அப்போது புதிதான விஷயமாகையால் மிக எக்ஸைட்டிங்காகவும் இனிமையாகவும் இருந்தது. எழுத்தில் அங்கீகாரம் கிடைத்துக் கொண்டிருந்த நேரம். இதனால் செந்து செல்வா எல்லாரும் எனக்கு மிக நல்ல வாய்ப்புகளை வழங்கினார்கள். சென்னையில் சென்ற அனைத்து இடங்களிலும் ( பதிவர் சந்திப்பு, பள்ளி, கல்லூரிகளில் உரையாற்றச் செல்லும்போது என ) கயல் எனக்குத் துணையாக பக்கபலமாக இருந்தாள். அவளை நான் மறக்கவே முடியாது.
அன்பு, செல்வா, கயல், வசு, நான் ஆகிய ஐந்து பேரும் நான் சென்னையில் இருந்த இரு ஆண்டுகளில் பலமுறை ஒன்றாகச் சந்தித்திருப்போம். எங்கள் ஐவரின் எண்ணங்களும் ( வேவ்லெந்த்) ஒன்றாக இருந்தன என்பதையும் சொல்ல வேண்டும்.
மிக சுவாரசியமான சந்திப்பாக அமைந்தது மட்டுமல்ல சென்னையின் இன்ன பிற ஹோட்டல்களிலும் பின்னர் ராஜிக்கா, ஜம்மு, ஸ்ரீஜி ஆகியோர் வரும்போது சந்தித்தோம். அவை எல்லாம் பின்னொரு இடுகையில்.
2 கருத்துகள்:
பதிலளிநீக்குவெங்கட் நாகராஜ்1 செப்டம்பர், 2020 அன்று பிற்பகல் 12:31
இனிய நினைவுகள்....
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan10 செப்டம்பர், 2020 அன்று பிற்பகல் 4:36
நன்றி வெங்கட் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!