பெஸ்ட் ஃபில்டர் காஃபி.
எத்தனையோ இடங்களில் காஃபி, டீ குடிச்சிருப்பீங்க. ஆனா நான் குடிச்ச காஃபிலயே பெஸ்ட் காஃபி எதுன்னு கடைசில சொல்லி இருக்கேன். ட்ரெயினில் ஏசியில் பயணிக்கும் போதும் வெளியூர் போகும்போதும் தங்கும் ஹோட்டல்களில் காஃபி/ஃப்ளாஸ்கில் பார்சல் காஃபி வாங்கி அருந்தியது உண்டு. முக்காவாசி கச்சடா காஃபியாதான் இருக்கும். அந்த நேரத்துக் கடமையைத் தீர்க்கன்னு. கட்டாயமா காலை, பத்து மணிக்கு, மாலைன்னு மூணு நேரம் காஃபி குடிக்காட்டா எனக்கு பயங்கர டென்ஷயாயிடும் :) :) . அதுனால எது கிடைக்குதோ இல்லையோ ரங்கமணி காஃபியை ஃப்ளாஸ்க் ஃப்ளாஸ்கா ஆர்டர் பண்ணிடுவார். :)
பொதுவா ஃபில்டர் காஃபி குடிச்சவங்களுக்கு எந்த காஃபியும் ஒத்துப் போறது கஷ்டம். ஹைவேல பூரா கும்பகோணம் டிகிரி காஃபின்னு போட்டிருப்பாங்க. எல்லாம் கன்னா பின்னான்னு சிக்கிரி போட்ட காஃபி.
மதுரையிலயும் கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷன்லயும் ஃபில்டர் காஃபி பேஷ் பேஷ். நன்னாயிருக்கும். சென்னைல புரசைவாக்கம் ஸ்கை வாக்ல கல்மனே காஃபி சூப்பரா இருக்கும். காரைக்குடி ஜெய்னிகாவிலும் இனிய காஃபி சர்ப்ரைஸ்.
சீக்கிரம் டிக்காக்ஷன் இறங்குதுன்னு காஃபிக்கு இப்ப பர்கொலேட்டர் பயன்படுத்தினாலும் ஃபில்டர்ல போடுற காஃபிக்கு ஈடு இணை இல்லை. வாரம் ஒரு முறை பீபெரி & செலக்டோ காஃபித்தூள் ஃப்ரெஷா நரசூஸ்லயும் காஃபிடேலயும் வாங்கணும் .
ஃபில்டர வாட்டிட்டு அதுல துளி சர்க்கரை போட்டுட்டு அதன் மேல் ஐஞ்சு ஸ்பூன் நரசூஸ், ஐஞ்சு ஸ்பூன் காஃபிடே, அதும் மேலே கால் டீஸ்பூன் சிக்கிரி தூவி கொதிக்கிற வெந்நீரை ஊத்தி மூடி வைக்கணும். அதே போல மூணு தரம் அஞ்சு நிமிஷத்துக்கு ஒருக்கா தண்ணி ஊத்தி டிக்காஷன் எடுத்து ஃப்ரெஷா காய்ச்சின பசும்பால்/ஆவின் பால்ல ( கொஞ்சம் தண்ணி சேர்த்துக் காய்ச்சலாம் .. இல்லாட்டி குண்டாயிடுவீங்க :) ரெண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து ஆத்திக் குடிக்கணும்
இதுக்கும் ஒரு விதிமுறை இருக்கு. முதல்ல ஒரு டம்ளர்ல சர்க்கரையை போட்டு அதுல டிக்காக்ஷன விட்டு அதும் பின்னாடி பாலை சூடா ஊத்தி நல்லா நுரை வர டபரால ஆத்தி குடிச்சா .. இந்த ருசியான காஃபி குடிக்கவே ஆத்தை விட்டே போமாட்டேள்.. வீடே சொர்க்கம்னு ஆயிடும்.
ஆனா ஒரு அக்கப்போர் நடந்து போச்சு சில வாரம் முன்னாடி.. ஆத்தைவிட அருமையான காஃபி போட்டு காஃபிக்காகவே ரூம்போட்டுத் தங்கலாமான்னு பண்ணிட்டாங்க ஒரு ஹோட்டல்காரங்க. அவங்க அருமை பெருமை எல்லாம் கடோசில சொல்லியிருக்கேன். :)
இது ஏதோ ஏர்போர்ட்ல குடிச்சதுன்னு நினைக்கிறேன்.பெங்களூரான்னு சரியா ஞாபகம் வரல.
வேறெங்கே காரைக்குடி ஜெய்னிகா தான்.
