பிகேஆரும் இண்டர்காமும். :-
பிகேஆரும் இண்டர்காமும். :-
கணவரின் பணி நிமித்தமும் ஊர்சுற்றிப் பார்க்கவும் நிறைய மாநிலங்களுக்குச் சென்றபோது ஹோட்டல்களில் தங்க நேர்ந்ததுண்டு. இந்தத் தொடரில் அப்படி நான் சென்று வந்த ஹோட்டல்களைப் பற்றிய மதிப்பீட்டை எழுதலாம் என நினைக்கிறேன்.
சென்னையில் இருக்கும் பிகேஆர் ஹோட்டல் டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது . பெரும்பாலும் நான் பார்த்த ஹோட்டல்களில் மிகப் பெரிதானதும் நீட்டாக மெயிண்டெயின் செய்யப்படும் ஹோட்டல்களில் இதுவும் ஒன்று. வலப்பக்கம் ரோட்டில் காலடி எடுத்து வைத்தால் அப்பு கடையும் இன்னும் திரும்பினால் போத்தீஸ், குமரன், ஆர் எம் ஆர் என ஷாப்பிங் முடித்து அர்ச்சனாவில் சாப்பிட்டுத் திரும்பலாம்.
மிகக் கலகலப்பான ரோட்டில் இருக்கும் இந்த ஹோட்டலில் திருமண வைபவங்களும் மீட்டிங்குகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இலங்கைத் தமிழர்கள் அநேகம்பேர் அங்கேதான் தங்கி இருக்கின்றார்கள். நாங்கள் தங்கியிருந்தது நான்காம் மாடி என்பதால் டி நகர் விநாயகர் கோயிலும் நடையோர வியாபாரிகளும் ஜன்னல் வழி தென்பட்டார்கள்.
டிவி, சேர்ஸ், டீப்பாய், கட்டில் , ஜன்னல் திரைகள், மிகப்பெரிய கண்ணாடி, இண்டர்காம், ஃபேன், ஏசி, லைட்டிங்க்ஸ் எல்லாம் ஓகே ஆனா அடிக்கடி பாத்ரூம் வாஷ்பேஸின் கொஞ்சம் ஸ்டக் ஆகி விடும். ரூம் சர்வீஸ் வரும்போது சொன்னால் ரிப்பேருக்கு ஆளனுப்புவார்கள். ஆனால் இன்னும் இரு நாட்களில் அது திரும்ப ரிப்பேர் ஆகும். !
தினப்படி ரூம் க்ளீனிங் உண்டு. ரூமில் பெட்ஷீட், தலையணை உறைகள் மாற்றி துடைத்துச் செல்வார்கள். ரூம் ஆல்வேஸ் க்ளீந்தான். ஒருவர் தங்க 1200 என நினைக்கிறேன் ( நான் ஏசி ரூம் – ஏசி – 1500 போல ). இருவர் தங்கினால் இன்னும் கூட 300 அல்லது 400 கொடுக்கவேண்டும்.
பஃபேயிலும் கூட சாப்பாடு ஓகேதான். தினப்படி காலை ஃப்ரேக்ஃபாஸ்ட் ஃப்ரீ. எந்த ஹோட்டலில் தங்கினாலும் உணவருந்த காலை 10 மணிக்குள் சென்றுவிட வேண்டும். வழக்கம்போல் இட்லி சாம்பார், வடை, பொங்கல், கேட்டால் சூடாக தோசை, ப்ரெட் , பட்டர் ஜாம், பழங்கள், பழச்சாறுகள் , காஃபி எல்லாம் உண்டு. முக்கால் வாசிப்பேர் இட்லி சாம்பார் பொங்கலில் குளித்துக் கொண்டிருப்பார்கள். சிலரே ப்ரெட் பட்டர் ஜாம். பொதுவா இட்லி சாப்பிடுறவங்க அநேகம் குண்டாவும். ப்ரெட் சாப்பிடுறங்க ஸ்லிம்மாவும் ( கார்ப்பரேட் ஆளுகளாகவும் ) தென்படுறதுண்டு.
