அக்கார்ட், மேரி ப்ரவுன், வஸந்தபவன் சந்திப்புகள்.
முகநூல் நட்புகள் சந்திப்பு சென்னையில் தொடர்ந்து நடந்துகொண்டு இருந்தது நான் அங்கே இருக்கும் வரை. அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக அருகிவிட்டது என்றே சொல்லலாம்.
இது வடபழனி நம்ம வீடு வஸந்தபவனின் இளங்கோ மச்சி, தங்கை கீதா அழைப்பிற்கிணங்கக் கலந்து கொண்டது. கையில் கட்டு இருந்தாலும் ( லெகமெண்ட்ஸ் டிண்டான் கிழிந்து சர்ஜரி ) . மதுமிதா, வாணி, பாபு, மகி, நிதீஷ், மோகன், பாகி, கேபிபி நவீன், ஆகியோர் கலந்து கொண்டோம். அக்டோபர் 2 ஆம் தேதி இந்தச் சரித்திரப் பிரசித்தி வாய்ந்த சந்திப்பு நிகழ்ந்தது :) இவர்கள் எல்லாருமே மிகப் பெரிய ஆளுமைகள் என்பது நான் சொல்லாமலே தெரிந்திருக்கும்.
இதில்தான் ஜேபி எனப்படும் ஜெயராஜ் பாண்டியன் இருக்கிறார். எல்லாப் புகைப்படமும் இவர் எடுத்ததாகவே இருப்பதால் எந்தப் புகைப்படத்திலும் இவர் இருக்க மாட்டார். இது நான் எடுத்த படம். ஒற்றைக் கையால். :) வாணிக்கு செண்டாஃப் பார்ட்டி :)
செப்டம்பர் 15 அன்று இஸ்பஹானில் இருக்கும் மேரி ப்ரவுனில் தம்பி கிஷோர் ராஜின் மகள் ஷிவானியின் பிறந்தநாள் கொண்டாட்டம்.
இந்தப் புகைப்படத்தில் மட்டும்தான் தம்பி சதீஷ் இருக்கிறார். ஏனெனில் மற்ற புகைப்படங்களை எடுத்ததே அவர்தான். ஒவ்வொருவரையும் பார்த்து குசலம் விசாரித்து அளவளாவி முடிக்கவே நேரம் முடிந்துவிட்டது.
சின்னத்திரை நடிகை ஒருவர் வந்திருந்தார் பெயர்தான் ஞாபகம் இல்லை.
வசுவின் பையன்கள் இருவர், சதீஷின் பையனும் பெண்ணும் கிஷோரின் பிள்ளைகள் என ஒரே குதூகலமும் கொண்டாட்டமுமாக இருந்தது குட்டீஸ் கூட்டம்.
எத்தனை முறைதான் புகைப்படம் எடுப்போமோ .. எவ்வளவு சந்தோஷம்.. அச்சச்சோ புன்னகை..கயல் :)
நான், வசு, கயல்.
ரோமா அவர்களுடன்.
ரங்கமணியும் நானும்.
அடுத்து அக்கார்டில் வாணி வந்தபோது எடுத்தது. வாணி கொடுத்த விருந்து. செப் 5, வெல்கம் மீட் அட் அக்கார்ட். மரியா, கயல் ஆனந்த், வாணி, அன்பு, நான், வசு.
மும்மூர்த்திகள்.
ஐஸ்க்ரீம் கப்பை வைச்சிக்கிட்டு அலப்பறை. :) ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்.. ஏன் ஏன் ஏன் :)
கிஷோர், தீபா கிஷோர்.
வாணியுடனும் தீபாகிஷோருடனும்.
அது ஒரு அழகிய நிலாக்காலம். இந்தக் கொரோனா காலத்துக்குப் பின் எப்போது சந்திக்கப் போகிறோமோ தெரியவில்லை. எல்லாம் ஜூம் மீட்டிங்கில் இருக்கும்போது முகநூல் நண்பர்கள் சந்திப்பையும் ஜூமில் நடத்தலாமா என்று யோசிச்சிங் :)
பதிலளிநீக்குYarlpavanan19 செப்டம்பர், 2020 அன்று முற்பகல் 5:10
கொரோனாவின் பின் சந்திப்பு அருமை
கொரோனாவின் முன் போல வருமா?
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan12 அக்டோபர், 2020 அன்று பிற்பகல் 11:48
இது எடுத்து 10 வருஷம் ஆச்சு யாழ்பாவண்ணன் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!
பதிலளிநீக்கு