துபாய் போனபோது இண்டிகோ ஃப்ளைட்டுல.
இதுவும் சென்னை ஏர்போர்ட் காஃபிதான்.
உறவினர் ஒருவர் வீட்டில் :)
கோவை ஹோப் பகுதியில் உள்ள ஒரு ஷாப்பிங்மால் . பேர் மறந்துட்டேன்.
இதியும் ரிலேட்டிவ் வீட்லண்டி.
டிஸ்கவரிக்கு எதிரிலிருக்கும் அடையார் ஆனந்த பவன்காஃபி.
இதி நேமி ஏதும் தெலிசில்லா. ஏதும் ரயில்வே ஸ்டேஷனா இருக்கலாம்.
ஆ கள்ளன். குஜராத் போர்பந்தரில் குடிச்ச டீயையும் போட்டுட்டேன் போல. காந்தி மகான் வீட்டுக்குப் பக்கத்துல ஒரு சாய் கடைல குடிச்சது. :)
மந்திராலயத்துலேருந்து ஹைதை வர்ற வழியில ஒரு மோட்டல்ல குடிச்சது. இதுவும் டீயானு.. :(
இது சென்னை கேட்வே ஹோட்டல்ல.
இது சேலம் கேஸில் ஹோட்டல்ல.
இது நானே நான் போட்ட காஃபிதான் . நம்புங்க மக்காஸ் :)
இது நம்ம சரவணபவன்.
காஃபிடே ஹார்ட் இன்.
இது மதுரை ட்யூக் ஹோட்டல்ல.
பெங்களூரு கோபாலன் மாலில் ஜூஸ் கப்பில் அருந்திய காஃபி.
இரட்டை இதயங்கள் காஃபி டேயில். கேப்பசினோ காஃபி.
சன்ரைஸ் காஃபி. இந்த ப்ரூவும் சன்ரைஸும் ஆபத் பாந்தவர்கள். ஆனா அப்பவே நிறுத்திக்கணும். தொடர்ந்து குடிச்சோமோ காஃபியையே வெறுத்திருவோம்.
கோவாவில்ஒரு ஹோட்டலில் தங்கி இருந்த போது குடித்தது.
ஏன் அப்பல்லோவில் அட்மிட் ஆனாலும் காஃபியை விடமாட்டோமாக்கும் :)
இது பெங்களூர் ஔச்சன் மாலா இல்ல குவாலியர் ஃபோர்ட்ல எடுத்ததா தெரில.. ஹ்ம்ம்.
இதுதாங்க என்னை/எங்களை மயக்கிய அந்த அற்புத ஃபில்டர் காஃபி. பர்ஃபெக்ட் ப்ளெண்ட் எல்லா நேரமும் !!!
இத நாங்க பொள்ளாச்சில பத்து நாளா தங்கியிருந்த நிவேதா இன் ஹோட்டல்ல மூணு வேளையும் வாங்கி குடிச்சோம். இது அந்த ஹோட்டல் கீழே இருந்த கௌரிக்கிருஷ்ணா & கௌரிகங்கா ஹோட்டல் காஃபிதாங்க. பால் நல்லா இருந்தாதான் காஃபி இப்பிடி ருசிக்கும். பொள்ளாச்சில கள்ளிச் சொட்டுப் பால் போலருக்கு. இன்னும் பசுவுக்கெல்லாம் மருந்தடிச்சு ஊசி போடல போல.
பொள்ளாச்சில ஸ்கீம் ரோட்ல காந்திஜி சிலைக்குப் பக்கத்துல இருக்குது இந்த கௌரிக்கிருஷ்ணா & கௌரி கங்கா ஹோட்டல். ஹோட்டல் போக ஸ்நாக்ஸ் விக்க இதன் பின் பக்கமே இன்னொரு கௌரிக்கிருஷ்ணா & கௌரி கங்கா காஃபி ஷாப் இருக்கு.
