எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 6 நவம்பர், 2023

ஃபோர்டெல் ஓட்டலில் எட்டுநாட்கள் ஃப்ரேக்ஃபாஸ்ட்.

ஃபோர்டெல் ஓட்டலில் எட்டுநாட்கள் ஃப்ரேக்ஃபாஸ்ட்.

 சென்னை எக்மோரில் உள்ள ஃபோர்டெல் ஓட்டலில் எட்டு நாட்கள் நாங்கள் தங்கி இருந்தோம். அப்போது ஒவ்வொரு நாளும் காலையில் காம்ப்ளிமெண்டரி ஃப்ரேக்ஃபாஸ்ட் கொடுத்தார்கள். அவற்றை இங்கே பகிர்ந்துள்ளேன். நல்ல விசாலமான டைனிங் ஹால். எக்மோருக்கு ரொம்பப் பக்கம் என்றாலும் துளிக்கூடத் தூசியோ சத்தமோ இல்லை. 

பலவகையான உணவுகள் காலையில். ஃப்ரெட் ஆம்லெட், ப்ரெட் டோஸ்ட், கார்ஃப்ளேக்ஸ் மில்க், ஓட்ஸ் கஞ்சி, அவித்த முட்டை, ஆலு பரோட்டா, ஸ்வீட் ஒன்று, தேங்காய்ச் சட்னி, கொத்துமல்லி/புதினா/தக்காளிச் சட்னி, சாம்பாருடன் இட்லி, ஊத்தப்பம், வடை, பொங்கல், கிச்சடி, பழ வகைகள், அவித்த சோளம், பயறு வகைகள், சாலட்டுகள், வெஜிடபிள் ஸ்லைஸஸ், டெசர்ட்டுகள், கேக்குகள்,  பழச்சாறுகள், காஃபி, டீ என்று அசத்தலான சத்துள்ள உணவுகள். 

மூன்று பேர் தங்கி இருந்தோம். எனவே எல்லார் ப்ளேட்டையும் அவ்வப்போது சேர்த்து எடுத்துள்ளேன் மக்காஸ். சேமியா பாயாசம், அவித்த முட்டை. சாம்பார் இட்லி, தேங்காய்ச் சட்னி, ஆலு பரோட்டா, தயிர், ஊறுகாய், பைனாப்பிள், தர்ப்பூசணி, பப்பாளிப் பழத்துண்டுகள், அவித்தசோளம், பழச்சாறு. பாலில் கார்ன்ஃப்ளேக்ஸ். 



நறுக்கிய பழத்துண்டுகளும் பழச்சாறுக் குடுவையும்.தினம் ஒரு பழச்சாறு உண்டு. ரியல் ஃப்ரெஷ் ஜூஸ்.

இதுதான் சர்வீஸ் மேடை. இங்கே கப்புகள், ப்ளேட்டுகள், ஸ்பூன்கள், கட்லெரிகள் உணவு வகைகள் சூடாக இருக்கும். ப்ரெட் கார்ஃப்ளேக்ஸ், காபி இத்யாதிகள் இருக்கும். 
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு டேபிளில் அமர்ந்து உணவருந்தினோம். இது டைனிங் ஹால் கிச்சனுடன் சேரும் இன்னொரு முனை. 
அடுத்த நாள் வெஜிடபிள் ஆம்லெட், ப்ரெட் பட்டர் ஜாம், கொண்டக்கடலை அவித்தது, பழத்துண்டுகள், பைனாப்பிள், தர்ப்பூசணி, கொய்யா, பழச்சாறு, டீ. 

SO GRILLED TO SEE YOU என்று ரசனையோடு பார்பக்யூவுக்கு அழைக்கும் வாசகங்கள். :) 


சாப்பிட வந்தவுடன் முதலில் பொடியை வைச்சுக்கணும்.

ஆமா சொல்ல மறந்துட்டேன். ஒருமுறை முருகன் இட்லிக் கடையில் பொடி கேட்டு வாங்கிச் சாப்பிட்டோம். அதுக்கு 18 ரூ அடிஷனல் சார்ஜ் !

ஆமா எல்லா ஹோட்டல்களிலும் ஏன் பொடியை மண்ணுமாதிரியே திரிச்சு வைச்சிருக்காங்க.. டெக்ஸரிலும் சரி ருசியிலும் சரி. :) நல்லெண்ணெய் பரவாயில்லை. 
பைனாப்பிள்துண்டுகள், ஜூஸ், பன், அவித்த பட்டாணி, ஊறுகாய், பொடி எண்ணெய், தேங்காய்ச்சட்னி, சாம்பாருடன் இட்லி, வடை, சேமியா கிச்சடி, ரவா கேசரி, 

சேமியா கீர், முலாம்பழ ஜூஸ், பைனாப்பிள், ஆலு பரோட்டா, கொண்டக்கடலை, ஊறுகாய், பொடி, எண்ணெய், புதினா சட்னி, இட்லி, பொங்கல், வடை, சாம்பார், தேங்காய்ச்சட்னி. 
பப்பாளி, தர்பூசணித்துண்டுகள், மிக்ஸ்ட் பழச்சாறு, வீட் ப்ரெட், மைதா ப்ரெட், அமுல் பட்டர், பால் பேடா, இட்லி, சாம்பார் வடை, தேங்காய்ச் சட்னி, தக்காளிச் சட்னி, பொடி எண்ணெய், ரவா கிச்சடி,  மேத்தி பரோட்டா, ஊறுகாய், அவித்த முட்டை, பச்சைப் பட்டாணி, கேரட், வெள்ளரி ஸ்லைஸஸ், கேக், மினி பப்ஸ்.

இதில் ஸ்வீட் கேசரி. 
சர்க்கரைப் பொங்கல் இட்லி, சாம்பார், மல்லிச் சட்னி, பொடி எண்ணெய், பூரி மசால், சேமியா கேசரி, ரவா கிச்சடி

 தினமும் மசாலா ஆம்லெட் வாங்கிச் சுடச் சுட சாப்பிட்டோம். தோசையும் கேட்டால் சூடாக ரோஸ்டாகப் போட்டுத் தந்தார்கள். நன்றி அதன் ஹெட் லேடிக்கும் : ) ( பெண் ஊழியர்கள் அழகான கோட் அணிந்து நளினமாகக் காட்சி அளித்தார்கள் ).எட்டு நாளும் நல்லுணவு கொடுத்துப் போஷித்த ஃபோர்டெல்லுக்கும் அதன் ஊழியர்களுக்கும் நன்றி.

1 கருத்து:

  1. vic9 ஆகஸ்ட், 2023 அன்று முற்பகல் 4:20
    ஒரு நாள் கட்டணம் எவ்வளவு என்று சொல்ல முடியுமா?

    பதிலளிநீக்கு

    அப்பாதுரை9 ஆகஸ்ட், 2023 அன்று முற்பகல் 8:22
    எத்தனை வருடங்களாகின்றன உங்க வலைக்கு வந்து!!?

    தொடர்ந்து எழுதி வருவதை பார்க்க நிறைவாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan10 ஆகஸ்ட், 2023 அன்று பிற்பகல் 6:55
    @Vic ஒரு நாள் கட்டணம் 3,000/- ரூபாய்

    நன்றி அப்பாத்துரை சார். இப்போதும் வந்து வாழ்த்தியமைக்கு நன்றி

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

    பதிலளிநீக்கு

காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை

 காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை  திருநெல்வேலியைச் சேர்ந்த நெல்லை உலகம்மை என் அன்புத்தோழி. கல்வி ஆலோசகர், சிறப்புப் பேச்சாளர், தன்னம்பி...