எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 22 பிப்ரவரி, 2021

கோவா.

கோவா.

”சூரியன் மணல் கடற்கரை. சுகமாக ஓய்வெடுக்க கோவா.” என்ற இந்த இடுகை என்னுடைய உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும் என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)

மொத்தம் 36 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது.  அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்.


அர்வேலம் கோவில்களுக்கு மேலுள்ள பாறையில் என் கணவர் நிற்கிறார்.

 ரிட்ஸ் உணவகத்தில் மதியம் ரூபாய் 200க்குள் அசைவ சாப்பாடு கிடைக்கும். ஒரு ப்ளேட் நிறைய சோறு, பெரிய சைஸ் வறுத்த மீன் துண்டு, ப்ரான் க்ரேவி, நண்டு குருமா, நெத்திலிப் பொடி மசாலா சிப்ஸ், இன்னும் சிலமீன் வகைகள் க்ரேவி என தேங்காய் சேர்த்துச் சமைத்த இனிப்பும் காரமுமான உணவு வகைகள் செம ருசி. 

காலையும் மாலையும் ஃபிடால்கோவில் தோசை, நார்த் இந்தியன் ஃபுட் ( பனீர் பரோட்டா, தால் மாக்னி , ஆலுகோபி சப்ஜி)  சாப்பிட்டோம். 



ஃபெனி எனப்படும் முந்திரி ஒயினும், ஹெனின்கனும் கிங்ஃபிஷரும் தண்ணீர் பட்ட பாடு. சூதாட்டக் கேளிக்கைக்கெனவே கேசினோ ராயல் என்ற கப்பல்கள் இரண்டு அங்கே நிற்கின்றன. 


கேசினோ ராயலில் சாப்பிட்ட உணவு வகைகள். 


கோவாவில் இருக்கும் கடற்கரைகளில் ஒன்று.  

 தெற்கு கோவாவில், மர்கோவாவில் பலோலம், அகோண்டா, கோலா என மூன்றுக்கும் மேற்பட்ட கடற்கரைகள் உள்ளன. வடக்கு கோவாவில் கலாங்குட், \கண்டோலிம், பாகா , பணாஜி, மிராமர், டோனா பவுலா ஏழுக்கும் மேற்பட்ட கடற்கரைகள் உள்ளன. இது போக தனியார் ஹோட்டல்களின் ப்ரைவேட் பீச்சுகளும் உண்டு. 
.  
 
மங்கேஷி டெம்பிள், நாகேஷி டெம்பிள், மஹாலெக்ஷ்மி டெம்பிள், சாந்த துர்க்கா டெம்பிள், தம்தி சுர்லா மஹாதேவ் டெம்பிள், பிரம்மன் டெம்பிள் என்ற இந்துக் கோவில்களும் பாண்டவர் வழிபட்ட அர்வேலம் குகைகளும், பாம் ஜீசஸ் பசிலிக்கா, புனித பிரான்சிஸ் சேவியரின் புனித உடல் வைக்கப்பட்டுள்ள சர்ச், சே கதீட்ரல், (கிறிஸ்தவ மக்கள் அதிகமிருப்பதால் சர்ச்சுகளும் அதிகம். )  கடற்படைத் தள அருங்காட்சியகம், கோவா மாநில அருங்காட்சியகம், பிக் ஃபூட் மியூசியம் பார்க்க வேண்டியவை. 



 


\ஒரு கரையில் இருந்து மறுகரைக்குப் படகில் காரோடு பயணம். 

 

ட்ரெயினில் சாப்பிட்ட பரோட்டாவும் கோழி குருமாவும் வெகு ருசி.

1 கருத்து:

  1. கரந்தை ஜெயக்குமார்12 ஜூன், 2017 ’அன்று’ முற்பகல் 6:54
    ஒரு முறையேனும் கோவா சென்று வரவேண்டும் என்ற ஆவலைத் தங்களின் பதிவு ஏற்படுத்தி விட்டது நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு

    G.M Balasubramaniam13 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 3:32
    உங்கள் இந்தப்பதிவு நா ந் கோவா சென்றதை எழுதியதை நினைவூட்டிற்று உங்கள் பதிவில் நிறையவே செய்திகள் கோவா நினைவுகள் என்று எழுதி இருந்தேன் சுட்டி இதோ
    http://gmbat1649.blogspot.com/2012/06/blog-post_09.html

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan27 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 3:31
    KATAYAM POI VANGKA JAYAKUMAR SAGO

    AHAA THANKS BALA SIR

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...