மனோ சுவாமிநாதன் மேம் குறிச்சுக்குங்க உங்களோட அடுத்த ட்ரிப்ல இந்த ஹோட்டல்ல கட்டாயம் ருசியான ஃபில்டர் காஃபி கிடைக்குது. கூடவே வாழைக்காய் பஜ்ஜி , உருளை போண்டா, ராகி வடை, காராபூந்தி தூவின கிட்டத்தட்ட கால் லிட்டர் தயிர் ஊத்தின தயிர்வடைன்னு ( இதுல ஏதோ ஒண்ணு வாங்கி வூட்டுக்காரரோட பாதிதான் சாப்பிடணும். இல்லாட்டி குண்டாயிடுவோம் ஆமா :) அமர்க்களமா சாப்பிட்டுட்டு ஒரு ஃபில்டர் காஃபியைப் போட்டோம்னா இதுதாண்டா சொர்க்கம்னு தோணும். :)
ப்ளாஸ்குல ஒரு பார்சல் காஃபி 20 ரூதான். மூணு கப் இருக்கும். ரங்க்ஸுக்கு ஒரு கப். எனக்கு ரெண்டு கப். இப்பிடி ஒரு நாளைக்கு ஆறு கப் ஹிஹி. கிளம்புற அன்னிக்கு ஹோட்டலைக் காலிபண்ணிட்டு வீட்டுக்குப் போகணுமே இந்த மாதிரி காஃபி மூணு வேளையும் கிடைக்காதேன்னு ஒரு ஏக்கத்தையே உண்டாக்கிடுச்சு இந்த கௌரிக்கிருஷ்ணா. :) காஃபி கொடுத்த கௌரிக்கிருஷ்ணா & கௌரிகங்கா வாழ்க வாழ்கவேன்னு ஒரு பதிகமே பாடலாம். நன்றி ரங்க்ஸ் & காஃபி வள்ளலே. :)

வை.கோபாலகிருஷ்ணன்18 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 4:36
பதிலளிநீக்குஆஹா, பேஷ் .... பேஷ் .... ரொம்ப நன்னா இருக்குது.
கமெண்ட் போட்டு அனுப்புவதற்குள் ஸ்ட்ராங்க் ஃபில்டர் காஃபியை ஆத்தியபடியே என் மேலிடம் (ஆத்துக்காரி) என்னிடம் வந்தாச்சு ! :)
அதனால் நான் இப்போ ஜூட் ...........
பதிலளிநீக்கு
Kasthuri Rengan18 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 6:38
அடேயப்பா காபியில் இத்துணை நுட்பமா
பதிலளிநீக்கு
ஸ்ரீராம்.18 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 8:17
ஃபில்டர் காஃபியை பேப்பர் கப்பில் குடித்தால் சுவை இல்லை என்று தோன்றுவது எனக்கு மட்டும்தானா
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan18 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 8:19
எனக்கும்தான் பேப்பர் கப் பிடிப்பதில்லை ஸ்ரீராம். பீங்கான் கப்/சில்வர் கப் பெட்டர். டம்ளரும் ஓகே. மிச்சதெல்லாம் பிடிப்பதில்லை. பித்தளை கூட..
பதிலளிநீக்கு
sury siva18 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 10:27
https://www.youtube.com/watch?v=oKhqaETQ7Ic
ரசித்து சாப்பிடுவது தான் காபி.
எங்கள் வீட்டுக்கு வாருங்கள் ரங்ஸ் உடன்.
வளசரவாக்கம் தான் .
தஞ்சாவூர் டிகிரி காபி என்ன என்று டெஸ்ட செய்து டேஸ்ட் செய்து பாருங்கள்.
சுப்பு தாத்தா.
பதிலளிநீக்கு
Unknown18 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 10:38
i prefer COSTACOFFEE and STAR BUCKS coffee in all international cities..
பதிலளிநீக்கு
மலரன்பன்19 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 2:51
A good south Indian filter coffee is indeed refreshing. You seem to be enjoying yourself with coffee drinking. Coffee is efficacious to control low BP.
பசும்பால் என்றெழதியிருக்கிறீர்கள்.
பசுமை+பால் = பசும்பால். பசுமையான பால். அதென்ன பாலோ? தெரியாது. ஒருவேளை ஃப்ரஷ் மில்க் என்றெடுக்கலாம். அப்போதுதான் கரந்த பால்.
பசு + பால் = பசுப்பால். பசு தரும் பால். அல்லது பசு தந்த பால்.
பசுப்பாலில் போட்ட காஃபி பற்றிதானே உங்கள் பதிவு?
நன்றி.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan3 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 7:27
அஹா செம காஃபி விஜிகே சார். மாமி போடுற காஃபிக்கு ஈடு இணை உண்டா என்ன :)நானும் ஒரு நாள் வர்றேன் :)
ஆம் மது
அஹா அருமை ஒருநாள் வந்துட்டாப் போச்சு சுப்பு சார் :)
இருந்தாலும் நம்ம ஊரு ஃபில்டர் காஃபிக்கு எதுவுமே ஈடு இணை இல்லை சந்தர்ஜி
திருத்தியமைக்கு நன்றி மலரன்பன். பேச்சுவழக்கில் வீட்டில் அப்படித்தான் அனைவருமே குறிப்பிடுவார்கள்.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan3 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 7:29
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!