எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS.

மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS.

மகர்நோன்புக்காக திருநெல்லைஅம்மன் கோயில் மண்டபத்தில் அம்மா மாவிளக்கு இட்டபோது எடுத்தது. :)
திருப்பதியில் திருக்கல்யாணத்தின் போது கிடைத்த பிரசாதம். பிரம்மாண்ட லட்டு. இங்கே ஆர்டிஃபிஷியலா கூட்டம் கூட்டப்படுதுன்னும். சிங்கிள் லைனில் விட்டால் காத்திருப்பு இல்லாமல் தரிசிக்கலாம்னும் வாட்ஸப்பில் ஃபார்வேர்டு மெசேஜ் வந்தது. ஓரளவு ஒப்புக்கொள்ளக்கூடியதுதான் என்றாலும் நாம ஏன் அந்த அரசியலுக்குள்ளே எல்லாம் போகணும். வாங்க லட்டை ருசிப்போம். ஒரே ஏலக்காய், முந்திரி, கிஸ்மிஸ், கல்கண்டு, கிராம்பு, நெய் மணக்க இத வெல்லப்பாகுல செய்றாங்களா இல்ல சீனிலயா.. ரொம்ப டேஸ்டி லட்டு.
அங்கேயே கிடைத்த மிளகு தட்டை வடை.
சாதா லட்டு ஐந்தும் கூட கிடைச்சுது. இங்கே முனிசிபாலிட்டில போய் ஆதார் கார்டு இல்ல அடையாள அட்டை ஏதும் காண்பிச்சு தர்ஷன் க்கு டோக்கன் வாங்கணும். ஒரு டிக்கெட் 500 ரூபாய். ( திருக்கல்யாணத்துக்கு ). தெரிஞ்சவங்க இருந்தா மறுநாளே தரிசிக்க முடியும். வங்கி ஊழியராச்சே. மேனேஜர் மூலமா கேட்டு போன மறு நாள் தரிசிச்சோம். ஆனா மலைக்கு நடந்து வர்றவங்களுக்கு நேரா கடவுள் தரிசனம்தான். :)


இது பெங்களூரு ராஜேஸ்வரி டெம்பிள்ல நாங்களே வாங்கின ப்ரசாதம் . 40 விதமான பிரசாதங்கள் இருந்துச்சு. அத எல்லாம் பார்த்து ஜொள்ளு விட்டுட்டு அடுத்த தபா வாங்கிக்கலாம்னு  மனச தேத்திக்கிட்டு ( ஹிஹி ) அதிரசம், மிளகாய் பஜ்ஜி, சந்த்ரகலா, கிருஷ்ண ப்ரசாதம், மன் பசந்த் வாங்கினேன் :)
இது ட்ரிப்ளிகேன் பார்த்தசாரதிப் பெருமாள் கோயில் ப்ரசாதம். எங்கே போனாலும் அதிரசத்தைப் பார்த்தா விடமாட்டோமாக்கும் :) நெய் முறுக்கு & மணக்க மணக்க புளியோதரை. எப்பிடித்தான் இப்பிடி ருசியா செய்றாங்களோ.
பெங்களூரு வீட்டில் ஒரு அர்ஜண்ட் பிள்ளையார் நோன்புப் பலகாரம். மாவுருண்டை, காரட் அல்வா, வெள்ளைப் பணியாரம், வடை.
இது தீவாளிக்குச் சுட்ட வடை.
வடையை சுட்டு சாமிக்கு வைச்சுக் கும்பிட்டா அது பிரசாதம்தானே ஹாஹா.
வெங்காயம் போடக்கூடாதுன்னு வெங்காயம் இல்லாம சுட்ட வடை . இதுவும் வெள்ளை வெளேர்னு இருந்தாலும் பஞ்சு பஞ்சா ஆட்டுன உடனே சுட்டா நல்ல ருசி.
எவ்வளவுதான் வடை தின்னாலும் அடையார் ஆனந்தபவன் வடைக்கு ஈடாகுமா. ஏன்னா அவங்கதானே சோம்பல் பாராம சட்னி சாம்பாரோட தர்றாங்க. வீட்லன்னா இருக்க மிச்ச சாம்பார், சட்னி, பொடி வைச்சு சாப்பிடுவோம். இல்லாட்டி கொஞ்சமா தேங்கா சட்னி மட்டும் அரைப்போம். :) யம்மி யம்மி பஞ்சு வடைஸ். அதுல இருக்க மிளகு அகஸ்மாத்த பல்லுல படும்போது சுரீர்னு காரத்தோட ஒரு த்ரில் :)


டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.