இந்த ஹோட்டலில் இண்டர்காம் ஒரு முறை பிரச்சனை செய்தது. இண்டர்காமில் கூட க்ராஸ் டாக் கேக்குமோ. ரூமில் காஃபி மட்டும் ஆர்டர் செய்து சாப்பிடுவோம் தினம் காலை. மற்றபடி இண்டர்காமை உபயோகிப்பதில்லை. ஒரு முறை இண்டர்காம் ஒலித்தது. எடுத்துக் கேட்டால் இன்னொரு முனையில் ஒரு ஆண். அவர் சம்பந்தமில்லாமல் ஏதேதோ பேச நான் உடனே என்ன வேண்டும் என மிரட்டலாகக் கேட்க ,”லஞ்ச் ரூம்ல வேணுமா” என்று கேட்க நான் வேண்டாம் என்று கூறி கட் செய்ய திரும்ப மறுநாளும் அதே ஆண்குரல் . அதே கேள்வி. தேவையில்லை சார் எனச் சொல்லி ஃபோனை வைத்தவுடன் கோபம் வந்தது. லஞ்ச் வேணும்னா ஆர்டர் செய்வோம்ல. மேலும் இந்தக் குரல் ரிஸப்ஷனில் இருந்த ஒருவரின் குரல் போல் இருந்தது.
ரிஸப்ஷனில் கம்ப்ளெயின் பண்ணலாம் என ஃபோன் செய்தால் திரும்ப இவரே எடுத்ததால் யாரிடம் சொல்வது என கோபத்துடன் கணவர் வரக் காத்திருந்தேன். அவர் வந்ததும் சொன்னதும் கொதித்துப் போய்விட்டார். உடனடியாக தட்காலில் டிக்கெட் புக் செய்து லஞ்ச் சாப்பிட்டதும் ஐந்து மணி ட்ரெயினில் ஊருக்கு - ஹைதைக்கு - அனுப்பி விட்டார்.
தனியே ரூமில் தங்கி இருக்கும் பெண்களிடம் ஹோட்டல் ஊழியர்கள் இண்டர்காமில் தொடர்பு கொண்டு தேவையில்லாமல் பேசுவது மிகத் தவறான செயல். இதை ஹோட்டலில் மேனேஜராக இருக்கும் தெரிந்த ஒரு பெண்ணின் கவனத்துக்குக் கொண்டு சென்றால் அவரோ எங்கள் ஓட்டலில் இப்படி நடந்திருக்கவே முடியாது. அப்படி இருந்தாலும் எங்கள் ஊழியர் அல்ல. வேறு யாரோ பேசி இருப்பார்கள் என சப்பைக் கட்டு கட்டிவிட்டார் !.
ஹெல்த் செக்கப்புக்காகப் போன நான் அது முடிந்தாலும் டி நகர் மற்றும் உறவினர் வீடுகளில் கணவர் அங்கே தங்கி இருக்கும்வரை சுற்றலாம் என்ற எண்ணத்தில் இருந்தேன். நம் எண்ணத்தில் மண் அள்ளிப் போட்டதுதான் அந்த ஊழியர் செய்த காரியம். இவங்க எல்லாம் எங்கேருந்துதான் கிளம்பி வருவாங்களோ. தெரியலை.
ரூமை வெகேட் செய்யும்போது அந்த ஹோட்டலில் ஃப்ளைட்டில் இருந்து இறங்கி டாக்ஸியில் வந்து ( நல்ல கத்திரி வெய்யிலில் ஃபுல் மேக்கப்புடனும், 3 ஓவர் கோட்டுகளும் ஸ்டாக்கிங்க்ஸும் அணிந்த ) இருபெண்மணிகள் ரிஸப்ஷனில் நின்றிருந்தார்கள். நான் சந்தேகப்பட்ட அந்த ஊழியர் இவர்களிடம் இண்டர்காமில் என்னென்ன பேசுவாரோ என்ற பயத்தோடே அங்கிருந்து கிளம்பினேன்.
டிஸ்கி :- ஹோட்டல் ரேட்டிங்க் - 5 ஸ்டார் *****
உணவு ரேட்டிங் - 3 ஸ்டார்.
உணவு ரேட்டிங் - 3 ஸ்டார்.
பட் ஊழியர் ரேட்டிங்க் மைனஸ் ரெண்டு ஸ்டார் ..
மனோ சாமிநாதன்12 மே, 2016 ’அன்று’ பிற்பகல் 4:21
பதிலளிநீக்குசில சமயம் இந்த மாதிரி அனுபவங்கள் அமைந்து விடுகிறது! பின் வாழ்நாள் முழுவதும் அது மறப்பதில்லை!
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan13 மே, 2016 ’அன்று’ முற்பகல் 12:15
ஆமாம் மேம் ஹ்ம்ம் :(
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan13 மே, 2016 ’அன்று’ முற்பகல் 12:15
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
பதிலளிநீக்கு
வெங்கட் நாகராஜ்13 மே, 2016 ’அன்று’ முற்பகல் 7:30
இப்படியும் சிலர்.... :(
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan4 ஜூன், 2016 ’அன்று’ முற்பகல் 12:31
ஆம் வெங்கட் சகோ :(