எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 17 பிப்ரவரி, 2021

சமணர் படுகையும் சாந்தி இன்னும்

 சமணர் படுகையும் சாந்தி இன்னும்

காம்பேக்ட் ஆன ரூம், மினி ஃப்ரிட்ஜ், குடிநீர் சுடவைக்க ஹாட் வாட்டர் ஜக், டபுள் ஸ்கீர்ண்ட் விண்டோஸ், பெட், சர்வீஸ் டேபிள், அலமாரி, ஸ்ப்ளிட் ஏசி, சாப்பிட அமர சேர்கள் , டீப்பாய், டேபிள், கை தொடும் தூரத்தில் ஸ்விட்சுகள், இண்டர்காம், கீழே ரெஸ்டாரெண்ட், லாண்டரி, எப்பவும் வெந்நீர், வைஃபை, எல் சிடி டிவி, என சகல வசதிகளோடும் இருக்குது ராசிபுரம் கச்சேரி தெருவில் இருக்கும் சாந்தி இன்ன் ஹோட்டல்.
ரெஸ்டாரெண்டில் நுழையாமலே லிஃப்டில் ஏறி லாட்ஜிங் அறைகளுக்கு வந்துவிடலாம்.
படுக்கை ஏதோ சமணர் படுகைபோல இருந்தாலும் வசதியாகவே இருந்தது. ஹாஹா. தலைகாணியைக் கழுத்துக்குக் கீழே இழுத்துக் கொண்டு படுக்கணும்னா துழாவித் தேடவேண்டும். :) பெட்டிங் முறை அப்பிடி.


 கை தொடும் தூரத்தில் சுவிட்சுகள், மினி ஃப்ரிட்ஜ். கூலாக எந்த பிவரேஜ் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். :) பக்கத்தில் குப்பை பாஸ்கட்.
ஹாட்வாட்டர் ஜக்குக்கு உயர்ந்த இடம் :)
பொருட்களை வைக்க கபோர்ட்.ஹாங்கர்ஸும் இருக்கு.
சுத்தமான வாஷ்பேஸின், கைத்துணி வளையம் , கண்ணாடி. நாம இல்லாட்டி தினம் ரூம் சர்வீஸ் வந்து க்ளீன் செய்றாங்க. இருந்தா கூப்பிட்டாத்தான் வர்றாங்க.
க்ளாமரூம்ஸ்.
எல்லா ஹோட்டல்களிலும் என்னைக் கவரும் காரிடார். பல்புகளின் வெளிச்சத்தில்

கம்பிகள் இல்லாத ஜன்னல். கொஞ்சம் யோசனையா இருந்தது. இரண்டாம் மாடி என்றாலும் லாக் செய்து வைத்தேன்.
இரவு டிஃபன் சிம்பிளா இட்லியும் பாதி சப்பாத்தியும்
விடிஞ்சிருச்சு ஏந்திரிக்கலாம். ரூம் சர்வீஸ்ல காஃபி ஆர்டர் செய்திருக்கு. ஆராம் சே அருந்தலாம். :)
ஒரு பார்சல் காஃபி ரெண்டு கப் வருது. பக்கத்துல இருக்க சிகரெட் ஆஷ்ட்ரே &  க்ளாஸுக்கும் நமக்கும் சம்பந்தமில்லை . :)
ஓயே சைட்வைஸ் வந்துருச்சு ஃபோட்டோ.. ஓகே ஷாந்தி இன்லதான் தங்கினோம்னு போஸ்ட் போட பேர் மறந்துரும்னு எடுத்து வைச்சது ஹிஹி.

தண்ணீர் ஜக்கை சுத்தி வைச்சிருந்தாங்க.
சரி அடுத்த நாள் டிஃபன். ஆஞ்சநேயர் கோயில் தரிசனம் எல்லாம் ஆச்சே.  சுட சுட தோசையும் நெய் வழியப் பொங்கலும் சாப்பிட்டு சொந்த ஊரைப்பார்க்க கிளம்பலாம்.
இங்கே இருக்க சாந்தி இன்ன் ஒண்ணுமேல ஒண்ணு ரூமை அடுக்கின மாதிரி இருக்கு. இட நெருக்கடி போல. ஆனா இதே நாமக்கல்ல இன்னொரு இடத்தில் இருக்கும் சாந்தி இன்ன் விசாலமா இருக்கு.ஒரு நாள் வாடகை 1200/- ரூ.

நல்ல ஹோட்டல் என்னோட ரேட்டிங்க்

நாலு ஸ்டார். :) ****


டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1.  சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு.

2.மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா..

3. பாரடைஸ் ரெஸார்ட். 

4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி) 

5.  ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.

6.  கேரளா சோழா & ஹைலாண்ட். 

7.கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :-

8.  பார்பக்யூ நேஷன் 

9. மை ப்ளேஸ்.

10.   குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :-

11. பிகேஆரும் இண்டர்காமும். :-

12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.

13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.

14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS) 

15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.

16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து. 

17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி . 

18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.

19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்‌ஷனும். 

20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.

21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.

22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி. 

23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.

24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

25. ழ வில் வலைப்பூ வடை...

26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.  

27. ஜெய்னிகா & கார்மெட். 

28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு. 

29.  சமணர் படுகையும் சாந்தி இன்னும்.

1 கருத்து:

  1. திண்டுக்கல் தனபாலன்25 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 1:49

    நல்லதொரு அறிமுகத்திற்கு நன்றி சகோதரி...
    பதிலளிநீக்கு
    Thulasidharan V Thillaiakathu25 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 2:29

    1200 க்கு நல்ல ஃபேசிலிட்டீஸ்!!! சீப்தான் போல இருக்கு அருமையா இருக்குதே..படங்கள் அழகு!
    பதிலளிநீக்கு
    வெங்கட் நாகராஜ்25 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 9:41

    நல்ல அறிமுகம். நன்றி.
    பதிலளிநீக்கு
    Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University26 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 6:00

    சமணர் படுகை என்றதும் ஆய்வுக் கண்ணோட்டத்தில் உள்ளே வந்து ஏமாந்தேன்.
    பதிலளிநீக்கு
    Thenammai Lakshmanan31 ஜனவரி, 2017 ’அன்று’ முற்பகல் 7:30

    நன்றி டிடி சகோ

    நன்றி துளசி சகோ. ஆம்

    நன்றி வெங்கட் சகோ

    அஹா ஜம்பு சார், இது பத்ரிக்கை உலகத்துல கத்துக்கிட்டது. பரபரப்பா தலைப்பு கொடுப்பதை. மன்னிக்க வேண்டுகிறேன் சார். :)
    பதிலளிநீக்கு
    Thenammai Lakshmanan31 ஜனவரி, 2017 ’அன்று’ முற்பகல் 7:30

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...