1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS. 

2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS.

3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.

4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.

5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS. 

6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.

7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS. 

8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS. 

9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS. 

10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள். 

11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..

12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.

13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)

14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL. 

16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY. 

17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS ) 

18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS. 

20.  மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.

21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.

22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.

23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.

24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS. 

25.  மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS.

1 கருத்து:

  1. நெல்லைத் தமிழன்6 ஏப்ரல், 2017 ’அன்று’ முற்பகல் 11:54
    பிரசாதப் படங்களைக் கண்டேன்.. ருசித்தேன்.. திருப்பதி பெரிய லட்டு, அந்தக் காலத்தில் (30-40 வருடங்களுக்கு முன்) கொடுக்கும் சிறிய லட்டு சைசுக்கு வந்துவிட்டது. நான் வாங்கிய பெரிய லட்டுவில் (80கள்), இரண்டு கைகளினால்தான் பிடிக்கும்படி இருக்கும், அதில் 4 பாதாம் போட்டிருப்பார்கள்.

    ராஜேஸ்வரி கோவில் பிரசாதத்தில், அது 'மன் பசந்த்' இல்லை. 'தில் பசந்த்'.

    கோவில் வடையையும், வீட்டில் செய்யும் வடைகளையும் (அதிலும் கொஞ்சம் வெள்ளை நிறத்தில் கருவேப்பிலை(? அல்லது கொத்தமல்லியா, மிளகாயோடு இருக்கும் வடை பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு) விடவா, அடையார் ஆனந்தபவன் வடை நல்லாயிருக்கு? வாய்ப்பே இல்லை.

    பதிலளிநீக்கு

    G.M Balasubramaniam7 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 4:07
    அதெப்படி திருமலை லட்டுவில் மட்டும் எப்போதும் ஒரே சுவை

    பதிலளிநீக்கு

    Thulasidharan V Thillaiakathu10 ஏப்ரல், 2017 ’அன்று’ முற்பகல் 12:10
    ஆஹா இப்படி காணக் கண் குளிர (பின்ன எடுத்து சாப்பிடவா முடியும் ஹிஹிஹ்) பிரசாதப்படமா போட்டு நாக்குல ஜொள்ளு விட வைச்சுட்டீங்களே!!! அது சரி உங்க வடையே டேஸ்டி டேஸ்டி நு சேப்பு வடை, ஹாஃப் வைட் வடை, வைட் வடைனு செமையா செஞ்சுட்டு அடையார் ஆனந்த பவன் வடையையும் கம்பேர் பண்ணிட்டீங்களே!!!!!! நோ சான்ஸ் உங்க வடைதான் சூப்பர்!! வீட்டு வடை! அதுதான் பிடிச்சுருக்கு!! பார்சல் அனுப்புங்க ஹிஹிஹி!

    கீதா

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan17 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 2:15
    இதிலும் பாதாம் இருந்தது நெல்லைத்தமிழன் சொல்ல மறந்துட்டேன் :) ஆமாம் பேர் மறந்துட்டேன். தில் & மன் எல்லாம் ஒன்றுதானேன்னு :)வெங்காயம் பச்சைமிளகாய் பொடியா அரிஞ்சு போட்டேன். கொஞ்சம் கருவேப்பிலை துளிரும் போட்டிருக்கேன். நன்றி நன்றி நன்றி :)

    அதான் தெரில பாலா சார். வெல்லம் சேர்ப்பதால் இருக்குமோ

    அஹா நன்றி கீதா. நீங்களும் வடைப் பிரியையா :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...