எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 6 பிப்ரவரி, 2021

ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.

ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.

கணவரின் பணி நிமித்தம் ஊர் சுற்றிப் பார்க்கச் சென்று பல்வேறு உயர்தர ஹோட்டல்களில் தங்க நேர்ந்ததுண்டு. ஒவ்வொரு ஹோட்டலும் ஒவ்வொரு ரகம். ( இதில் ஒரு 25 ஹோட்டல்கள் பற்றிய புகைப்படங்கள் பழைய லாப்டாப்பில் சிக்கி க்ராஷ் ஆகிவிட்டன. செல்ஃபோனில் தப்பிப் பிழைத்த ஒன்றிரண்டை இங்கே பகிர்கிறேன்.

ஒரு அழகான இளவெய்யில் காலையில் ஜெயங்கொண்டத்தைப் பார்க்கக் கிளம்பினோம். அன்னிக்கு அங்கே ஜெயாம்மா பிறந்தநாள் கொண்டாட்டம். (ஜெயங்கொண்டத்தில் ஜெயாம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்.)

சில ஹோட்டல்கள் உணவிலும் சில சுகாதாரத்திலும் பெஸ்ட். ஓவராலா க்ளீனாதான் இருக்கும்னாலும் அதன் சில கொள்கைகள், கட்டளைகள் குபீர்ச்சிரிப்பை வரவழைத்துவிடுவதுண்டு. கட்டளைகளைப் படித்துப் பாருங்கள். எல்லாம் சரிதான். ஆனால் இதை எல்லாம் ஹோட்டல்கள் வலியுறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. !. இப்ப வீடு வாடகைக்கு விடுறவுங்க கூட ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஆதார் கார்டு, ட்ரைவிங் லைசன்ஸ், கேஸ் பில் எல்லாம் கேக்குறாங்க !


ஜெயங்கொண்டம் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலைப் பார்க்கச் சென்றபோது பகலில் இங்கே தங்கினோம். பேசிப் பேசியே பொழுதைக் கழித்துவிட்டோம் . மிக அருமையான கெஸ்ட் ஹவுஸ்தான்.

இங்கே பாத்ரூம் தனியா, டாய்லெட் தனியா இருக்கு. டபிள் பெட்ரூம். டிவி, சேர்  , டேபிள், கெய்சர், நல்ல பஞ்சு மெத்தை தலையணைகள், ஏசி உண்டு.


ஆனால் அதுக்குப் போட்டிருக்கும் ரூல்ஸ்தான் செமயா கவனத்தைக் கவர்ந்தது. எனவே என்னுடைய காமிராவில் கசாமுசாவென்று சுட்ட சில ஃபோட்டோக்கள் உங்கள் பார்வைக்கு. :) 

மாலை நேரம் காஃபி வரவழைத்துக் குடித்துவிட்டுக் கிளம்பினோம்.

இது போர்டிங் மட்டும்தான். ரூம் கதவைத் திறந்தால் வெளியே முற்றம் மாதிரி பெரிய இடம். பெரிய நடை. முன்பக்கம் ரிஸப்ஷன். அங்கே ஒரு விநாயகர் அழகா கொலுவீற்றிருந்தார்.  எனவே நாலு இஸ்டார் போட்டுக்கலாம். :) 

சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸ், ஜெயங்கொண்டம். -  ****

டிஸ்கி :- இதையும் பாருங்க.

1. பிகேஆரும் இண்டர்காமும். :-

1 கருத்து:

  1. ஸ்ரீமலையப்பன்27 ஜூன், 2016 ’அன்று’ பிற்பகல் 10:46
    அருமை... நல்ல ஹோட்டல்தா போல !!!

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்28 ஜூன், 2016 ’அன்று’ முற்பகல் 8:02
    பெரும்பாலான தங்குமிடங்களில் இப்படி conditions உண்டு.....

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan28 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 10:19
    நன்றி ஸ்ரீமலையப்பன் ஸ்ரீராம்

    நன்றி வெங்கட் சகோ

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan28 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 10:19
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...