எங்கும் பாரதி எதிலும் பாரதி.
பாரதியின் பெயரால் ஒரு உணவுக்கூடம். மிக அழகான சுத்தமான இடம். பரிமாறப்படும் உணவுகளும் சுவை. பாரதியின் கவிதைகளோடு -- கண்ணுக்கு உணவோடு சிறிது வயிற்றுக்கும் ஈந்து விட்டு சந்தோஷமாக வந்தோம்.
சென்ற முறை சென்னை சென்றிருந்தபோது வழக்கம்போல் திருவல்லிக்கேணியில் எப்போதும் சாப்பிடும் ரத்னா கஃபேயில் சாம்பார் இட்லியில் மூழ்கி எழுந்தபின் இந்த இடம் பற்றிக் கேள்விப்பட்டோம். அக்பர் தெருவில் இருக்கும் இந்த மெஸ்ஸுக்கு மறுநாள் காலை உணவருந்த இங்கே சென்றோம்.
பாரதி மெஸ்.. இதுதான் இந்த உணவகத்தின் பெயர். திருவல்லிக்கேணியில் இருக்கிறது. பாரதியாரின் கவிதைகள் படங்கள் பரவசத்தகவல்கள், அவரின் குடும்ப புகைப்படம் எல்லாம் வைக்கப்பட்டு. அவரின் நூல், இலவச புத்தகங்கள், தள்ளுபடி விலையில் புத்தகங்கள்,இவற்றோடு அவரின் ஆய்வு நூலகம் ஒன்றை உருவாக்கும் பணியிலும் இருக்கிறார்கள்.
இரு நண்பர்கள் இணைந்து ஆரம்பித்தது , தினமலரில் பணிபுரிந்த கண்ணன் என்பவர் தன் நண்பர் அண்ணாமலையுடன் இணைந்து ஆரம்பித்தது என்றார் கல்லாவில் நின்றவர்.
நின்றவர் என்றுதானே சொன்னேன். ஆமாம் இங்கே சின்ன இடம். எனவே டேபிள்கள் போட்டு இருக்காங்க ஆனா நின்றுகொண்டேதான் சாப்பிடணும்.
சுத்தமான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டேபிள்கள், சில்வர் தண்ணீர் ஜக், டம்ளர்கள். சாப்பாட்டுத் தட்டுகள். கைகழுவும் சின்ங்க் கூட ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்தான். ! குடிக்க கேன் தண்ணீர்தான். அங்கே நிறைய தண்ணீர் கேன்கள் அடுக்கப்பட்டிருந்தன. பூரியும் இட்லியும் கேட்டோம். நேரமாகிவிட்டதால் இட்லி தீர்ந்துவிட பூரியும் தோசையும் சாப்பிட்டோம்.வயிற்றைக் கெடுக்காத சுவையான சூடான உணவு.
இங்கே உணவு தயாரிப்பவர்கள் மட்டுமல்ல. சாப்பிட்ட தட்டை எடுத்துப் போடும் ஊழியரும் கூட தலையிலிருந்து முடி விழாமலிருக்க ஒரு பாதுகாப்பு வலைத் தொப்பி -- கவசம் அணிந்திருக்கிறார்கள். !
மொத்தத்தில் பட்ஜெட்டும் இடிக்காமல் எளிமையான சுவையான அருமையான உணவு மட்டுமல்ல பாரதியாரின் வாழ்க்கைச் சரிதமும் கண்டுவர முடிந்தது. அதுவும் அவர் வாழ்ந்த திருவல்லிக்கேணியில் அவர் இருந்த வீட்டின் அருகில் என்பது நெகிழ்வுக்குரியதாக இருந்தது.
சிறிய இடம்தான். வேலைசெய்பவர்களும் அந்தப்பக்கம் பார்த்தால் சிறிய இடமாகத்தான் இருக்கிறது. ஆனால் அவர்கள் அதையும் ஒழுங்கு படுத்தி நேர்த்தியாக உபயோகிக்கும் பாங்கு அருமை.
பாரதியாரின் புத்தகங்கள், இலவச புத்தகங்கள் மேலும் அவரின் புகைப்படங்களும் இருந்தன. பாரதியாரின் மூன்றுவித தோற்றங்கள், மனைவி செல்லம்மாவுடன், குடும்பத்தினருடன், காரைக்குடி ஹிந்துமதாபிமான சங்கத்தினருடன். என்று பல்வேறு படங்களும் அழகான ஃப்ரேம்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
முண்டாசுக்கவிஞனை நம் வாழ்நாளில் நாம் யாரும் மறக்க இயலாது. தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார். அந்தத் தனி ஒரு மனிதனின் பேரிலேயே அவரின் எண்ணப்படி தனியொருவராக திருவல்லிக்கேணி மேன்ஷன்களில் வாழும் எண்ணற்ற பேச்சிலர்களுக்கு இந்த மெஸ் வரப்ப்ரசாதமாகத் திகழ்கிறது.
வளரட்டும் இது போன்ற முயற்சிகள். வாழ்க பாரதி. வளர்க அவன் புகழ். !!

ஸ்ரீராம்.20 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 8:17
பதிலளிநீக்குஒருமுறை சென்று பார்த்து விடலாம்!
பதிலளிநீக்கு
துளசி கோபால்21 ஆகஸ்ட், 2014 ’அன்று’ முற்பகல் 3:00
அட! அருமையான பதிவு. அடுத்தமுறை சென்னை வரும்போது போயிடலாம்!
பதிலளிநீக்கு
Arima Ilangkannan21 ஆகஸ்ட், 2014 ’அன்று’ முற்பகல் 4:30
பாரதியார் இல்லத்துக்குப் பலமுறை சென்றுள்ளேன். அந்த உணவகத்துக்கும் ஒருமுறை சென்று வருவேன்.- அரிமா இளங்கண்ணன், லாஸ் ஏஞ்சல்ஸ்
பதிலளிநீக்கு
Yarlpavanan21 ஆகஸ்ட், 2014 ’அன்று’ முற்பகல் 4:59
பாரதியைக் கண் முன் நிறுத்திய
சிறந்த பகிர்வு
தொடருங்கள்
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan31 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 1:34
நிச்சயமா போய்வாங்க ஸ்ரீராம்
நீங்களும்தான் துளசி
நன்றி அரிமா இளங்கண்ணன்
நன்றி யாழ்பாவண்ணன்
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan31 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 1:34
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!