எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 13 பிப்ரவரி, 2021

வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து.

வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து.

சில மாதங்களுக்கு முன் சென்னை சென்றிருந்த போது சென்னை வடபழனி அம்பிகா எம்பயர் முன்னிருக்கும் நம்மவீடு வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்துக் கொண்டாட்டம்.

கிட்டத்தட்ட 2009 இல் முகநூலில் சந்தித்து இன்றுவரை அதே புரிந்துணர்வோடும் நட்போடும் இருக்கும் என் இரு தோழிகளைச் சந்தித்தேன். வசுமதி வாசன், கயல்விழி லெக்ஷ்மணன். இவர்கள் இருவரையும் பற்றிச் சொல்ல ஏராளமாய் இருக்கு. மிக இனிமையான தருணங்களிலும் மிக வருத்தமான தனிமையிலும் உடனிருந்தவர்கள். அநேக இடங்களுக்கு ஒன்றாகவே சென்றிருக்கிறோம். பேசிக் கொள்ளவே பேசிக் கொள்ளாமல் இருந்தாலும் திடீரென்று ஒரு நாள் பேசும்போது விட்ட இடத்தில் தொடர்வது போல ஒரு சௌஜன்யம் இருக்கும். எங்கே இருந்தாலும் எங்கள் வேவ்லெந்த் ஒன்று. எனது தன்னம்பிக்கைத் தோழிகள் என ஒரே வரியில் சொல்லி விடலாம். அன்பும் பாசமும் மிக்கவர்கள்.

சரி வசந்தபவன் விருந்துக்கு வருவோம். முதலில் ஸ்வீட் கார்ன் சூப் & கிளியர் வெஜ் சூப்..

ஸ்டார்ட்டர் பேபிகார்ன் மஞ்சூரியன் & பனீர் ஃப்ரிட்டர்ஸ்

அடுத்து வெஜ் ப்ரைட் ரைஸ்
பனீர் க்ரேவி வித் பட்டர் நாண்.
அத்தோடு பனீர் ஃப்ரைட் ரைஸ். ஹிஹி ஏன்னா நாங்க பனீர் பிரியர்கள். :)
அப்புறம் ஸ்ட்ராபெர்ரி மில்க்‌ஷேக், லஸ்ஸி, லெமனேட்.
பிறந்தநாள் விருந்தாச்சே கேக் வெட்டி முகத்தில் அப்பாம முடியுமா. ஹாஹா இந்த கேக்கை வெட்டி முகத்தில்பூசி சாப்பிட்டோம். ரொம்ப ஸ்வீட் தேன் மாதிரி. :)அட ஆமாங்க நீங்க யூகிச்சது சரிதான். பிறந்தநாள் எனக்குத்தாங்க. :)  இந்த கூகுள் வெக்கப்படுறமாதிரி ஏதும் ஸ்மைலி வைக்கக் கூடாதோ :)
அன்பு உள்ளங்களின் பாசத்தின் முன் நான் இந்த மீன்களைப் போலத் துள்ளிக் கொண்டு இருந்தேன். ஆமா வாஸ்து மீன் ஃபோட்டோ போட்டா திருஷ்டி கழிஞ்சிடுமாமே. கண்ணு வைக்காதீங்க எங்க ஃப்ரெண்ட்ஷிப் மேலே சொல்லிட்டேன் சொல்லிட்டேன் சொல்லிட்டேன் ஆமா :)

அங்கே வாசலில் வரவேற்ற வாஸ்துமீன்களின் முன் நின்று ஃபோட்டோக்கள் எடுத்து இன்னும் சில நேரம் அமர்ந்து பேசி பிரியமுடியாமல் வந்தோம். அடுத்த பிறந்தநாளில் சந்திப்போம். :) நம்பிக்கைதானே வாழ்க்கை :)

1 கருத்து:

  1. வை.கோபாலகிருஷ்ணன்26 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 1:29
    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். :)

    படங்களும் பதிவும் சூப்பர் !!

    பதிலளிநீக்கு

    விஸ்வநாத்26 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 1:32
    கேக் மேல வாழ்த்துகள் ன்னு எழுதியிருக்கே, அது கரெக்ட்டா ? வாழ்த்துக்கள் ன்னு இருக்க வேணாமா ?

    Happy birthday wishes. God bless.

    பதிலளிநீக்கு

    ஸ்ரீராம்.26 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 1:54
    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

    வை.கோபாலகிருஷ்ணன்26 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 2:55
    விஸ்வநாத் சொன்னது…

    //கேக் மேல வாழ்த்துகள் ன்னு எழுதியிருக்கே, அது கரெக்ட்டா ?//

    அது சரியே.

    //வாழ்த்துக்கள் ன்னு இருக்க வேணாமா ?//

    ’க்’ போட்டு எழுதும் இது தவறானது என ஒரு தமிழ் ஐயா சொல்லியுள்ளார்கள்.

    வாழ்த்துகள், பாராட்டுகள் என்பதே சரியான சொற்கள்

    ’க்’ போட்டு எழுதும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் என்பன தவறான சொற்கள்.

    அதுபோல ‘ஐயா’ என்பதே சரியான சொல். ‘அய்யா’ என எழுதுவதும் தவறானது.

    பதிலளிநீக்கு

    Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University26 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 4:13
    கொண்டாட்டப் பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு

    Umesh Srinivasan26 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 6:17
    பதிவு அருமை. பசியைத் தூண்டிடும் உணவுப் பரிமாறல்.

    பதிலளிநீக்கு

    கரந்தை ஜெயக்குமார்26 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 8:13
    வாழ்த்துக்கள் சகோதரியாரே

    பதிலளிநீக்கு

    G.M Balasubramaniam27 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 12:45
    பதிவர் ஒற்றுமை வாழ்க

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan28 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 2:56
    நன்றி விஜிகே சார்

    நன்றி விஸ்வநாத் . சரியா தெரில. சிலர் க் வேணும்கிறாங்க சிலர் கூடாதுங்கிறாங்க. :)

    நன்றி ஸ்ரீராம்

    நன்றி விஜிகே சார். நீங்க சொன்னா கரெக்டுதான்.

    நன்றி ஜம்பு சார்

    நன்றி உமேஷ்

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி பாலா சார் !




    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan28 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 2:56
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

காதல் வனத்தில் அபூர்வப் பூக்கள்.

 காதல் வனத்தில் அபூர்வப் பூக்கள்.  அபூர்வ ஆளுமைகள் என் காதல் வனம் நூல் வெளியீட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அவர்களைப் பற்றி முன்பே ஒ...