சென்னையில் இருந்தபோது முகநூலிலும் வலைப்பதிவிலும் எழுதி வந்ததால் நிறைய நண்பர்கள் சந்திக்க விரும்புவார்கள். அப்போது ஸ்டார் ஹோட்டல்களில் முகநூல் சந்திப்பு என்பது பிரபலம். முதன் முதலில் எங்கள் வட்டத்தின் நண்பர்களைச் சந்திக்க புருனேயிலிருந்து வந்திருந்தார் ஜம்மு. இவர் மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். பெயர் இராஜேஸ்வரி மலரவன். இனி எங்கள் ஜம்முவுடனும் கயல், அன்புடனும்.
இந்த சந்திப்பு ஜூன்1, அன்று ராதா பார்க் இன்னில் நடந்தது. அன்றைக்கு நாகா, செல்வா, வசு , ஜம்முவின் சகோதரியும் வந்திருந்தார்கள்.தொலைக்காட்சி நடிகர் போஸும் அந்த ஹோட்டலுக்கு வந்திருந்தார்.
ஜம்மு ராதா பார்க் இன்னில் அளித்த மதிய விருந்து. பஃபே. அன்பான வரவுக்கும் அருமையான உணவுக்கும் நன்றி ஜம்மு. இன்று வரை நாங்கள் அனைவரும் தொடர்பில் இருக்கிறோம் என்பதே மகிழ்வான செய்தி:)
முகநூல் சாங்க்யப்படி ஹோட்டல் வாசலில் க்ரூப் ஃபோட்டோ எடுத்தவுடந்தான் அந்த மீட் முடிவுக்கு வரும். மதியம் 12 மணிக்கு ஆரம்பிக்கும் மீட் பொதுவாக மூன்று மணி வரை நீடித்து ஹோட்டல்காரர்கள் ஒவ்வொன்றாக எடுத்துச் செல்ல ஆரம்பித்து விளக்குகளையும் ஒவ்வொன்றாக அணைக்கத் தொடங்கும்போதுதான் வெளியே வர வேண்டுமென்ற எண்ணம் எங்களுக்கு உருவாகும். அதன்பின்னும் காரிடார் , முகப்பு, கார்பார்க்கிங் என்று குழு குழுவாக அரட்டை அடித்துவிட்டுத்தான் கிளம்புவோம்.
லாமிக்கிளில் அன்பு & காவாவின் பிறந்தநாள் அன்று சந்தித்தோம். இந்த மூன்றாவது சந்திப்பு நிகழ்ந்தது ஜூன் 17. பால் மில்லர், மாயவரம் ஏவிசி கல்லூரிகளின் தாளாளர் சொக்கலிங்கம் செந்தில்வேல் ( செந்து ) , அவர் மனைவி மீரா ஆகிய நண்பர்களைச் சந்தித்தோம். அநேக இடங்களில் எங்களைப் புகைப்படம் எடுத்தவர் ஜெபி என நாங்கள் அழைக்கும் ஜெயராஜ் பாண்டியன் ( மக்காஸ் ஸ்டூடியோ) ஆகத்தான் இருக்கும். எனவே அருமையான புகைப்படங்கள் எடுத்த அவர் படங்களில் இருக்க மாட்டார்.
ஜூலை 13 அன்றே க்ரீன் பார்க் இன்னில் என் நட்புகள் என் பிறந்தநாளைக் கொண்டாடினார்கள்!. கயல், வசு, செல்வா, அன்பு, வசுவின் மகன்கள் வந்திருந்தார்கள்.
வழக்கம் போல் ஃபோட்டோக்கள் நோக்கம்போல் அப்லோட் ஆகி தலைகீழாக வந்துள்ளன. நீங்களும் ஒரு துண்டு கேக் எடுத்துக்கோங்க. சென்னையில் நான் இருந்தவரை கயல் வசு செல்வா அன்பு ஆகிய நால்வரும் என்னை எங்கே சென்றாலும் கூட்டிப் போய்க் கொண்டு வந்து வீட்டில் விட்டு விடுவார்கள். அதனாலேயே நான் நிறைய சந்திப்புக்களுக்குப் போக முடிந்தது. நாங்கள் ஐவர் டீம். நன்றியும் அன்பும் மக்காஸ்.
Thenammai Lakshmanan12 அக்டோபர், 2020 அன்று பிற்பகல் 11:42
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!